Header Ads



சவுதி அரேபியரின் வயிற்றுக்குள் 11 ஆண்டுகளாக இருந்த பல்ப்

சவுதியை சேர்ந்த இளைஞரின் வயிற்றுக்குள் கடந்த 11 ஆண்டுகளாக இருந்த பல்பு வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.

21 வயதான இந்த இளைஞருக்கு, சில தினங்களுக்கு முன்னர் திடீரென கடுமையான காய்ச்சல் மற்றும் குமட்டல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

அப்போது அவர் உடலை சோதனை செய்த மருத்துவர்கள், வயிற்றின் உள்ளே ஒரு குண்டு பல்ப் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அந்த இளைஞர் தனது 10வது வயதில் அந்த பல்பை முழுங்கியுள்ளார் எனவும் கடந்த 11 ஆண்டுகளாக அது வயிற்றில் இருந்ததையும் மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

பின்னர் பல மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு பின்னர் பல்ப் வெளியில் எடுக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.