Header Ads



11 தினங்களுக்குள் 8 பேருக்கு, விச ஊசி மரண தண்டனை


அமெரிக்காவின் அர்கன்சஸ் மாநிலத்தில் கைவசம் உள்ள விச ஊசிகள் காலாவதியாவதற்கு முன்னர் மரண தண்டனை கைதிகளுக்கு தண்டனை வழங்குவதை விரைவுபடுத்த மாநில நிர்வாகம் முயற்சித்து வருகிறது.

இதன்படி 11 தினங்களுக்குள் எட்டுப் பேருக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. அமெரிக்காவில் 1979 ஆம் ஆண்டு மரண தண்டைனை மீண்டும் அமுலுக்கு வந்த பின் இத்தனை குறுகிய காலத்திற்குள் அதிகம்பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றும் நிலை ஏற்பட்டுள்ளமை இதுவே முதல்முறையாகும்.

எனினும் திட்டமிட்ட காலத்திற்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ள நிலையில் ஒரு மரண தண்டனை மாத்திரமே நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் மூன்று மரண தண்டனைகள் வழங்கப்படவிருப்பதோடு நான்கு தண்டனைகள் கைதிகளின் மேன்முறையீட்டின் மூலம் நிறுத்தப்பட்டுள்ளது. 

ஐரோப்பிய சட்டங்கள் காரணமாக மரண தண்டனைக்கு பயன்படும் மருந்துகளை விற்கமுடியாத நிலை இருப்பதோடு அமெரிக்க மருந்தகங்களும் அவ்வாறாக மருந்துகளை வழங்குவதை தவிர்த்திருப்பதால் அமெரிக்க மாநிலங்கள் மரண தண்டனைக்கான விச மருந்தை பெறுவதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளன.

அர்கன்சஸ் மாநிலத்தில் கையிருப்பில் உள்ள விச மருந்து ஏப்ரல் இறுதியுடன் காலாவதியாகவுள்ளது. 

No comments

Powered by Blogger.