Header Ads



Jaffna Muslim Community International, இன் ஊடக அறிக்கை

Jaffna Muslim Community - International (JMC -I) அமைப்பானது உலகம் முழுவதும் பரந்து வாழும் இலங்கை முஸ்லீம்களை ஒருகுடையின் கீழ் ஒன்றிணைத்து, இலங்கை முஸ்லீம்கள் எதிர்நோக்கும் அரசியல் சமூக சவால்களுக்கு தீர்வுகாணும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.  

இனங்களுக்கு இடையில் நல்லிக்கணத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுதுதல், ராஜதந்திர அனுகுமுறைகள் மூலம் சர்வேதேச அரங்கில் இலங்கை முஸ்லிம்களுக்கான அடையாளத்தை உறுதிசெய்தல், போரினால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு குறிப்பாக இடம்பெயர்ந்த யாழ்ப்பாண முஸ்லீம்களை மீள்குடியேற்றுதல், அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்துதல் உள்ளிட்டவை எமது அமைப்பின் முன்னுள்ள உடனடி சவால்களாகும்.

ஐரோப்பிய நாடுகளில் வாழும் இலங்கையை, குறிப்பாக யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் பல்வேறு துறைசார் சமூக ஆர்வலர்களை உள்ளடக்கிய ஒரு ஜனநாயக கட்டமுப்புடன் நாம் செயல்பட்டு வருகிறோம். கடந்த 2016 ஆண்டு  ஜெனீவாவில்   மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஒலித்த எமது அமைப்பின் குரல் மூலம்   சர்வேதேச அரங்கொன்றில் இலங்கை முஸ்லீம்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன்  பலனாக  ஐக்கிய நாடுகள்  மனித உரிமைகள் அமைப்பின் சிறுபான்மை விவகாரங்கள் தொடர்பான பிரதிநிதி றீட்டா ஐசக், வெளியிட்ட  அறிக்கையில் ஒன்றில் தமது நிலத்தில் இருந்து விரட்டப்பட்ட   யாழ்பாண முஸ்லிம்கள் தொடர்பில் தனது  அக்கறையை வெளிப்படுத்தி இருந்தார்.

தற்போது நடைபெற்று வரும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தொடரில் பங்கேற்று இலங்கை முஸ்லீம்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து  சிறுபான்மை விவகாரங்கள் தொடர்பான பிரதிநிதி றீட்டா ஐசக்குடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியமை , காஷ்மீர் முஸ்லீம்கள், பர்மாவில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான கலந்துரையாடல்களில் அவ்வந்த நாட்டு பிரதிநிதிகளுடன் ஒன்றிணைத்து குரல் கொடுத்ததன் மூலம் இலங்கை  முஸ்லீம்களுக்கு சர்வேதேச அரங்கில் நண்பர்களை ஏற்படுத்தியமை, பிரித்தானிய தூதுவருடனான சந்திப்பு  போன்றன எமது அமைப்பின் அண்மைக்கால செயல்பாடுகளுக்கான உதாரணங்களாகும். 

அத்துடன் இலங்கையில் உள்ள முன்னணி சட்டத்தரணிகள் மற்றும் சமூக அமைப்புக்களுடனும் நாம் எமது தொடர்புகளை வலுப்படுத்தி வருகிறோம்.

இலங்கையிலும், புலம்பெயந்த நாடுகளிலும் வாழும் முஸ்லீம்கள் தமது உயர்மட்டத்தொடர்புகள் மூலமாக எமது மக்கள் எதிர்நோக்கும் சவால்களை சர்வேதேச கவனத்துக்கு கொண்டுவரவேண்டியது அவசியமாகும். இடைவிடாத செயல்பாடுகள் மூலம் எமது தனித்துவத்தை உறுதி செய்வதோடு, முஸ்லீம் அரசியல் தமைமைகளுக்கு அப்பால் இலங்கை முஸ்லிம்களுக்காக சர்வேதேச அரங்கில்  குரல் கொடுக்கும் ஒரு அமைப்பாக நாம் வேரூன்றியுள்ளோம், இந்த முயற்சிகளை   மேலும் விரிவுபடுத்த சமூக ஆர்வம் கொண்ட  எல்லா மக்களையும் எம்முடன் இணைத்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

அனீஸ் ரவூப் 
தலைவர்
aneesrauf@hotmail.com

Jaffna Muslim Community - International (JMC -I)

1 comment:

  1. May almighty Allah acknowledge all your laudable efforts and bolster your feet to stand up for all downtrodden Muslims around the globe. Aameen!

    ReplyDelete

Powered by Blogger.