Header Ads



தொழில் வழிகாட்டல் (Career Guidance) கருத்தரங்கு

நாவலபிட்டிய சென் மேரிஸ் கல்லூரியின் கத்தார் வாழ் பழைய மாணவர்களின் நிதி  அனுசரணையில், மார்ச் மாதம் 17,24,31 (2017) வெள்ளிக்கிழமை நாட்களில் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மூன்று நாள் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கில் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள், பரீட்சை எழுதி முடித்தவர்கள், உயர்தர வகுப்பு மாணவர்கள் மற்றும் துறைசார் தொழில்களில் பணிபுரிய எதிர்பார்த்திருக்கும் வாலிபர்கள் போன்றவர்கள் பங்குபற்றி முழுமையான பயனை பெற்றுக்கொள்ளலாம். Insight Institute Of Management & Technology நிறுவனத்தின்  விரிவுரையாளர்களால் நடத்தப்படும் இந்த கருத்தரங்கு  நாவலபிட்டிய SkyLark மண்டபத்தில் நடைபெறும் என்பதயும்  அறியத்தருகின்றோம். 

கருத்தரங்கு முடிவில்,குறிப்பிட்ட துறைகளில் மேற்படிப்பு மற்றும் தொழிநுட்பப்பயிற்சி /கல்வி  பெற விரும்பும், தேவையுடையயவர்களுக்கு அதற்க்கான நிதியுதவிகளை செய்வதற்கும் கத்தார் வாழ் சென் மேரிஸ் கல்லூரியின் பழைய மாணவர்கள் தயாராக உள்ளனர் என்பதயும் அறியத்தருகின்றோம். 

St Marys OBA - Qatar

No comments

Powered by Blogger.