Header Ads



'முஸ்லிம் அரசியல்வாதிகளை மதிக்காத ஜனாதிபதி, சம்பந்தனை எழுந்துசென்று வரவேற்கிறார்'

முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் செய­லாளர்  நாயகம் ஹஸன் அலி, இடை­நி­றுத்தம் செய்­யப்­பட்­டுள்ள  தவி­சாளர் பஷீர் சேகு­தாவுத் மற்றும் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும், சமூக  நலன் விரும்­பி­களும்  கைகோர்த்து முஸ்லிம் முற்­போக்கு முன்­ன­ணி­யுடன் வந்து இணைந்து கொள்­ளுங்கள்.

முஸ்லிம் சமூ­கத்தைக் காப்­ப­தற்கு நாம் சக்தி மிக்­க­வர்­க­ளாக எம்மை மா ற்றிக் கொள்வோம் என முஸ்லிம் முற்­போக்கு முன்­ன­ணியின்  செய­ல­தி­பரும்,  முன்னாள் அமைச்­ச­ரு­மான  ஏ.எச்.எம்.அஸ்வர் அறை­கூவல் விடுத்தார். 

முன்னாள் அமைச்­சரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான குமார வெல்­க­மவின் அர­சியல் பிர­வே­சத்தின் 38 ஆவது  நிறைவு தொடர்­பாக நடை­பெற்ற பாராட்டு வைபவம்  அக­ல­வத்­தையில்  நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் கலந்து  கொண்டு உரை­யாற்­று­கை­யிலே ஏ.எச்.எம்.அஸ்வர் இவ்­வாறு தெரி­வித்தார். 

அங்கு அவர்,  தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;
இன்­றைய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்­சர்­களே முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் தீர்த்து வைக்­கப்­ப­டாமை குறித்து அர­சாங்­கத்தின் மீது  அதி­ருப்தி கொண்­டுள்­ளார்கள்.

அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் வடக்கு, கிழக்கு முஸ்­லிம்­களின் காணிப் பிரச்­சினை தீர்த்து வைக்­கப்­ப­ட­வில்லை, வடக்கில் முஸ்­லிம்கள் மீது துவேசம்  காட்­டப்­ப­டு­கி­றது என்­கிறார். இதையே ரவூப் ஹக்­கீமும் கூறு­கிறார். 

இன்­னுமோர் முஸ்லிம் அர­சி­யல்­வாதி கூறு­கிறார். முஸ்லிம் அமைச்­சர்­களும், பாரா­ளு­மன்ற  உறுப்­பி­னர்­களும் மதிக்­கப்­ப­டு­வ­தில்லை.  ஜனா­தி­பதி மாளி­கையில் அவர்கள் புறக்­க­ணிக்­கப்­ப­டு­கி­றார்கள்.

ஆனால் இரா.சம்­பந்­த­னுக்கு  மாத்­தி­ரமே  மதிப்­ப­ளிக்­கப்­ப­டு­கி­றது. ஜனா­தி­ப­தி­ மா­ளி­கைக்கு  அவர் சென்றால் ஜனா­தி­பதி  எழுந்து நின்று வர­வேற்­கிறார். இதுதான் இன்­றைய முஸ்­லிம்­களின் அர­சியல் நிலைமை.

இந்த நிலையை நாம் மாற்­றி­ய­மைக்க வேண்டும். முஸ்­லிம்கள் நாம­னை­வரும் பல­மான அர­சியல் சக்­தி­யாக உரு­வாகி மஹிந்த  ராஜபக் ஷவை ஆத­ரிக்­க­வேண்டும்.

முன்னாள் ஜனா­தி­பதி  தனது காலத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு சில பிரச்­சி­னைகள் ஏற்­பட்­ட­தென்­பதை  ஏற்­றுக்­கொண்­டுள்ளார். எதிர்­கா­லத்தில் அவ்­வா­றான  சம்­ப­வங்கள் இடம்­பெற இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது என உறு­தி­ய­ளித்­துள்ளார். 

கடந்­த­கால அர­சாங்கக் காலத்தினை விட நல்லாட்சியிலே முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. பள்ளிவாசல்களுக்கு சவால்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே முஸ்லிம்களாகிய நாம் முஸ் லிம் முற்போக்கு  முன்னணியுடன் கைகோர்க்க வேண்டும் என்றார். 

ARA.Fareel



5 comments:

  1. Not only the President but nobody cares for Muslim politicians. The reason is simple that they can be easily bought with a Minister or Junior Minister post, so why do they have to respect them?

    ReplyDelete
  2. எள்லாம் சரி
    மீண்டும் தலையில் மண்னை வாரிப் போட்டுக்
    கொள்லச் சொல்கிறாறே

    ReplyDelete
  3. TNA has only one party one aim for Tamil people thatsway president respect them but Muslim site how many party,... like one MP one party, also every MP need post of Minister if not get it they will start immediately new party all are thing where will get bone for eat

    ReplyDelete
  4. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு
    ஆட்ச்சியயை கொடுப்பான் ,
    அதே போல் அதை பறிப்பவனும் அவனே !
    ஒரு கொள்ளைக்காரனை அதிகாரத்திற்கு கொண்டு வந்து ஒரு
    சமூகத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கி , ஒரு துண்டு
    முள்ளுக்காக இந்த வயதில் இத்தனை
    ஆவேம் ?

    ReplyDelete
  5. மஹிந்த முற்போக்கு முன்னணி

    ReplyDelete

Powered by Blogger.