March 15, 2017

இயக்க முரண்பாடுகள், இருப்புக்கு அச்சுறுத்தலாக அமையும்

காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்றமோதல் இப்போது நாட்டின் பல்வேறு மட்டத்திலும் பேசப்படும் ஒரு விடயமாகமாறியுள்ளது.

பகிரங்கத்திற்கு வராது தலைமறைவாக இயங்கி வரும் “இலங்கை முன்னாள் முஸ்லிம்கள்” என்ற அமைப்பு இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கை சிங்கள, ஆங்கிலமற்றும் சமூக ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் முக்கியத்துவமளித்து பிரசாரப்படுத்தப்பட்டுள்ளது.

காத்தான்குடியில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலானது முஸ்லிம்கள்மத்தியில் தீவிரவாதமும் பயங்கரவாதமும் வளர்ந்து வருவதாக கடந்த சில வருடகாலமாக போலிக் குற்றச்சாட்டுக்களை எழுப்பி முஸ்லிம் சமூகத்தின் மீது பயங்கரவாதமுத்திரை குத்த முற்பட்டுவரும் கடும்போக்கு அமைப்புக்களின் வாய்க்கு சீனி போட்டதுபோன்றே அமைந்துள்ளது.

முஸ்லிம்கள் மத்தியில் சமயத்தை பின்பற்றுவது தொடர்பாக கருத்து முரண்பாடுகள்இருந்து வருகின்றன. அண்மைக் காலம் வரை இக்கருத்து முரண்பாடுகள் மோதலாகவெடித்ததில்லை.

பல வருடங்களுக்கு முன் பேருவளையில் இடம்பெற்ற மோதலை அடுத்து சமூகத்தின்மத்தியில் சமய கருத்து முரண்பாடுகளை மையமாக வைத்து மோதல்கள்இடம்பெறவில்லை. ஒவ்வொரு குழுவினரும் தாம் விரும்பும் கொள்கைகளைமற்றவர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் முன்னெடுத்துச் சென்றனர்.

ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை காத்தான்குடியில் இடம்பெற்ற கைகலப்பு பலரைகவனத்திற்குள்ளாக்கியது. இதன் காரணமாக இதுவரை 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
“இலங்கை முன்னாள் முஸ்லிம்கள்”  என்ற அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம், தீவிரவாதம், அடிப்படைவாதம் மற்றும் மதவெறுப்புணர்வு ஆகியவற்றை நேரடியாகவும், மறைமுகமாகவும் போதிக்கும்அமைப்புக்கள், தனி நபர்கள் குறித்தும் அவ்வாறான அமைப்புக்களுக்கு கிடைக்கும், வெளிநாட்டு, உள்நாட்டு பண உதவிகள் குறித்தும் அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பினரும்தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுள்ளது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் ஒரு சிறு குழுவின்செயற்பாட்டினால் முழு முஸ்லிம் சமூகத்தையும் நெருக்கடிக்குள் தள்ளவைத்துள்ளது. முழு முஸ்லிம் இயக்கங்கள் குறித்தும் கண்காணிப்புகள் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. 100 வீத முஸ்லிம்கள் வாழுகின்ற ஜம்மியத்துல் உலமா மற்றும் பள்ளிவாசல்கள்சம்மேளனத்தின் நெறிப்படுத்தலில் இயங்கும் காத்தான்குடிக்கு இச்சம்பவங்கள் ஒருபெரும் களங்கத்தையும் அவப்பெயரையும் ஏற்படுத்தியுள்ளது.

காத்தான்குடியின் சமய, அரசியல், சிவில் தலைமைத்துவங்கள் தலையிட்டு இந்தமோதல் தொடர இடமளிக்காது கருத்து முரண்பாடுகளை பேசித் தீர்த்து வைப்பதற்கு உடன்நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தி பிரச்சினைகளை உருவாக்குவதற்குபார்த்துக்கொண்டிருக்கும் சக்திகளுக்கு இந்த நிகழ்வுகளின் மூலம் நாமே கதவை திறந்துகொடுத்தது போன்றே அமையும்.

நாட்டில் அமைதியாக வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களைஉருவாக்குவதற்கு இடமளிக்காது முஸ்லிம் தஃவா அமைப்புக்கள் நிதானமாகவும், தூரநோக்குடனும் செயற்பட வேண்டியது காலத்தின் தேவை.

12 கருத்துரைகள்:

முஸ்லிம்கள் அதிகமாக செறிந்து வாழும் கிழக்கு மாகாணங்களில் மழைக்கு முளைத்த காலாண் க லாய் இஸ்லாத்தினை விட்டும் வரம்பு மீறிய ஷீயாக்கள் , தரீக்காக்கள் , அப்து ரவூபின் கூளியாட்கள் அனைவரையும் இனங்கண்டு இஸ்லாத்தின் ஒரேகூரையின் கீழ் கொண்டுவர இலங்கை தவ்ஹீத் ஜமாஅ த்தும் அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா உம் கருத்து வேயறுபாடுகளை களைந்து ஒன்று பட்டு செயட்படவேண்டும். ஆனால் ஜம்யிய்யத்துல் உலமாவின் பங்களிப்பு ஆமை வேயகத்திலே செல்கி ன்றது . எதட் க்கெடுத்தாலும் தவ் ஹீத் ஜமாஅத்தின் மீது விரல் நீட்டுவதனை நிறுத்திவிட்டு எம்மதமும் சம்மதமே என்றல்லாமல் இஸ்லாத்தினை விட்டும் வரம்பு மீறிய கூட்ட்டங்களை இனங்கண்டு நல் வழி ப்படுத்த வேண்டும். ஆங்காங்கேய் முளைத்திருக்கும் கபுரடிகளையும் மௌலானாக்களையும் இருட்டறைகளுக்குள் இருந்து கும்பிட்டுக்கொண்டிருக்கும் இலங்கை முன்னாள் முஸ்லிம்கள் அமைப்பு யார் என்பதனை இனங்கண்டு வெளிச்சத்திட்கு கொண்டுவரவேண்டும். இல்லாவிட்டால் ஜானாசார அடிக்கடி சொல்வது போல் பரம்பரை முஸ்லிம்களோடு எங்களுக்கு எந்தக் கோபமும் இல்லை. இவர்கள்தான் முஸ்லிம்களை அந்நியர்களிடம் காட்டிக்கொடுக்கும் முனாஃபிக்குகள். இவர்கள் விடயத்தில் முஸ்லீம் சகோரதாரர்கள் மிக ஜாக்கிரதையாய் நடந்து கொள்ள வேண்டும் .

Everyone Muslim should come out of their so called Jamaths and be united against the umma..

சிறு கொள்கை வேறுபாட்டினை காரணமாக வைத்து அடித்து, வெட்டிக், குத்திக் கொள்ளும் பொழுது, தங்களை இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் என்று அறிமுகம் செய்யும் முன்னாள் முஸ்லிம்கள் அமைப்பினர் அவ்வளவு இலகுவில் பகிரங்கமாக வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இவர்கள் இஸ்லாமிய சமூகத்திற்குள் இருந்து வெளியே சென்றவர்களாக இருப்பதால், இவர்களை இனவாதிகள் மிக இலகுவாக தமது தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.

முஸ்லிம்கள் தங்களது வன்முறை சார்ந்த சிந்தனைகளை மீள்பரிசீலனை செய்வதுடன், இந்த முன்னாள் முஸ்லிம்கள் விவகாரத்தை உரிய முறையில் அணுகி அவர்களை மீண்டும் இஸ்லாத்தில் இணைப்பதற்கான நடைமுறைகளை தலைமைகள் மேற்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் மேலும் பலர் இஸ்லாத்தை விட்டு வெளியேற திறக்கப்பட்ட வாசலாக இந்த அமைப்பு எதிர்காலத்தில் மாறிவிடும் அபாயம் உள்ளது.

நாம் மட்டும்தான் சரி, நமக்குத்தான் எல்லா அறிவும் இருக்கின்றது என்று நினைப்பதும், அடிப்படைகல்வி அறிவு இல்லாதவர்கள் உலமாக்கள் ஆவதும், எடுத்ததற்கு எல்லாம் யூத, கிறிஸ்தவ, அமெரிக்கா என்று குற்றம் சொல்லி சொல்லியே காலத்தை கடத்துவதும் தொடர்ந்தால், அது மேலும் மேலும் முன்னாள் முஸ்லிம்களைத்தான் உருவாக்கும்.

இப்படி ஒரு அமைப்பு ஒரு வருடத்திற்கு முன்னர் இருக்கவில்லை. இப்பொழுது அதிர்ச்சியாக உள்ளது. நாம் அறியாத ஹதீஸ்களை இவர்கள் அறிந்து வைத்துக் கொண்டு கேள்வி கேட்கின்றார்கள், குர் ஆனில் கேள்விகேட்டு உலமாக்கள் வழங்கும் விளக்கத்தை, குர் ஆனை வைத்தே பிழையான விளக்கம் என்று பேசுகின்றார்கள். இப்போழுது எல்லோருக்கும் சமூக ஊடகங்கள், இணையங்கள் உள்ளன, ஆகவே யாரையும் தடுத்து நிறுத்தி சமாளிக்க முடியாது.

இதை விட கவலை, எனது ஒரு நல்ல நண்பர் முன்னாள் முஸ்லிம் என்று ஆகிவிட்டார்.

முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டிய தருணம். மார்க்கம் என்றால் அதை வைத்து வருமானம் பார்க்கும் அனைவரையும்புறக்கணிக்க வேண்டும்.

முன்னாள் முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு ஒவ்வொருவரும் இஸ்லாத்தை விட்டு ஓடுவதற்கு காரணம், மார்க்கத்தை கையில் எடுத்துக்கொண்டு தலைகால் புரியாமல் அடாவடித்தனம் பண்ணியவர்கள் தான். சில வருடங்களுக்கு முன்னர் சர்மிளா செய்யத் என்னும் ஒரு பெண் எழுத்தாளர் எதோ ஒரு கருத்தை சொந்த கருத்தாக சொன்னதற்காக கம்பெடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரன் என்று அவரிற்கு எதிராக மார்க்கம் பேசினார்கள். அப்பொழுதே நான் சொன்னேன், அது அவரது தனிப்பட்ட கருத்து, அவரது ஈமானோடு சம்மந்தப்பட்டது, மார்க்கத்தை கையில் எடுத்த்து ஒரு தனிப்பட்ட பெண்ணை குரிவைக்காதீர்கள் என்று, யாரும் கேட்கவில்லை. தனி மனித சுதந்திரம் என்று ஒன்றை மதிக்கவே இல்லை. இன்றைக்கு முன்னாள் முஸ்லிம்கள் என்று வந்து நிற்கும் பொழுது தலையை சொரிந்துவிட்டு நிற்கின்றோம்.

Every Muslim need to ask them self, am I satisfying Allah or my group. If they are satisfying Allah, they will see the result in judgment day. On the other hand if they satisfying their group they will see the results in judgment day.

May allah guide us straight parth, whom you favoured.

இது காலங்காலமாக நடக்கின்ற ஒன்றுதான்..இதென்ன முன்னால் முஸ்லிம் அமைப்பு...முர்த்தத்துகளா? உங்களுடைய வேலைய பாருங்க ...

You are a stupid if you follow any Islamic groups. Stupids always says we are the real Muslims but they are not really. They are stupids.

QURAN
- [ ] (நபியே! அவர்களிடம்) “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள்.
(அல்குர்ஆன்: 3:64
மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: “இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” என்று கூறுவான்.
(அல்குர்ஆன்: 46:15
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.
(அல்குர்ஆன்: 3:103)
எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.
(அல்குர்ஆன்: 3:139)
நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை; அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.
(அல்குர்ஆன்: 6:159
எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்?)
(அல்குர்ஆன்: 41:33
நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார்.
(அல்குர்ஆன்: 41:34)
இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்ராஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள் எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன்.
(அல்குர்ஆன்: 22:78)
‎ مِنَ الَّذِيْنَ فَرَّقُوْا دِيْنَهُمْ وَكَانُوْا شِيَعًا ‌ؕ كُلُّ حِزْبٍۢ بِمَا لَدَيْهِمْ فَرِحُوْنَ‏ 
எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்.
(அல்குர்ஆன்: 30:32)

Read and think above Quran.

Amji Haniya and Ashif Haniffa ,

Well said ! Absolutely true . whoever they are , the
"Former Muslims or Old Muslims" have found time for
their old Muslim buddies . Muslim identity crisis in
the modern Srilanka today is the result of TOO MANY
ISLAMIC ORGANIZATIONS TRYING TO FOOL THE MUSLIM
SOCIETY BY DRAGGING THEM IN TOO MANY DIRECTIONS IN
THE NAME OF THE RELIGION SIMPLY FOR WORLDLY BENEFIT.
They are all being simply tolerated by THE POLITICS
of the country because RELIGIOUS VOTE IS VERY
PRECIOUS. Aluthgama incident and the elections
soon after , is a good example . THERE SHOULD BE A
MUSLIM CIVIL GROUP TO PUBLICLY WARN THE MUSLIMS TO
BE ON ALERT OF BEING DRAGGED INTO UNNECESSARY
TROUBLES BY THEIR OWN COMMUNITY GROUPS . It is a
shameful situation but still real .

Don't want to bother the so-called "former Muslims". If it's true, then they'd already dug their own grave.
When their final breath imminent, they'll realize their abysmal sin.

Earn your VIRTUES OR SINS by living in this world ,
respecting and loving each other as HUMAN BEINGS
FIRST AND FOREMOST ! AND REMEMBER , THAT IS THE
PURPOSE OF ALL RELIGIONS ! Some fools are trying
to take few RELIGIOUS VERSES from here and there
and display THEY KNOW THE BEST ! They know
nothing about this world and as such they know
nothing about THE WORLD HEREAFTER . Dying is a
pain for all creatures and no need to reminding
it over and over again as if it is a miraculous
invention of ONLY ONE RELIGION .

Post a Comment