Header Ads



டிரம்புக்கு திமிர், ஜேர்மன் ஜனாதிபதியை அசிங்கப்படுத்தினார்

அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலை, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அசிங்கப்படுத்திய சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஏஞ்சலா மெர்க்கல், வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்பை சந்தித்துப் பேசினார்.

இரு நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும்போது கைகுலுக்குவது வழக்கமான நடைமுறை.

அந்த வகையில் கைகுலுக்கிக் கொள்ளலாமா என மெர்க்கல் கேட்டபோது, டிரம்ப் அதை கேட்டும் கண்டுகொள்ளாமல் இருந்து அசிங்கப்படுத்தினார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது ஏஞ்சலா மெர்க்கலை, டிரம்ப் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து கொண்டனர் என்பது நினைவுக்கூரத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதியான டிரம்ப், கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை சந்தித்தபோது, தானே முன்வந்து கைகுலுக்கிய நிலையில், மெர்க்கலுடன் அவர் நடந்து கொண்ட விதம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

No comments

Powered by Blogger.