Header Ads



ஆபத்தான தொழில்களில் பணியாற்றும், தனியார் துறையினருக்கு, கட்டாய ஆயுள் காப்புறுதி

ஆபத்தான தொழில்களில் பணியாற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு, ஆயுள் காப்புறுதியைக் கட்டாயமாக்கப்படுவதற்கான சட்டம், விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஊழியர் இறக்கும் போது செலுத்தப்படும் நட்டஈட்டுத் தொகையை, இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கும் தொழிற்சாலை தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் பல கொண்டுவரப்படவுள்ளன. 

கடந்த சில தினங்களில் கைத்தொழிற்சாலைகளிலும் வேலைத்தளங்களிலும் ஊழியர்கள் சிலர் உயிரிழந்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய துரிதமான நடவடிக்கைகளைக் கண்டறிவதற்காக, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது,  இது குறித்து ஆராயப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.