Header Ads



பாவற்காய் விதைகள், புற்றுநோய் செல்களை அழிக்கும் - பேராதனை பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

பாவற்காய் விதைகளுக்கு புற்றுநோய் செல்களை அழிக்கும் வல்லமை இருப்பதாக பேராதனை பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பாவற்காய் விதைகளில் புற்றுநோய் செல்களை அழித்து முற்றாக புற்றுநோயை இல்லாதொழிக்கும் இரசாயன இருப்பதாக பரிசோதனையில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவப் பீடத்தின் பேராசிரியர் ஜயந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பாவற்காய் விதைகளை கொண்டு சுமார் ஒரு வருடம் நடத்திய பரிசோதனையில், விதைகளில் இருக்கும் எல்ஃபா ஸ்டியரிக் பஃடி எசிட் என்ற இரசாயனத்தின் மூலம் புற்றுநோயை குணமாக்கலாம் என்பது கண்டறியப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.

கிருமிநாசனிகள் பயன்படுத்தப்படாத பாவற்காய் விதைகளை பயன்படுத்தி இந்த பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டது.

பல விலங்குகளுக்கு இந்த பரிசோதனை நடத்தப்பட்டதுடன், எல்ஃபா ஸ்டியரிக் பஃடி எசிட் என்ற இரசாயனத்திற்கு புற்றுநோயை குணப்படுத்தும் வல்லமை இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்து என்ற வகையில் பாவற்காய் மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. எனினும் அதன் விதையை எவரும் உணவுக்காக எடுத்துக்கொள்வதில்லை.

பாவற்காய் முழுமையான மருத்துவ குணம் கொண்டது. இரத்தத்தில் இருக்கும் சீனியின் அளவை குறைக்க இயலுமை காவற்காய்க்கு உள்ளது.

புற்றுநோயை குணப்படுத்தும் பாவற்காய் விதையில் தயாரிக்கப்பட்டுள்ள வில்லைகள் (கேப்சூல்) மகரகம புற்றுநோய் வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மருந்து பயன்பாடு வெற்றியளித்துள்ளதால், இதனை அறிமுகப்படுத்துவதற்காக பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திடம் ஒப்படைக்க உள்ளதாகவும் பேராசிரியர் ஜயந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.