Header Ads



எமது சமூகத்தில்,கவலைக்குரிய விடயம்..!!

Mohamed Rifkhan  (NALEEMI)

இன்று பல்வேறு மடத்தனமான விடயங்கள் பகிரங்கமாக சமூகத்தில் வருவதற்கு பல காரணிகள் இருப்பினும் எனது கண்ணோட்டத்தில் இரண்டு  காரணிகள் முக்கியமானவை:

1.தகுதியுடையவர்கள் களத்தில் முன்வராமை.

2.தகுதியுடையவர்களை சமூகம் பல் வேறு பிரிவிணைகள் காரணமாக பயன்படுத்தாமை. 

முதலாவது காரணியை ஒவ்வொரு தகுதியுடையவர்களுக்கும் தமது சுய விசாரணைக்கு விட்டு விட்டு. இரண்டாவது காரணி மேல் நாம் இந்த காலகட்டத்தில் அதிக கவனம் செலுத்துவது இன்றியமையாதது.

எமது சமூகத்தில் நிறைய தகுதியுடையவர்கள் தமது சொந்த முயற்சியில் பல காரியங்களில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கான சரியான களத்தை சமூகம் கொடுப்பதில்லை. இவ்வாறான பலர் நம்மை விட்டு செல்லும் போது சில தினம் போதிய அளவு பயன்படுத்த முடியவில்லை என்ற ஒரு அங்கலாய்ப்புடன் அது முடிந்து விடுகிறது. எதிர்காலத்தில் இவற்றை தவிர்க்க காத்திரமான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை.

இதற்கும் மேலாக கவலைக்குரிய விடயம் எமது சமூகத்தில் மிகவும் தகுதியானவர்கள் இருக்க தகுதியற்றவர்கள் அல்லது தகுதியில் மிகவும் குறைந்தவர்கள் தமது குழுவை சார்ந்தவர் என்ற ஒரே காரணத்தால் தலைக்கு மேல் தூக்கிவைப்பதுடன் .தகுதியானவர்களை தமது குழுவை சாராத ஒரே காரணத்திற்காக மட்டம் தட்டுவதுவும் புறக்கணிப்பதுவும்.

இந்த மிகவும் தாழ்ந்த மனப்பான்மை விட்டு வெளிவராதவரை சமூகம் சீர் பெறுவது வெறும் கனவாகவே இருக்கும்.

#சமூகம் தகுதிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்..!

No comments

Powered by Blogger.