Header Ads



புத்தளம் வைத்தியசாலைக்கு முன், மதுபான களஞ்சியசாலை திறக்க முயற்சி

-Mohamed Muhsi-

புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மதுபான களஞ்சியசாலையொன்றை திறப்பதற்கு எமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்து புத்தளம் பெரிய பள்ளி ஊடாக புத்தளம் பிரதேச செயலாளருக்கு ஆட்சேபனை மனுவொன்றை சமர்ப்பிக்க பெரிய பள்ளி நிர்வாகத்துக்கு வழங்கியுள்ளோம்.

ஏற்கனவே கல்விக் காரியாலயம் மற்றும் நீதி மன்றம் ஆகியவற்றுக்கு அருகில் ஒரு மதுபானசாலை, சேனாதிலக வாடி வீட்டுக்கு அருகில் இன்னுமொரு மதுபானசாலை. இதற்கிடையில் மூன்றாவதாக மதுபான களஞ்சியசாலை திறக்கப்பட முஸ்தீபு. சமுதாயம் சீரழிந்து குட்டிச் சுவராகி போய் விடும் பேரவலம்.

ஜனாதிபதி போதையற்ற சமூகம் பற்றி பேசி அதை உருவாக்க முனைகையில் இந்த தீச் செயலுக்கு முற்றுப் புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கும் படி கோரியுள்ளோம்.

இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை பெரிய பள்ளி இது தொடர்பில் பொது மக்களிடமிருந்து தமது ஆட்சேபனைகளை எழுத்து மூலம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. They must stage demonstration against this degenerated move. Minister Rishad must act immediately to nip this sinister proposal in the bud.

    ReplyDelete

Powered by Blogger.