Header Ads



அமெரிக்க நலன்களுக்கு, சிறிலங்கா முக்கியமானது - டொனால்ட் ட்ரம்ப் அரசு


உறுதியான ஜனநாயகத்தைக் கொண்ட சிறிலங்கா, அமெரிக்காவின்  தேசிய நலன்களுக்கு முக்கியமானது என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற ஜனநாயக ஒத்துழைப்பு அமைப்பின் தலைவருமான பீற்றர் ரொஸ்கம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அண்மையில் டொனால்ட் ட்ரம்ப் அரசு பதவியேற்றதையடுத்து, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட நாடாளுமன்ற ஜனநாயக ஒத்துழைப்பு அமைப்பின் குழுவுக்குத் தலைமையேற்றிருந்த, பீற்றர் ரொஸ்கம், Washington Examiner ஊடகத்துக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவரது செவ்வியின் முழு வடிவம் வருமாறு-

கேள்வி – சிறிலங்காவைப் பற்றி ?

பதில்     – தீவிரவாத அமைப்பான  விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த – உள்நாட்டுப் போரை வெற்றிகரமாக முன்னெடுத்த தலைவரே, சிறிலங்காவில் இப்போது சவாலாக இருக்கிறார். ஆனால் அவர்களின் தலைவர் பின்னர் எதேச்சாதிகாரி ஆனார். ஊழல் செய்த மோசமான காட்சிகள் அரங்கேறின. எனவே மரபுவழி அரசியல் எதிரிகள் -ஒன்றிணைந்து அவரை அகற்றியுள்ளனர்.

இப்போது  30 ஆண்டு உள்நாட்டுப்போர், எதேச்சாதிகார தலைமைத்துவம், ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள்  போரில் போரில் கொல்லப்பட்டமை, ஆகியவற்றுக்குப் பின்னர், இரண்டு அரசியல் கட்சிகளும், முன்நோக்கிச் செல்ல முயற்சிக்கின்றன. அவர்களால் அதனைச் செய்ய முடியும். இரண்டு தரப்புக்குமே சில நுட்பமான தலைமைத்துவம் கிடைத்துள்ளது என்பதில் எனக்குத் தெளிவாக தெரிகிறது.

அதிகாரப் பகிர்வை உள்ளடக்கிய அரசியலமைப்பு ஒன்றை அவர்கள் மீள வரையத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு வேறு வழி இல்லை. ஏனென்றால், அவர்கள் எங்கிருந்தார்களோ அங்கு மீண்டும் திரும்ப முயன்றால், எனது கணிப்பின் படி, உடனடி அரசியல் வன்முறைகளுக்கு அடித்தளமிடும் என்று கூற முடியாவிடினும், பல பத்தாண்டுகளுக்கு முன்னர், உள்நாட்டுப் போருக்கு இட்டுச் சென்ற  அதே நிலைமைகளை நிச்சயம் உருவாக்கும்.

கேள்வி – சிறிலங்கா தொடர்பாக அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையின் முக்கியத்துவம் என்ன?

பதில்     – 4 மில்லியன் மக்கள் வசிக்கும் சிறிலங்கா, 5 மணித்தியால விமானப்பயணத் தூரத்துக்குள் உள்ளது. சிறிலங்காவின் கரையோரத்தில் இருந்து 12 மைல் தொலைவுக்குள்,  அசாதாரணமான அளவு உலக வர்த்தகம் கடந்து செல்கிறது.

புவிசார் அரசியல் ரீதியாக, இலங்கையர்கள் மீது எல்லா வகையான கடன்களையும் சீனா சுமத்தியுள்ளது. அவர்கள் வெள்ளை யானை வகை உட்கட்டமைப்புத் திட்டங்கள் பலவற்றை அமைத்திருக்கிறார்கள்.

ஒரு உறுதியான சிறிலங்கா, மேற்கு நோக்கிய சிறிலங்கா, உறுதியான ஜனநாயகத்தைக் கொண்ட சிறிலங்கா, அமெரிக்காவின்  தேசிய நலன்களுக்கு முக்கியமானது.

கேள்வி –  சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நாடாளுமன்ற ஜனநாயக ஒத்துழைப்பு எப்படி இணைந்தது?

பதில்     – இதனை அடைந்தமைக்கு நாம் அவர்களைப் பாராட்டுகிறோம். பொருளாதார ரீதியாக சிறிலங்கா பாதிக்கப்பட்டுள்ளது.அவர்கள் சீனாவுக்கு 20018இல்  கடன் மீளளிப்புச் செய்ய வேண்டிய தொகை மிக முக்கியமானது.   அவர்கள் பல வழிகளில் கடன் உறவுகளை மீள்கட்டமைப்புச் செய்துள்ளனர். அந்தச் சவால்களை அவர்கள் நன்றாக அறிந்துள்ளனர்.

இந்தச் சுமையை அவர்களின் முந்தைய தலைவரே சுமத்தினார். சீனர்கள் வந்து, அவரது தொகுதியின் மத்தியில் ஒரு பெரிய மாநாட்டு மண்டபத்தை கட்டினர்.

அவர்கள் சீனா குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். அதேநேரத்தில் அருகாமையில் உள்ள சீனா மிக முக்கியத்துவம் வாய்ந்தது. சீனா வழங்கும் தூண்டுதல் குறுகிய கால பொருளாதார ஊக்கத்தை அளிக்கிறது. ஆனால், அதிகம் சமநிலையான திசையில் நகர வேண்டும் என்று உறுதி தலைமைத்துவ மட்டத்தில் உள்ளது.

No comments

Powered by Blogger.