Header Ads



பாராளுமன்றில் உறுப்பினர்களில் 94 பேர் O/L பரீட்சையில் சித்தியடையாதவர்கள்

பாராளுமன்றத்தில் ஆகக்குறைந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கூட சித்தியடையாத உறுப்பினர்கள் பலர் இருப்பதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் எம்.ஒ.ஏ டி சொய்சா ஆதாரத்தினை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களில் 94 பேர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கூட சித்தியடையாதவர்கள் என அவர் தெரிவித்தார்.

இது தொடர்பிலான ஆதாரத்தினை நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை பாராளுமன்றில், 25 உறுப்பினர்கள் மாத்திரமே பட்டதாரிகள் என்றும், 94 பேர் க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் கூட சித்தியடையவில்லை.

மக்களால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கௌரவத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

ஆனால் இதனை விடுத்து அவர்கள் பாராளுமன்றில் குழப்பம் விளைவித்து, அநாகரீகமாக நடந்து கொள்வதாகவும், இதனால் பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும் அவர் விசனம் தெரிவித்திருந்தார்.

No comments

Powered by Blogger.