Header Ads



டுபாயில் 8 கோடிக்கு ஏலம்போன செல்போன் நம்பர்


துபாயில் செல்போன் நம்பரை 8 கோடிக்கு ஏலம் எடுத்தவரின் செயல் ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் பல்விந்தர் சஹானி. இவர் பல வருடங்களுக்கு முன்பே துபாயில் செட்டிலாகி விட்டார்.

இவர், கடந்த 1993ம் ஆண்டு குவைத்தில் ஆர்எஸ்ஜி சொத்து மேலாண்மை நிறுவனத்தை தொடங்கினார். இது தவிர கார் டயர், உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனங்களையும் இந்தியா, அரபு நாடுகளில் நடத்தி வருகிறார்.

இவர் செல்போன் மற்றும் கார் ஏலத்தில் ஆர்வமாக எப்போதும் பங்கேற்ப்பார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் துபாயில் ஒரு தொலை தொடர்ப்பு நிறுவனம் நடத்திய செல்போன் பேன்சி நம்பர் ஏலத்தில் பல்விந்தர் கலந்து கொண்டார்.

அதில், 0588888888 என்ற செல்போன் நம்பரை 4.5 மில்லியன் திர்காம் பணத்திற்கு, அதாவது 8 கோடியே 16 லட்சத்துக்கு பல்விந்தர் வாங்கி அசத்தினார்.

அங்கு ஏலம் விடப்பட்ட 50 நம்பர்களில் இவர் வாங்கிய நம்பரின் தொகை தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.