March 06, 2017

ஈவிரக்கமற்ற 6 பேர் கொண்ட கும்பலினால், படுகொலையுண்ட மன்சூர் பர்சாத் (அயல்வீட்டுக்காரர் சாட்சியம்)

-மூத்த ஊடகவியலாளர் எம்.  ஜே.எம். தாஜுதீன்-

அவுஸ்திரேலியாவின் தென் பகுதி நகரான அடிலேய்ட் பிரதேசத்தில் நிகழ்ந்த கொலைச் சம்பவத்தில்  நீர்கொழும்பு பலகத்துறையைச் சேர்ந்த மன்சூர் பர்சாத் என்ற 39 வயது வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேலியா ஊடகமொன்று  பின்வருமாறு செய்தி வெளியிட்டிருக்கிறது. 

வட அடிலேய்ட் பென்பீல்ட் கார்டன் தோட்டத்தில் வீடொன்றில் கண்டெடுக்கப்பட்ட இறந்த ஒருவரது சடலத்துடன் தொடர்புடைய கொலை தொடர்பில் மூவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இத்துயரச்சம்பவம் தொடர்பில் வட அடிலேய்ட் பென்பீல்ட் கார்டன் தோட்டத்தில் வசிக்கும் நபர் ஒருவர் , குப்புறமாக தனது அயல் பண்ணை வீடொன்றில் இரத்த வெள்ளத்தில்  விழுந்து சடலமாக காட்சியளித்த சோக நிகழ்வை விவரித்தார். 

பீட்டர் கிப்ஸ் என்ற அயலவர் கொலை செய்யப்பட தனது அயவலரான 39 வயது நபர் மீதான கொலைத்தாக்குதல் தொடர்பில் தொடர்ந்தும் பேர் அதிர்வில் இருக்கிறார்.

இச்சம்பவம் தொடர்பில் இறந்த நபருடன் அவரது வீட்டில் வசித்து வந்த சக நண்பன் கூறியதாவது “6 பேர் அடங்கிய கும்பல் தாக்குவதற்காக துரத்தி வந்துகொண்டிருந்த போது தனது உயிரைக் காப்பாற்றுவதற்காக முற்கம்பி வேலியிநூடகாக தப்பியோட வேண்டியிருந்து” . 

வழமையாக மிகவும் அமைதி சூழல்கொண்ட  பென்பீல்ட் கார்டன் பிரதேசத்தில் இடம்பெற்ற ஈவிரக்கமற்ற இம்மரணம் சம்பந்தமாக பிரதான குற்ற புலனாய்வு குழு விசாரணை நடாத்தி வரும் அதேவேளை கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 

அயலவரான பீட்டர் கிப்ஸ் சம்பவம் தொடர்பில் விபரிக்கையில் 

“கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் நான் எனது வீட்டில் சிறிது ஓய்வெடுத்துக்கொண்டிருந்தபோது எனது  பக்கத்து வளவுக்கு வெளியே சுமார் 200 மீட்டர் தொலைவில் பாரிய வாக்குவாதத்துடன் கூடிய சண்டைச் சத்தம் எனக்கு கேட்டது. பக்கத்து வளவுக்கு முன் பகுதியில் ஒரு நபர் உடல் முழுவதும் இரத்தம் தோய்ந்த நிலையில் கடும் வருத்தத்துடன் கூக்குரலிட்டவாறு மிகவும் பலவீனமாக மயங்கி விழுவதைக் கண்டேன். 

அதே நேரத்தில் முற்கம்பியில் தொங்கியவாறு ஒருவர் மிகவும் பரிதாபமாக “யாராவது வந்து உதவி செய்யுங்க, ஐயோ ஏன்ட கூட்டாளிய கொண்டுட்டாங்க”.  என்று பாரிய அழுகைச் சத்தத்துடன் சப்தமிட்ட வண்னமிருந்தார். உடனே என்ன நடந்துள்ளது என்பதை அறிய குறித்த வீட்டுக்கு சென்று பார்ப்பதற்கு தீர்மானித்து வீட்டு சமலறையை அடைந்தபோது அங்கு கண்ட காட்சி என்னை மிகவும் அச்சமடையச் செய்தது. 

பாதியளவு சாப்பிடப்பட்ட உணவு மேசையில் காணப்பட்ட அதேவேளை அடுப்பு தொடர்ந்து பற்றி எரிந்து கொண்டிருந்தது. 

யாராவது இங்கு இருக்கிறாங்களா என்று பார்ப்பதற்கு சமையலறையை விட்டு வெளியே வந்தபோது பிரதான வாயில் வழியே ஒருவர் இரத்த வெள்ளத்தில் குப்புறமாக விழுந்து இருந்ததைக் கண்டேன்.  ஒரே ஒரு பார்வையுடன் அந்த இடத்தை விட்டு உடனே வெளியேறினேன். இரத்த வெள்ளத்தைக் கண்டவுடன் உயிர் பிழைக்க வழியில்லை என்பதை  உறுதியாக புரிந்து கொண்டேன்.”

உடனே அதிர்ச்சியில் குழப்பமடைந்த திரு கிப்ஸ் மீண்டும் காயமடைந்திருந்த வீட்டு சகபாடியக் கண்டு நடந்ததைக் கேட்டறிந்துகொண்டார். 

எட்டு வருடங்களாக வசித்து வரும் அயலவர்கள் வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் அங்கு நிகழ்ந்த அமைதியின்மை இக்கொலையுடன் தொடர்பிருக்க வாய்ப்பிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

கொல்லப்பட்டவர் அங்கு இரண்டு வார காலம் மட்டுமே வசித்து வந்ததாகவும் அவர் எவராலும் மிகவும் அறியப்படாதவரகவே இருந்து வந்தார் எனவும் கூறப்படுகிறது. 

கொலைச் சம்பவம் தொடர்பில் சரியாக எந்த நேரத்தில் கொலை நிகழ்ந்தது, எவ்வாறான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன, மற்றும் கொலைக்கான காரணங்கள் போன்ற தகவல்களை பொலிசார் இதுவரை வெளியிடவில்லை. 

இக்கொலை சம்பந்தமாக 34 வயது , 44 வயது , மற்றும் 48 வயது சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டு கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இம்மூவருக்கும் பொலிஸ் பிணை மறுக்கப்பட்டதுடன்  எலிசபத் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றில் அவர்கள் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.  

 பொலீசார் சம்பவம் தொடர்பான தகவல்களை குற்றத் தடுப்பாளர்களுக்கு வழங்குமாறு கோரியுள்ளனர். 

0 கருத்துரைகள்:

Post a Comment