Header Ads



VIP வாகனங்களுக்கும், அபராதம் விதிக்கவேண்டும் - டிலான்

பிரபு பாதுகாப்புப் பிரிவு வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்திரிகை ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது நேற்று(30) அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், 

பிரபு பாதுகாப்புப் பிரிவு வாகனங்கள் வேகமாக செல்லுமானால் அவற்றின் மீதும் அபராதம் விதிக்கப்பட வேண்டும். தற்போது நாட்டில் போர் இடம்பெறவில்லை.

இதனால் பாதுகாப்பு வாகனங்கள் தேவையில்லை. அயலவருடன் வேலிச் சண்டை ஏற்பட்டு தாக்கினாலே தவிர வேறு பயங்கரவாத் தாக்குதல்கள் கிடையாது. அயலவருடனான வீட்டுப் பிரச்சினையிலிருந்து தப்பிக்க வண்டியில் செல்ல வேண்டியதில்லை.

சட்ட மீறல்களில் ஈடுபடும் அனைத்து தரப்பினர் மீதும் அபராதம் விதிக்கப்பட வேண்டியது அவசியமானது எனத் தெரிவித்தார்.

1 comment:

  1. There are RETIRED SENIOR POLICE MEN IN THE HIGHER RANKS
    who break all traffic rules and escape fines showing
    their OLD POLICE ID ! This must be stopped . The police
    let them escape because they were police men but
    breaking traffic rules are dangerous to the general
    public equally . WITHDRAW RETIRED POLICE HIGH RANKERS
    IDs to stop abuse.

    ReplyDelete

Powered by Blogger.