Header Ads



பொதுபல சேனா மட்டக்களப்பிலிருந்து திரும்பியதற்கு, சம்பந்தனே காரணம்

-Tw-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் பொலிஸ்மா அதிபருக்கு விடுத்த அவசர வேண்டுகோளுக்கு இணங்கவே ஞானசார தேரர் தலைமையிலான பொதுபலசேனா அமைப்புக்களின் குழுவினரை கொழும்புக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வரவிருந்த ஞானசார தேரர் தலைமையிலான பொதுபலசேனா அமைப்புக்களின் குழுவினரை இடை மறித்து இன்று காலை (04) திரும்பி அனுப்பியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மங்களராமய தேரின் அடாவடித்தனத்தால் நேற்று (03) மட்டக்களப்பு நகரம் பதற்ற நிலையில் இருந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை (03) சம்பந்தன் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து பொலிஸ்மா அதிபர் பொதுபலசேனா அமைப்பினரை நேற்று மாலை பூணாணையுடன் வழிமறித்து புணாணை ஸ்ரீ பஞ்சமா விகாரையில் சந்திப்பை மேற்கொண்டு மட்டக்களப்பிற்கான பயணத்தை பொலிஸார் இடை நிறுத்தினர்.

இதனால் தடைப்பட்டிருந்த பொது மக்களின் போக்குவரத்தும் இன்று (04) வழமைக்குத் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

12 comments:

  1. முஸ்லீம் அரசியல் ஆசாமிகள் பாடம் படிப்பார்களா

    ReplyDelete
  2. அவர்கள் இன்னும் தூக்கத்தில் உள்ளார்கள் ,ஏதாவது அசம்பாவிதம் நடந்து முடிந்து இருந்தாள் முகம்வெளிப்பட்டு இருக்கும்,

    ReplyDelete
    Replies
    1. Brother. Change your profile picture. It's not a good motivation. we should respect to Allah. You just imagine about ur profile picture for your name is correct??

      It's a self explanatory. Brother.

      Delete
  3. தற்போது எல்லோரும் வீர வசனம் பேசுகின்றனர்.

    நீங்கள் போலீஸாரைக் கேட்டும் அவர்கள் உள்ளே வந்திருந்தால் நாங்கள் பொலீஸாரிடம் கேட்கவில்லை என்று சொல்வீர்கள் தானே...

    ReplyDelete
  4. அடுத்தவண்ட பீங்கானில் தன்னுடைய மாங்காயைப்போட்டு பிணைய மாட்டார்கள் எமது முஸ்லிம் பெயர்தாங்கி தலைவர்கள்

    ReplyDelete
  5. கடந்த அரசியல் சுனாமியில் இன மத பேதமின்றி மக்கள் இணைந்தனர்.மட்டக்களப்பில் சமுகட்டத்தலைவர்கள் இணையவேண்டும்.வெற்றியை வாழ வைப்பது நமது கடமை.முஸ்லிம் சமுக தலைவர்கள் அரசியல்வாதிகளை எதிர்பார்க்கத்தேவையில்லை.அவர்கள் கடைசியாக ஒடி வந்தவர்கள்.அரசியல் பி ளைப்புக்காக

    ReplyDelete
  6. I have one big Question to SLMC chief "why you cannot act like Mr. Samband?" if are you are not capable to handle Muslim affairs please leave the chair.

    ReplyDelete
  7. wELL DONE MR. sAMPANTHAN aYYAH

    ReplyDelete
  8. பொது பலசேனாவை மட்டக்களப்பிற்கு அனுப்பியதும் தமிழ் கூத்தமைப்புதான்.

    அவர்களை வாபஸ் செய்ததும், சம்பந்தனின் கூட்டந்தான்.

    ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை பறிப்பதற்கு சம்பந்தனுக்கு விருப்பம்.

    அரசும் கூடவே தூண்டி, வேடிக்கை பார்க்கிறது.

    ReplyDelete
  9. @ Sampanthan tna.. I think it's a
    Possibility.
    Because Gnanasara went to Norway. Stayed with ex LTTE executive members.
    Travel to India often etc.. raise suspicions at times.

    ReplyDelete

Powered by Blogger.