Header Ads



சவூதியில் உள்ள, இலங்கையர்களின் கவனத்திற்கு..!

சவூதி அரேபியாவில் 2017 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நேற்று -21- சமர்ப்பிக்கப்பட்டது. இதில் பல  சலுகைகள் சவூதி பிரஜைகளுக்கு அறிவிக்கப்பட்டாலும், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு புதிய வருமான வரி அல்லாத புதிய வரி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:

> 1- 2017ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும்  மாதம் ஒன்றுக்கு 100 சவூதி றியால்கள் வீதம் அரசாங்க வரியாக செலுத்த வேண்டும் அவர்களின் ஸ்பொன்சரில் உள்ளவர்கள்  ஒவ்வொருவருக்கும் தலா 100 சவூதி றியால்கள் வீதம் செலுத்த வேண்டும். உதாரணமாக, உங்களுடன் உங்கள் மனைவியும் இரண்டு பிள்ளைகளும் இருந்தால் மாதம்  ஒன்றுக்கு  மொத்தமாக 400 சவுதி றியால்கள் வரியாக செலுத்த வேண்டும்.

> 2- 2018ம் ஆண்டு முதல் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான மாத வரி 100 சவூதி றியால்களிலிருந்து 400 சவூதிறியால்களாக  அதிகரிக்கப்படும். அதேபோல், உங்களின் ஸ்பொன்சரில் உள்ளவர்களுக்கும் தலா 400 சவூதி றியால்கள் வீதம் செலுத்த வேண்டும். 

> அதேபோல் உங்கள் நிறுவனமும் அரசாங்கதுக்கு தலா 200 சவூதி றியால்கள் வீதம் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வரியாக செலுத்த வேண்டும். 

> உங்கள் நிறுவனத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களைவிட சவூதி தொழிலாளர்கள் அதிகமாக இருந்தால் 400 சவூதி றியால்களில் இருந்து 300 றியால்களாக குறைவடையும்.

>  3- 2019ம் ஆண்டு முதல் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான மாத வரி 400 சவூதி றியால்களில் இருந்து 600 சவூதி றியால்களாக  அதிகரிக்கப்படும்.

> அதேபோல் உங்கள் நிறுவனம் தலா 300 சவூதி றியால்கள் வீதம் அரசாங்க வரியாக செலுத்த வேண்டும்.

> வெளிநாட்டு தொழிலாளர்களைவிட சவூதி தொழிலாளர்கள் அதிகமாக இருந்தால் அந்தத் தொகை 500 சவூதி றியால்களாக குறைவடையும்.

> 4- 2020ம் ஆண்டு முதல் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான வரி 600 சவூதி றியால்களில் இருந்து 800 சவூதி றியால்களாக அதிகரிக்கப்படும். 

> அதேபோல் உங்கள் நிறுவனமும் அரசாங்க வரியாக தலா 500 சவூதி றியால்கள் செலுத்த வேண்டும்.

> அதேபோல், வெளிநாட்டு தொழிலாளர்களை விட சவூதி தொழிலாளர்கள் அதிகமாக இருந்தால் 800 சவூதி றியால்களில் இருந்து 700 றியால்களாக குறைவடையும்.

> இந்த சட்டமானது வீட்டுப்பணிப் பெண்கள், வீட்டு வாகன சாரதிகள் மற்றும் துப்பரவு தொழிலாளர்களுக்கு பொருந்ததாது.

 றஸ்மி
ஜித்தா -  சவூதி அரேபியா

5 comments:

  1. அப்போ சவுதிநாட்டவர்களில் அதிகமானவர்கள் 2050களில் ஸ்ரீலங்காவிற்கு வேலைக்கு வருவார்கள்! இதற்கெல்லாம் காரணம் அமெரிக்க கள்ளர்கள்கள்!

    ReplyDelete
  2. بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
    106:1
    106:1 لِاِيْلٰفِ قُرَيْشٍۙ‏ 
    106:1. குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி,
    106:2
    106:2 اٖلٰفِهِمْ رِحْلَةَ الشِّتَآءِ وَالصَّيْفِ‌ۚ‏ 
    106:2. மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக-
    106:3
    106:3 فَلْيَـعْبُدُوْا رَبَّ هٰذَا الْبَيْتِۙ‏ 
    106:3. இவ்வீட்டின் (கஃபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக.
    106:4
    106:4 الَّذِىْۤ اَطْعَمَهُمْ مِّنْ جُوْعٍ   ۙ وَّاٰمَنَهُمْ مِّنْ خَوْفٍ‏ 
    106:4. அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.

    ReplyDelete
  3. Refer this link to get clear Details.
    http://www.arabnews.com/node/1028596/saudi-arabia

    ReplyDelete
  4. LET us be thankful to this land, through which most of us earned our needs for decades and send money back to srilanka and established ours and relatives life with developments.

    Now it is the needy time of the government of saudi... So it is our part also to be helpful in their recovery.

    May Allah Bless a land which offered jobs and services to many millions around the world.. May Allah Protect its economy back to strong position.

    May Allah Protect this land from any kind of protest and division that may bring harm to people, economy and our religion.

    May Allah Make the leaders strong with the DEEN and be protected from the evil and cunning plots of kuffar to distance the people from the government.

    Our final goal is not the wealth and joyful life in this land BUT it is the strong adherence to the TRUE form of ISLAM. So May Allah protect the Islamic environment and Islamic feeling and Islamic Action of people on this land to continue.

    ReplyDelete
  5. Dear jaffa muslim Do not publish news which are not verified. This issue is still under reveiw.And get proper translation before u publish

    ReplyDelete

Powered by Blogger.