Header Ads



தெரு நாடகம் நடத்திய பிக்குகளை, தண்டிக்க வேண்டும் - மனோ கொதிப்பு

மட்டக்களப்புக்கு சென்று தெருநாடகம் நடத்திய பெரும்பான்மையின மதத்தை சேர்ந்த தேரர்கள் உடன் தண்டிக்கப்பட வேண்டும் என தேசிய சகவாழ்வு நல்லிணக்கம் மற்றும் அரச கருமங்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

மேலும் பொலிஸ் மா அதிபர் யாரை 'சேர்' என அழைத்தார் என தேடிப்பார்த்து அரசியலாக்க முனையும் கூட்டு எதிரணியினரும் மக்கள் விடுதலை முன்னனியும் தேரர்களின் அடாவடித்தனம் தொடர்பில் மொளனமாக இருப்பது பெரும் வேதனைக்குறியது எனவும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பில் தேரர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் அமைச்சரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஆவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பொதுபல சேனா அமைப்பின் செயளாளரான ஞானசார தேரர் மற்றும் மங்களராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்தின தேரர் உள்ளிட்டோர் மட்டக்களப்பில் நேற்று  மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் பிரயோகித்த வார்த்தை பிரயோகங்கள் என்பன மக்கள் மத்தியில் பெரும் பதற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. 

வேற்றுமை உணர்வை தூண்டும் வகையிலான சட்டமுறையற்ற ஒன்றுகூடலை தடுக்கும் நீதிமன்ற தடையுத்தரவு மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த  நிலையில் பிக்குகள் இவ்வாறு முறையற்ற விதத்தில் நடந்துக்கொண்டுள்ளமை மிகவும் கண்டிக்கத்தக்க விடயமாகும். 

இந்நிலையில் குறித்த நேரத்தில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் சுமித் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வந்ததுடன்  குறித்த அராஜகத்தனமான செயற்பாடுகளுக்கெதிராக நீதிமன்ற தடையுத்தரவினை பெற்றுக்கொடுத்தோம். 

அதுமட்டுமல்லாது ஞானசார தேரரை மட்டக்களப்பு நகரத்துக்கு வரவிடாமலும் தடுத்திருந்தோம். 

அதன்பின்னர்; கலகம் அடக்கும் பிரிவு பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் குறித்த இடத்துக்கு விரைந்திருந்தனர். 

இனவாத கருத்துக்களை பரப்பி மக்கள் மத்தியில் ஒரு விதமான குழப்பகரமான சூழலை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இவ்வாறான பிக்குகளின் செயற்பாடுகளை உடன் நிறுத்த வேண்டும்.

மட்டக்களப்புக்கு சென்று தெருநாடகம் போடும் இவ்வாறான பிக்குகளின் நோக்கம் என்ன என்பது தெரியாமலுள்ளது. ஆனால் தமிழ் மக்கள் பிக்குகளின் செயற்பாடுகளை கண்டு மிகவும் அச்சத்தில் உள்ளனர். 

No comments

Powered by Blogger.