Header Ads



'இன நல்­லி­ணக்­கம் பற்றி பேசவேண்டாம், என சீனியர் அமைச்­சர்கள் கூறி­னார்கள்'

இலங்­கையில் கடந்த எந்த அர­சாங்­கமும் செய்­யாத இன நல்­லி­ணக்க வேலைத்­திட்­டத்தை இன்­றைய அர­சாங்கம் கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றது என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டார நாயக்க குமா­ர­துங்க மட்­டக்­க­ளப்பில் தெரி­வித்தார்.

 மாண­வர்­களின் தேசிய நல்­லி­ணக்க செயற்­றிட்­ட­மான 'சகோ­தர பாசல' எனும் செயற்­திட்ட முகாம் மட்­டக்­க­ளப்பில் நேற்று நடை­பெற்­ற­போது அதன் நிறைவு வைப­வத்தில் கலந்­து­ரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

மட்­டக்­க­ளப்பு சத்­துருக்கொண்டான் சர்­வோ­தய நிலைய வளா­கத்தில் நடை­பெற்ற இந்த நிகழ்ச்­சித்­திட்­டத்தில் தொடர்ந்து உரை­யாற்­றிய அவர், தமிழ், சிங்­கள முஸ்லிம் மக்­க­ளி­டையே நல்­லி­ணக்கம் இல்­லா­ததன் காரணம் தான் கடந்த முப்­பது வருட யுத்­த­மாகும் என்­பதை நாம் அடை­யாளம் கண்டோம். 

யுத்­தத்­துக்கு முகம் கொடுத்­தவர், அந்த பிரச்­சி­னை­க­ளுடன் வாழ்ந்­தவர் பல்வேறு சவால்­க­ளுக்கு முகம் கொடுத்­தவர் என்ற ரீதியில் இந்த இன ரீதி­யான பிரச்­சி­னைக்­கான கார­ணத்தை அறிந்து அதற்கு தீர்வு காண­வேண்­டு­மென நினைத்தேன்.

11 வரு­டங்கள் நீங்கள் ஜனா­தி­ப­தி­யாக இருந்­தீர்கள் தானே நீங்கள் என்ன செய்­தீர்கள் என நீங்கள் என்­னிடம் கேட்­கலாம்.  

நான் அதி­கா­ரத்­துக்கு வந்­த­வு­ட­னயே சமா­­தா­னத்­துக்­கான வேலைத்­திட்டம் தொடர்பில் பேசினேன் அப்­போது சில சிரேஷ்ட அமைச்­சர்கள் அவ்­வாறு இன நல்­லி­ணக்­கத்தைப் பற்றி பேச வேண்டாம் உங்­க­ளுக்கு வாக்கு குறைந்து விடும் என்று கூறி­னார்கள். 

ஆனால் நான் வடக்­கி­லி­ருந்து தெற்கு ,கிழக்­கி­லி­ருந்து மேற்கு வரைக்கும் இன நல்லிணக்கத்தையும் சமாதானத்தையுமே பேசினேன். மக்கள் எனக்கு அதன் மூலம் பெருமளவிளான ஆதரவைத் தந்தார்கள் என தெரிவித்தார்.

1 comment:

  1. What about BBS, Singhala Raavaya, Singhale...etc....?

    ReplyDelete

Powered by Blogger.