Header Ads



SLTJ யை பாராட்டாதவர்கள், முஸ்லிம் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் அல்ல..!

ஐரோப்பாவுக்கு அடிமைப்பட்டு முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்த நல்லாட்சி அரசு முயற்சி செய்யும் போது இதனை தடுக்க முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், ஜமிய்யதுல் உலமாவும், ஏனைய சமய சார்பு இயக்கங்களும் மௌனமாக இருக்கும் போது ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சினையின் பாரதூரத்தை புரிந்து இதற்கெதிராக கிழக்கில் பாரிய ஆர்ப்பாட்டத்தை செய்தமை பாராட்டுக்குரியதாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி அக்கட்சி மேலும் தெரிவித்ததாவது,

கொழும்பில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிம் திருமண சட்டத்தில் அரசாங்கம் கைவைப்பதை கண்டித்து பாரிய ஆர்ப்பாட்டம் செய்த போது அதனை வெளிப்படையாக ஆதரித்தது உலமா கட்சியே. அதே போல் இவ்வாறு அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்ய ஏன் கிழக்கு முஸ்லிம்களால் முடியாதா எனவும் உலமா கட்சி கேட்டிருந்தது. 

இதனை ஏற்றுக்கொண்ட ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கிழக்கில் சம்மாந்துறையில் பாரிய, அமைதியான ஆர்ப்பாட்டத்தை செய்தமைக்காக நாம் எமது பாராட்டை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறோம். 

முஸ்லிம்களின் இந்த ஜனநாயக எதிர்ப்பை அரசாங்கம் கருத்திக்கொண்டு முஸ்லிம் திருமண சட்டத்தில் கை வைப்பத்தை முற்றாக நிறுத்த வேண்டும் என உலமா கட்சி அரசை வலியுறுத்துகிறது.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் தேவைப்பட்டால் அதை முஸ்லிம்களின் சமய தலைவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அரசு இதில் தலையிடுவது முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை எதிர்காலத்தில் இல்லாமல் செய்ய அரசு எடுக்கும் வெள்ளோட்ட முயற்சியாகவே நாம் பார்க்கிறோம். கடந்த அரசில் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது அதனை எதிர்த்த ஒரேயொரு முஸ்லிம் கட்சி உலமா கட்சியே. எமது எதிர்ப்பை ஏற்று அம்முயற்சியை கைவிட்டமைக்காக மஹிந்தவுக்கு நாம் இந்த இடத்தில் நன்றி கூறுகிறோம்.

மீண்டும் இந்த அரசு ஐரோப்பிய நாடுகளின் சதிக்கு பணிந்து முஸ்லிம் சட்டத்தில் கை வைக்க முயற்சி செய்கிறது.

இதற்கெதிராக பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பேசாத நிலையில் உலமா சபையும் திருத்தத்துக்கான உப குழுவை அரசு நியமித்ததை வரவேற்ற தவறு காரணமாகவுமே இதில் உலமா கட்சியும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தும் தலையிட வேண்டியேற்பட்டது. 

கொழும்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னரே ஜமி இய்யத்துல் உலமா முஸ்லிம் தனியார் சட்டத்திருத்த முயட்சியை கண்டித்து அண்மையில் அறிக்கை விட்டிருந்தது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமா அத்தின் ஆர்ப்பாட்டம் இனவாதத்தை தோற்றுவிக்கும் என சில முஸ்லிம்கள் சொல்கிறார்கள். அப்படியென்றால் இது வரை இனவாதம் இல்லாமலா நாடும் அரசும் இருக்கிறது? 

யாரும் சிங்கள மக்களுக்கு உரிமை வழங்க வேண்டாம் என ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. முஸ்லிம்கள் உரிமையில் கை வைக்காதே என்றுதான் சொல்கிறோம்.  இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் அரசுக்கெதிரானவையே தவிர எந்த இனத்துக்கும் எதிரானதல்ல என்பதை மக்கள் அறிவர்.  

அத்துடன் சமய ரீதியிலான ஜமாஅத்துக்கள் அனைத்தும் வாய் மூடி மௌனமாக இருக்கும் போது சமீப கால வரலாற்றைக்கொண்ட ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் சமூக அக்கறையை பாராட்டாதவர் முஸ்லிம் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவராக மாட்டார்.

ஆகவே ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் முஸ்லிம் தனியார் சட்டத்திருத்த சதிகளுக்கெதிரான ஜனநாயக போராட்டத்துக்கு ஏனைய முஸ்லிம்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.

19 comments:

  1. Great job by SLTJ. It is our fundamental rights to expose our opinion to the government. If we are just being at home calmly, then who will solve this issue. Why our peoples are not thinking of it. This is the way we lose our HALAL rights. Because we did not show our reaction to the government. Wake up guys, do not just be at home and talk. Come to the road and show your opinion to the government. We are living in a democratic country, not in the kingdom. we have our all rights to expose our opinion to the government as SLTJ done. if you are not capable for that, then just be quiet, do not blame others. whoever having strength they will gather and come to the road to show their oppose and opinion to save our rights.

    ReplyDelete
  2. BBS ai paarattazawarhal singalawarhal allaya appo.

    ReplyDelete


  3. You should understand first the problem is not the protest. We should protest in a decent menner in order to get our rights. But it should not in the way of how the non-Muslims followed(legacy). We have to make a new trend of protest evidenced by Quran and sunnah.

    Thus, we should not represent any groups while protesting for our community based problem. Because it might be neglected. So, we should unite each and every Muslims in order to fight against injustice.

    So, there is no use to blame why they protested (SLTJ). But we should be aware in the future to wake up & unite everyone to fight against injustice.

    Past is past. Leave the nonsense what the SLTJ done and welcome to unite everyone under Quran and sunnah to fight or protest in a decent menner against Injustice.

    We are Muslims. We should not behave like stupidest. So, do not blame the protest but show them what the errornious have done while the protest by SLTJ or others.

    And SLTJ and other groups, you are kindly requested to DESTROY your groups and welcomed to unite as Muslims under Quran and sunnah then you continue as its is how you did your social services. Don't use Islam to your hypocrites.

    Your people's have any answer? In which groups prophet Jesus will join when he comes to rule the world in the future? So why this groups cheating the innocent people's.

    I pray for Allah to destroy every groups in order to unite them under Quran and sunnah As Muslims.

    Allah Kareem.

    ReplyDelete
  4. SLTJ தௌஹீத்கரான்கள் பைத்தியக்காரங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியானால் தவகீத் ஜமாத்தை தப்பாக விமர்சிக்கின்ற உங்களை போன்றவர்கள் , முட்டாள்களா?????????????

      Delete
  5. Mr. Mubarak, we all know that you encourage SLTJ for your political gains. It will be a day dream for you b'cos we, the real Muslims and all the Muslims groups are under one umbrella (ACJU) except SLTJ

    ReplyDelete
  6. நீங்கள் முதலாவதாக உங்கள் கட்சியின் பெயரை மாற்றிக்கொள்ளும்.இந்த பெயரை வைத்துக்கொண்டு அரசியல் செய்ய வேண்டாம்.ஏனெனில் உலமா என்பது நமது நாட்டில் ஒரு கன்னியமான ஒரு கூட்டத்துக்கு சொல்லப்படும் நாமம்.அந்த பெயரை வைத்து நீர் சாக்கடை அரசியலுக்கு பயன் படுத்த வேண்டாம்.அதனால் காலப்போக்கில் இந்தபெயர் உங்களது செய்கையால் நாற்றமாகி விடும்.பெயரை மாற்றி வைத்து நீர் உமது அரசியலை செய்யும் உமக்கு அதற்கான உரிமை உள்ளது.

    ReplyDelete
  7. Muslim Theewira waadihal enra andasththay ilangayil petru thanda punniyawaankhalay paaraattaamal kaariththuppawa solringa.

    ReplyDelete
  8. முஸ்லீம்களின் நல்லதுக்காக தவ்கீத் ஜமாத் தைரியமாக செய்ததை எவரும் பாராட்டா விட்டாலும் பரவா இல்லை. அவரகள் செய்த நல்லதை பிழை என கூறி இனவாதிகளுடன் துனைபோகாமல் இருங்கள்.

    ReplyDelete
  9. SLTJ மற்றும் அதன் தாய் அமைப்பான TNTJ ஆகியவை மார்க்க ரீதியாக, அவர்களை சாராத அனைத்து முஸ்லிம்களையும் முஷ்ரிக் என்று ஆக்கி விட்டார்கள். இந்த நிலையில், அவர்கள் எதற்காக முஷ்ரிக் களுக்காக போராட வேண்டும்? எதற்காக முஷ்ரிக்களின் ஆதரவு தமக்கு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டும்?

    எல்லா முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ளும் ஹதீஸ்களை நிராகரித்து, முஸ்லிம்களை முஷ்ரிக் ஆக்கிய பின்னர், இவர்கள் தமது அமைப்பிற்காக மட்டும் போராடட்டும், மற்ற முஸ்லிம்களுக்காக போராடுவதாக சிங்கள மக்கள் மத்தியில் ஒரு மாயையை உருவாக்கி, இனவாதத் தீயை மூட்டி, அதில் குளிர் காயத் தேவையில்லை.

    ReplyDelete
  10. Jaffnamuslim sltj யை திட்டினால் approve பன்ரீங்க தப்லீகஸியத்தை திட்டினால் not published u??
    இப்படி பக்கசார்பாக இருக்கவேனாம்
    இஸ்லாமிய அடிப்படையில் மனசாட்சியோட செயல்படவும்
    இது கண்டிக்கந்தக்கது
    Pls. மரணிக்கும்போது ஒரு முஸ்லிமாகத்தான் மரணிக்கவேண்டும் not like or become a thabliqi

    ReplyDelete
  11. இந்த இந்த முட்டால் SLTJயின் வேலையை சரியென்று சொல்வதாயின் உன்மையிலே இவன்கள் அடிமுட்டால்களாகத்தான் இருப்பர்.

    ReplyDelete
  12. "ULAMA SAFAI" yil irukka vendiyavarhal ulamaakkal thaanea.!!!SLTJ yil angaththuvam vahippor end Madrasavil part an Petru veliyaavinaarhal.... Pawam... Ida Ella therindha innum Thala illaadha SLTJ itkup pin pohum muttaaalhal...

    ReplyDelete
  13. Sltj & Ulama katchi Rendume bublicity paittiyangal Enda nerattil enna solhirom enna seihirom endru tanakke teriyadu

    Iwarhalukku wakkalattu waanga oru Kuruttu medawihal koottam eppoduma Alanjikondu irukku!!!!

    ReplyDelete
  14. தவ்கீத் ஜமாத் செய்தது தவறு என்பதை மக்கள் மத்ததியில் சொல்லித்தரிபவர்கள் சுய நலம் கொண்ட தபல்லீக் கார்ர்களே என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.வெருமனே உங்கள் பகுதிகளில் இருக்கும் 40 நாள் போன அமீர்சாப்கள் சொல்வதுதான் சரி என நினைத்து வாழாமல் , சுயமாக சிந்தித்துஎது உண்மை எது பொய் என விளங்கி வாழ வேண்டும்.முஸலீம் சமூக மத்தியில் SLTJ செய்யும் ஒவ்வொன்ரையும் தப்பாக விமர்சித்து குழப்பத்தை உண்டாக்காதீர்கள் pls thapleeksians

    ReplyDelete
  15. Azees azaath
    நானும் ஓர் தப்லீக் காரன்தான். நான்கூட SLTJ ஆர்ப்பாட்டம் செய்ததை 100% குறை காணவில்லை. என்னிடம் எந்த தப்லீக்காரர்களும் இதை குறை கூறி திரியவுமில்லை. அடுத்து தப்லீக்காரர்கள் சுய நலம் பிடித்தவர்களும் இல்லை. நீங்கள் அவதூறை சுமத்தி உள்ளீர். இதற்காக நீங்கள் மன்னிப்பு கேட்க வில்லை என்றால் மறுமையில் இது குறித்து இன்சா அல்லாஹ் கேள்வி கணக்கு கேட்கப்படுவீர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.