Header Ads



மக்களை அறிவூட்டுவதற்காக IS இல் 32 முஸ்லிம்கள் இணைந்ததாக கூறினேன் - விஜேதாஸ

அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து 

ஒவ்வொரு தரப்பினரிடையேயும் முரண்பாடு எழுந்து வருகிறது. இதன் பிரதிபலன் மோசமாக அமையலாம். இதன் காரணமாகவே கடந்த வாரம் நான் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டேன். எந்தப் பிரச்சினையையும் பேச்சு நடத்தி தீர்வு காண முடியும். இனங்களுக்கிடையிலான அவநம்பிக்கை, சந்தேகம் காரணமாகவே பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

ஒவ்வொரு தரப்பினரதும் பிரச்சினைகளை அடையாளங் கண்டு தீர்க்க வேண்டும். ஒரே மேசையில் சகல தரப்பினரையும் அமர வைத்து பேச்சு நடத்த முடியும் பௌத்த தரப்பு பிரச்சினைகள் இன்றைய சந்திப்பில் முன்வைக்கப்பட்டது. அடுத்த தரப்புடனும் பேச இருக்கிறோம்.

கொள்கை ரீதியான விடயங்களே இன்று ஆராயப்பட்டன என்றார்.

ஐ. எஸ். ஐ. எஸ்.

ஐ. எஸ். ஐ. எஸ். அமைப்பில் 32 முஸ்லிம்கள் இணைந்தது குறித்து அமைச்சர் தெரிவித்த கருத்து பற்றி இங்கு வினவப்பட்டது. இது பற்றி முஸ்லிம் அமைச்சர்கள் விமர்சித்துள்ளது பற்றியும் இந்த விடயம் 2 வருடங்களுக்கு முன்னர் நடந்தது என்பது பற்றியும் வினவப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர்,

இது சில காலத்திற்கு முன்னரே நடந்தது. அதில் ஒருவர் உயிரிழந்தார். ஆனால் பல நூறு பேர் ஐ. எஸ். ஐ. எஸ்.ஸில் இணைந்ததாக தவறான கருத்து பரவலாம். அதனாலே மக்களை அறிவூட்டுவதற்காக இந்த விடயத்தை வெளியிட்டேன். இவ்வாறான விடயங்களை வெளிப்படையாக பேசாததாலே பிரச்சினை எழுகிறது. பிக்குமாருடனான பேச்சில் நிபந்தனை எதுவும் முன்வைக்கப்படவில்லை என்று தெரிவித்த அமைச்சர் வெறுக்கத்தக்க பேச்சுக்கு எதிரான சட்டம் குறித்தும் கருத்துத் தெரிவித்தார்.

குற்றவியல் சட்டக் கோவையில் உள்ள பிரிவின்படி இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.

சர்வதேச தரத்திற்கு இது தொடர்பிலான சட்டம் தயாரிக்க மனித உரிமை தொடர்பான சர்வதேச அமைப்புகள் கோரியிருந்தன.

இதன்படி, சட்டமூலம் தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இதனை கோரிய தரப்பினரும் தமிழ் முஸ்லிம் எம்.பி.களும் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இது தேவையில்லை என கூறியிருந்ததால் அதனை ஒதுக்கிக்கொள்ள நேரிட்டது என்றார்.

இந்த சந்திப்பில் அக்மீமன தயாரத்ன தேரர், மாகல்கந்தே சுதந்த தேரர் ஆகியேரும் கலந்து கொண்டனர்.

10 comments:

  1. Vijedasa bluffing to cover up his previous nonsensical bluffeing .

    ReplyDelete
  2. If they use words to harass us , we should think of limiting those if it is harassing.
    If words are motivational and create harmony we should promote it.
    So why on this earth muslim MPs not supported as this minister says.???????
    I cant understand what is intelligent in Muslim MPs decision to not to support ?????????????

    ReplyDelete
  3. குப்ருடன் இணைந்த நிபாக் அல்லது நயவஞ்சகத்துக்க மிகச் சிறந்த உதாரணம் இலங்கையின் 'நீதி' அமைச்சர் அவர்கள்.

    ReplyDelete
  4. * இந்த நாட்டில் சட்டம் எல்லாருக்கும் சமம் என்பது நடைமுறைப்படுத்தப்பட இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ராசிக் அவர்கள் ஒரு தனிப்பட்ட நபரைத்தான் ( ஞானசார தேரர் ) தாக்கி பேசினார். ஏனெனில் அந்த பிக்கு இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் மிகவும் கீழ்தரமாகவும் அச்சுறுத்தியும் பேசியிருந்தார். ஆனால் அந்த பிக்குவை நீங்கள் ராஜா கெளரவம் கொடுத்து வரவேற்று, கலந்துரையாடலும் நடாத்தியுள்ளீர்கள். இதுதான் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவா? நல்லாட்சி அரசாங்கமா ( ரணிலும், மைத்திரியும்)? ராசிக் ( sltj இன் பல நடவெடிக்கைகளில் உடன்பாடு கிடையாது, இவர்களது GST+ ஆர்ப்பாட்டமும், இவர்களது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே பார்க்கிறோம்) என்ற இலங்கை பிரசைக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அவரது கைது ஒரு இனரீதியான, பக்கசார்பான, அரசியல் ரீதியான, அநீதியான அணுகுமுறையாகும். இது தான் இந்த நாட்டின் சட்டத்தின் நீதியும் அரசினதும் கொள்கையுமா?

    * ஒருவன் ஏமாளியாகருக்கலாம், ஆனால் ஒரு சமூகம் ஏமாளியாக இருக்கலாமா??
    * ஒரு தனி நபர் ஏமாற்றலாம், ஆனால் ஒரு சமூகத்தையே இந்த அரசாங்கம் ஏமாற்றலாமா??? பேசா மடந்தைகளாக பாராளுமன்றத்தில் முஸ்லீம் எம்பிக்கள் என்ன செய்கிறார்கள். அரசியல் ஆண்மையற்றவர்களை இந்த சமூகம் தெரிவு செய்துள்ளது போல் தெரிகிறது.
    * இந்த நாட்டின் முஸ்லீம் சமூகத்துக்கு அவர்களது அரசியல் தலைமைகளுக்கு உரிமைகள் என்றால் என்ன என்று புரியாமல் சலுகைகளுக்காக சூடு சுரனையற்று, மதி கேட்டு இன்னும் இந்த அரசுக்கு சரியான அழுத்தத்தை கொடுக்க துப்பு கெட்டவர்களாக உள்ளனர்.
    * இந்த முஸ்லீம் அமைச்சர்களும், எம்பிகளும் ஞானசாரர் கைதை தங்களது அரசுக்கான ஆதரவை முன்னிறுத்தி ஒரு அழுத்தத்தை கொடுப்பார்களா? தலைவர் அஸ்ரப் இருந்திருந்தால் நிட்சயம் அது நடந்திருக்கும் என்பதை சந்திரிகாவிடமும் அவரது செயலாளர் பாலபட்டபெந்தி இடமும் கேட்டால் தெரியும். சட்டத்தையும் ஒழுங்கையும் இந்த அரசும், போலீசும் சரியாக நிறைவேற்ற வேண்டும் என்பதை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. குருவி சரியாக சொன்னீர்கள்.

      Delete
    2. மிகச்சிறந்த கருத்து

      Delete
  5. அமைச்சர் அவர்களே இலங்கை சிறிய நாடு என்பதால் இலங்கை மக்களுக்கு மூளை சிறியது இல்லை.அதே போன்று இந்த நாட்டில் முஸ்லிம்கள் சிறுபான்மையர் அதனால் முஸ்லிம்களின் மூளையும் சிறுது கிடையாது என்பதை கௌரவ அமைச்சர் புரிந்து கொண்டால் இலங்கையை கட்டியெளுப்புவதில் நாம் பாரிய வெற்றியை காணலாம்

    ReplyDelete
  6. Enna arivooottal....Athuthaan neengal Ghanazaravai arivoottuvathu pothaatho...???
    Kevalam.....Intha idathil 23 -Musi+lim kottamaippum Aasaath Saalum irnthu irunthaal nallaa irunthurukkume....adada....!!

    ReplyDelete
  7. மீண்டும் கட்டாயம் பாராலுமன்றரத்தில் நான் மக்களை விழிப்புனர்வு செய்வதற்கே இவ்வாறு இட்டுக்கட்ட சொன்னேன் என்று மக்களுக்கு எடுத்துச்சொல்லவும் அவ்வாறு செய்யாவிட்டால் நீ நீதி அமைச்சர் இல்லை மாற்றமாக பீதி அமைச்சர்!

    ReplyDelete
  8. Man, who is this Kuruvi? Tweets really good stuff!

    ReplyDelete

Powered by Blogger.