Header Ads



ஜிஹாத், ஹலால், பர்தா சிங்களமொழி நூல்கள் அமைச்சர் விஜயதாஸாவிடம் ஒப்படைப்பு


தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலி அவர்களி வேண்டுகொளுக்கு இனங்கி நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் மதங்களுக்கிடையில் வெறுப்பூட்டும் பேச்சுக்கள், செயற்பாடுகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் கருத்துக்களுக்கும் இக் கருத்துக்களை பரப்புவா்களுக்கு எதிராக நீதியமைச்சினால் சட்ட மூலம் தயாரிக்கப்பட்டு குற்றவியல் சட்டக் கோவையில் உள்ள பிரிவின்படி இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்று (23) நீதியமைச்சில் நீதியமைச்சா் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சா் மேற்கண்டவாறு தெரிவித்தாா். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று பாராளுமன்றத்தில் பொதுபலசேன மற்றும் தீவிர போக்குடைய பிக்குமாருடன் மேற்படி விடயங்களை தொடர்பாக பேசியுள்ளேன்.

இந்த நாடு ஒரு ஜனநாயக நாடு. சகல மதங்களையும் அனுஷ்டிப்பவர்களுக்கு உரிமை உண்டு. மதங்களுக்கிடையில் வெறுக்கத்தக்க பேச்சுக்கள், ஊா்வலங்கள், சந்திகளில் கூடுவதன் மூலம் பிரச்சினைகளை ஏற்படுத்த முடியாது. மதங்களுக்கிடையில் ஏற்படும் பிரச்சினைகளளை அந்தந்த மத பெரியாா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு இரண்டு சாராரும் தீா்த்துக் கொள்ள முடியும்.

இவ்விடயம் தொடர்பாக இந்த நாட்டில் குற்றவியல் சட்டக் கோவையில் உள்ள பிரிவின்படி இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். தற்போது அமைச்சரவையில் நான்கு மத விவகார அமைச்சா்கள் உள்ளனா். அவா்களுடனான சந்திப்பும் பாராளுமன்றத்தில் நடைபெறும்.

இந்த அரசாங்கம் சகல இன மதங்களின் நல்லிணக்கத்தை பாதுகாக்கும் எனவும் அமைச்சா் அங்கு தெரிவித்தாா்.

முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா பிரதிநிதிகள், அகில இலங்கை ஜம்மியத்துல உலமா பிரநிதிகள் மற்றும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆசாத் சாலி ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதன்போது, சிங்கள மொழி மூலமான ஜிஹாத், ஹலால் உணவு, பர்தா, போன்ற நூல்களின் ஒரு தொகுதி அமைச்சாிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

1 comment:

  1. Very good job.our practical life islam will save us from our ENEMY AT ALL.BREIF OF QURAN AND HADEES

    ReplyDelete

Powered by Blogger.