Header Ads



இவரைப்பற்றி பொலிஸாருக்கு அறிவிக்கலாம்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் சந்தேகநபர் ஒருவரின் படம் பொலிஸாரால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கொலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சாட்சியாளர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, குறித்த சந்தேகநபரது உருவம் வரையப்பட்டுள்ளது. 

சுமார் 35 வயது மதிக்கத்தக்க இவர், 5.8 அடி உயரம் கொண்டவர் எனவும் தெரியவந்துள்ளது. 

இதேவேளை, இவர் குறித்து தகவல் அறிந்திருப்பின் கீழ் காணும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து பொது மக்கள் கூற முடியும் என, பொலிஸ் தலைமையகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

011- 24 22 176 
011- 23 80 380 
071- 83 05 528 
071- 83 49 505 
077- 32 91 500 
071- 80 70 207 

No comments

Powered by Blogger.