Header Ads



மைத்திரியின் வாழ்நாளில், சிறப்பான தினம் இதுதான்..!

அனைத்து பதவிகளையும் துறந்து அரசாங்கத்திலிருந்து வெளியேறிய அன்றைய நாள் தமது அரசியல் வாழ்வில் சிறப்பானதொரு நாள் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மகாவலி அதிகார சபையின் புதிய நியமனங்கள் மற்றும் பதவி உயர்வு பெற்ற அலுவலர்களுடன் நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போமே ஜனாதிபதி; மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தனக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவரையும் ஒரேவிதமாக நடத்துவது ஒரு நாட்டின் ஜனாதிபதியின் பொறுப்பாகும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சுயாதீனம், பக்கச்சார்பின்மை மற்றும் நடுநிலையாக செயற்படுதல் ஜனாதிபதிக்குரிய பொறுப்பாகும் எனவும் தெரிவித்தார். 

அபிவிருத்தியின்போது நாட்டின் ஒரு பகுதியை கைவிட்டதன் பெறுபேறே போர்வரை நீண்டு சென்றதாக தெரிவித்த ஜனாதிபதி, அபிவிருத்தி செயற்பாடுகளின் ஆரம்பத்தில் இருந்தே அவற்றை நியாயமாக நாட்டுக்காக நிறைவேற்றியிருந்தால் 3 தசாப்தகால போரை அனுபவிக்வேண்டி இருந்திருக்காது எனக் குறிப்பிட்டார். தனிப்பட்ட ரீதியிலன்றி நாட்டுக்கும் மக்களுக்கும் முன்னுரிமை வழங்கி நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் உள்ள மக்களுக்காக சேவையாற்றுவது அனைத்து அரச அலுவலர்களின் பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கிய எதிர்காலமான மகாவலி அதிகார சபை, தனது பணிப் பொறுப்புக்களை புதிய நோக்குடனும் புதிய தோற்றத்துடனும் முன்னொண்டு செல்லவேண்டுமென குறிப்பிட்ட ஜனாதிபதி, இன்றைய நாளுக்காவும், எதிர்கால தலைமுறையினருக்காகவும் தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு அனைத்து அலுவலர்களும் அர்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் மேலும் தெரிவித்தார். 

மகாவலி அதிகார சபையின் ஆட்சேர்ப்புச் செய்யும் ஒழுங்கு விதிகள், அதிகார சபையில் சேவையாற்றும் ஆளனியினருக்கு அநீதி ஏற்படாதவாறு திருத்தம் செய்யப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.