Header Ads



வங்காள விரிகுடா கொந்தளிப்பு, இடி கலந்த மழை, கவனமாக பயணிக்கவும்

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலை காரணமாக கடும் மழை மற்றும் பனி மூட்டத்துடனான கால நிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தெற்கு, சப்ரகமுவ, மத்திய, மேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் கடும் இடியுடனான மழை பெய்வதற்கான அதிக சாத்தியம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சில பிரதேசங்களில் 100 மி.மீ மேற்பட்ட மழைவீழ்ச்சி பதிவாக கூடும்.  அத்தோடு கிழக்கு மாகாணங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. கடற்சார்ந்த பகுதிகளிலும் நாடு பூராகவுமுள்ள சில பகுதிகளிலும் பலத்த காற்று வீசுவதற்கான சூழ்நிலை காணப்படுகின்றது. இதனால் தெற்கு, கிழக்கு, மற்றும் வடக்கு கடற்பிரதேசங்களிலுள்ள மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். குறித்த காலநிலை சில நாட்கள் தொடருவதற்கான சந்தர்ப்பங்களும் உள்ளன.
மேலும் தற்காலிகமாக நிலைக்கொண்டுள்ள காற்றலுத்தம் பலத்த காற்றாக மாறுவதற்கான சூழல் காணப்படுகின்றது. இதனால் கடும் மின்னலும் ஏற்படலாம் எனவே மக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட்டு பாதிப்புக்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் தினைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மழையுடனான காலநிலையால் அதிவேக வீதிகளில் பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் வாகன சாரதிகள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தெற்கு அதிவேக வீதியின் தொடாங்கொடையில் இருந்து, கெலனிகம வரையிலும், கஹதுடுவை மற்றும் கொட்டாவை மாற்றல்களிலும் அதிக பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அதிவேக வீதிகளில் பயணிக்கும் போது மணிக்கு 60 கிலோமீற்றர் என்ற வேகத்தில் பயணிக்குமாறும், வாகனத்தின் முன் - பின் விளக்குகளை ஒளிரவிடுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மழை பாங்கான பகுதிகளில் வாழும் மக்கள் தொடர் மழை பெய்யும் பட்சத்தில் மண்சரிவு குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றது. 

No comments

Powered by Blogger.