Header Ads



கழுகு மோதியும் தம்மாமில் இருந்து, ஜித்தாவரை பிரச்னை இன்றிவந்த விமானம்


சவுதி அரேபியா ஏர்லைன்ஸ்கு சொந்தமான விமானத்தில் கழுகு மோதியதில் அதிர்ஷ்டவசமாக அதில் பயணித்த பயணிகள் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியா ஏர்லைன்ஸ்கு சொந்தமான விமானம் ஒன்று தம்மாமில் இருந்து ஜெட்டா நோக்கி சென்றுகொண்டிருந்தது.

குறித்த விமானம் ஜெட்டா விமான நிலையத்தில் தரை இறங்கிய பின்னர் ரியாத் நோக்கி செல்ல தயார் படுத்தும் பணிகள் துரிதமாக நடந்துகொண்டிருந்தது.

அப்போது ரியாத் செல்லவிருக்கும் பயணி ஒருவர் குறித்த அதிர்ச்சி சம்பவத்தை விமான ஊழியர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விமானத்தின் இடதுபக்க இறக்கையில் ஓட்டை விழுந்திருப்பதாகவும், அந்த விமானம் எப்படி தம்மாமில் இருந்து இத்தனை தூரம் எந்த ஆபத்தும் இன்றி கடந்து வந்தது எனவும் அவர் வினவியுள்ளார்.

இதனைடையே தகவல் அறிந்து வந்த தொழில்நுட்ப அதிகாரிகள் அந்த பயணி சுட்டிக்காட்டிய பகுதியை ஆராய்ந்தபோது அதில் கழுகு ஒன்று மோதியுள்ளது கண்டறியப்பட்டது.

பொதுவில் விமானம் மீது பறவைகள் மோதுவதால் விபத்துகள் நேர்வதுண்டு. ஆனால் குறித்த விமானம் தம்மாமில் இருந்து ஜெட்டா வரை எவ்வித பிரச்னையும் இன்றி வந்து சேர்ந்துள்ளது வியப்பை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

பின்னர் ஊழியர்கள் அந்த கழுகை அதில் இருந்து அப்புறப்படுத்தியதுடன், ரியாத் செல்லும் பயணிகளுக்கு வேறு விமானத்தை ஏற்பாடு செய்தனர்.

இதனால் 3 மணி நேரம் குறித்த பயணிகள் விமான நிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

No comments

Powered by Blogger.