November 07, 2016

'தவ்ஹீத் ஜ‌மாஅத்தை க‌ண்டிப்ப‌து, கோழைக‌ளின் செயலாகும்'

முஸ்லிம் த‌னியார் சட்ட‌த்தில் மாற்ற‌ம் கொண்டு வ‌ர‌ வேண்டும் என ஐரோப்பிய‌ நாடுக‌ளின் க‌ட்ட‌ளையை ஏற்றுக் கொண்ட‌மைக்காக‌ ந‌ல்லாட்சி அர‌சை க‌ண்டித்து ஸ்ரீ ல‌ங்கா ஜ‌மாஅத் ஆர்ப்பாட்டம் ந‌டாத்திய‌தை பாராட்டாமல், அதனை சில உலமாக்கள் கண்டித்திருப்பதானது கவலையளிக்கிறது என உலமாக் கட்சியின் தலைவர் மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

இந்த ஆர்ப்பாட்ட‌த்தின் போது பொதுப‌ல‌ சேனாவின் செயலாளர் ஞான‌சார‌ தேரோவுக்கு எதிராக‌ சொல்ல‌ப்ப‌ட்ட‌ க‌ருத்துக்க‌ள், குளிக்க‌ப் போய் சேறு பூசிய‌ செய‌ல் என‌ சில உலமாக்கள் தெரிவித்துள்ள‌மையை ஏற்றுக்கொள்ள‌ முடியாது.

த‌வ்ஹீத் ஜ‌மாஅத்தின் ஆர்ப்பாட்ட‌த்தில் பொதுவாக‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்கு எதிராக‌வோ அல்ல‌து பௌத்த‌ ச‌ம‌ய‌த் த‌லைவ‌ர்க‌ளுக்கு எதிராக‌வோ மோச‌மான‌ க‌ருத்துக்க‌ள் தெரிவிக்க‌ப்ப‌ட‌வில்லை. மாறாக‌ ஞான‌சார‌வுக்கு எதிராக‌வே க‌ருத்துக்க‌ள் தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌ன‌. அதுவும் அவ‌ர‌து பாணியிலேயே க‌ருத்துக்க‌ள் முன் வைக்க‌ப்ப‌ட்ட‌மை இஸ்லாத்தின் அறிவுரைக்குட்ப‌ட்ட‌தாகும்.

அதாவது நீங்க‌ள் எவ்வாறு தாக்குத‌லுக்கு உட்ப‌டுத்த‌ப்ப‌ட்டீர்க‌ளோ அவ்வாறே தாக்குங்க‌ள் என‌ அல்குர்ஆன் தெளிவாக‌ சொல்கிற‌து. அதன் பிரகாரமே மார்க்க வரையறைக்கு உட்பட்டு, அவர் கண்டிக்கப்பட்டார்.

அத்துட‌ன் ஞான‌சார‌வை சிங்க‌ள‌ ம‌க்க‌ள், ச‌ம‌ய‌த்த‌லைவ‌ராக‌ பார்த்த‌ போதிலும் அவ‌ர் ஒரு அர‌சிய‌ல்வாதி என்ப‌தை தெரிந்து வைத்துள்ளார்க‌ள். அதன்படி அவ‌ருக்கெதிரான‌ வார்த்தைக‌ள், பௌத்த‌ ச‌ம‌ய‌ த‌லைவ‌ர்க‌ளுக்கு எதிரான‌த‌ல்ல‌ என்ப‌தை நிச்ச‌ய‌ம் சிங்க‌ள‌ ம‌க்க‌ள் புரிந்து கொள்வார்க‌ள் என‌ ந‌ம்புகிறோம்.

இந்த‌ நாட்டை புலிக‌ளிட‌மிருந்து மீட்டெடுத்த‌ ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ ஒரு சிங்க‌ள‌வ‌ர், பௌத்த‌ர். அப்ப‌டியிருந்தும் அவ‌ர் ஆட்சியிலிருக்கும் போது அவரிடம் சொகுசுகளை அனுபவித்த முஸ்லிம் அர‌சிய‌ல்வாதிக‌ள் கூட‌ அவ‌ரை க‌ள்வ‌ன், இன‌வாதி என்றெல்லாம் ப‌கிர‌ங்க‌மாக‌ ஊட‌க‌ங்க‌ளில் பேசுகின்ற‌ன‌ர். இத‌னை சிங்க‌ள‌ ம‌க்க‌ள் பொறுமையாக‌ கேட்கின்ற‌ன‌ரே த‌விர‌ ஒரு முஸ்லிம் எப்ப‌டி சிங்க‌ள‌ த‌லைவ‌ருக்கு எதிராக‌ பேச‌ முடியும் என‌ போர்க்கொடி தூக்கவில்லை.

அல்ல‌து இன்று த‌வ்ஹீத் ஜ‌மாஅத்தின் வார்த்தைக‌ளை க‌ண்டிக்கும் சில உலமாக்கள், சிங்க‌ள‌ த‌லைவ‌ரான‌ ம‌ஹிந்த‌வை முஸ்லிம்க‌ள் தூஷிப்ப‌து முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ளை திருப்பும் என‌ முஸ்லிம்க‌ளை எச்ச‌ரித்துள்ளார்க‌ளா? இல்ல‌வே இல்லை.

ஆக‌ மொத்த‌த்தில் வீர‌னுக்கு ஒரே நாளில் ம‌ர‌ண‌ம், கோளைக்கு வாழ்நாள் முழுதும் ம‌ர‌ண‌ம் என்ப‌து போன்று தான் இவர்களது நிலைப்பாடு தென்ப‌டுகிற‌து. அர‌சின் மோச‌மான‌ இந்த‌ முய‌ற்சிக‌ளுக்கு எதிராக‌ முஸ்லிம் அமைப்புக்க‌ளை ம‌ட்டுமாவ‌து ஒன்று கூட்டி க‌ண்டிக்க‌ முடியாத‌ அர‌சின் விசுவாசிகள், அர‌சுக்கு எதிராக‌ கொழும்பில் ஆர்ப்பாட்ட‌ம் ந‌ட‌த்திய‌ த‌வ்ஹீத் ஜ‌மாஅத்தை ம‌ன‌ம் திற‌ந்து பாராட்டாம‌ல் க‌ண்டிப்ப‌து கோழைக‌ளின் செயலாகும்.

எம்மை பொறுத்த‌ வ‌ரை ஞான‌சார‌வின் பின்ன‌ணியில் தேச‌த்துரோக‌ வெளிநாட்டு ச‌க்திக‌ளும் சில‌ முஸ்லிம் ப‌ச்சோந்திக‌ளும் இருப்ப‌தாக‌ ச‌ந்தேகிக்கின்றோம். இவ‌ர்க‌ள் அவ‌ரை பிழையாக‌ ந‌ட‌த்துகிறார்க‌ள்.

இந்த‌ நிலையில் முஸ்லிம் ச‌மூக‌த்தின் உல‌மாக்க‌ளும் அர‌சிய‌ல் பிர‌முக‌ர்க‌ளும் ஞான‌சார‌வுட‌ன் நெருக்க‌த்தை ஏற்ப‌டுத்தி அவ‌ருக்கு அன்பால் உண்மைக‌ளை உண‌ர்த்த‌ முன்வ‌ர‌ வேண்டும். அது வ‌ரை த‌வ்ஹீத் ஜ‌மாஅத்தின் கண்டிப்பான பாணியும் இருக்க‌த்தான் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

4 கருத்துரைகள்:

Kanneer pukaikum, rubber bullettukkum payandawarkal weerarkal? Vaayala endamaattkukkum "Umbaeeey" Umbaaey ennru kaththa mudiyum.

Enna sonnalum.porumeiyalargaluden Allah irikkiran enra Al quran vasanamum engalukku thaan erakkappattadhu...
sahabakkal kafir galakku edira avangala madiriye vasam padalle..padi irundha islam thala thookki irikkadhu..Moola yosichchi wela seiyyanum.

இவர்களின் கொள்கையில் இல்லாத, ஈமான் கொண்டு கலிமா சொன்ன முஸ்லிம்களைக் கூட வாய் கூசாமல் காபிர்கள்/வழிகேடர்கள் என்று அழைக்கும் இவர்கள்,
பௌத்தர்கள் புனிதர் என கருதும் புத்தரை நரமாமிசம் உண்பவர் என்று கூறி முழு பெளத்த சமூகத்தையும் இழிவு படுத்திய இவர்கள்,
தேவையில்லாமல் சமூகத்தில் பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது உங்களுக்கு புரியவில்லையா...?

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டலில் கடந்த மஹிந்தவின் ஆட்சியில் பொறுமையாக இருந்தோம். இரத்தம் சிந்தாமல் அல்லாஹ் ஆட்சியை ஒரு ஜோஸ்யக்காரனின் பேச்சை க்கொண்டு மஹிந்தவின் ஆட்சியை கவிழ்த்தான்.

அப்போதெல்லாம் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்ற பல்வேறு வகையில் SLTJ முயற்சித்துக்கொண்டிருந்தது.
கிராண்ட் பாஸ் மஸ்ஜித் விவகாரத்தில் தலையிட்டு இளைஞர்களை ஜிஹாதுக்கு அழைத்தது. அவர்களுக்கு கட்டுப்பட்டிருந்தால் இன்று உள்நாட்டு யுத்தம் ஒன்று வந்திருக்கும்.

முபாரக் மௌலவியே.. உங்களுக்கு "பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான்" என்ற வசனம் தெரியாது போல.?

உங்களைபோன்றவர்கள் தான் பிள்ளைகளை கிள்ளிவிடுபவர்கள்.

முட்டாள் தனமாக யோசிக்காமல் கொஞ்சம் மூளையை கசக்கி யோசியுங்கள்.

Post a Comment