November 10, 2016

'குரு­நாகல் முஸ்­லிம்­களை, குறி­வைக்கும் இன­வா­தம்'

நாட்டில் பள்­ளி­வா­சல்­களை இலக்கு வைத்து மீண்டும் தாக்­குதல் சம்­ப­வங்கள் இடம்­பெறத் தொடங்­கி­யுள்­ளமை முஸ்லிம் மக்­களை கவ­லையில் ஆழ்த்­தி­யுள்­ளது.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு குரு­நாகல் நகர எல்­லைக்குள் அமைந்­தி­ருக்கும் தெலி­யா­கொன்ன ஜும்ஆ பள்­ளி­வாசல் இனந்­தெ­ரி­யாத நபர்­க­ளினால் கல்­லெ­றிந்து தாக்கி சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இதன் கார­ண­மாக பள்­ளி­வாசல் கண்­ணா­டிகள் பலத்த சேத­மைந்­துள்­ளன.

கெப் ரக வாக­ன­மொன்றில் வந்த சிலரே இத் தாக்­கு­தலை நடாத்­து­வது சி.சி.ரி.வி. கமெ­ராவில் பதி­வா­கி­யுள்­ள­தா­கவும் அதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு பொலிசார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இச் சம்­பவம் நடை­பெற்று நான்கு நாட்­க­ளா­கின்ற போதிலும் இது­வரை எவரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை.

இந் நிலை­யில்தான் நேற்று அதி­காலை குரு­நாகல் நிக­வ­ரெட்­டிய நகர் ஜும்ஆ பள்­ளி­வாசல் மீதும் பெற்றோல் குண்­டுகள் வீசித் தாக்­குதல் நடாத்­தப்­பட்­டுள்­ளது. சுமார் 5 குண்­டுகள் பள்­ளி­வா­ச­லினுள் வீசப்­பட்­டுள்­ள­தா­கவும் இவற்றில் இரு குண்­டுகள் வெடித்து சேதத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இச் சம்­பவம் தொடர்­பிலும் பொலிசார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாத ஆரம்­பத்­திலும் பொர­லஸ்­க­முவ பள்­ளி­வாசல் மீது தாக்­குதல் நடாத்­தப்­பட்­டமை இங்கு குறிப்­பிட்­டுக்­காட்­டத்­தக்­க­தாகும்.

கடந்த ஆட்சிக் காலத்தில் பள்­ளி­வாசல் தாக்­குதல் சம்­ப­வங்கள் ஏரா­ள­மாக நடை­பெற்ற நிலையில் தான் முஸ்­லிம்கள் அதி­ருப்­தி­ய­டைந்து ஆட்­சி­மாற்றம் ஒன்­றுக்கு வழி­ச­மைத்­தார்கள். ஆனால் இந்த ஆட்­சி­யிலும் அது­போன்றே பள்­ளி­வாசல் தாக்­குதல் சம்­ப­வங்கள் தொடர்­வ­தா­னது முஸ்லிம் மக்­களை கவ­லை­யிலும் அச்­சத்­திலும் ஆழ்த்­தி­யுள்­ளது.

அண்­மைக்­கா­ல­மாக மீண்டும் இன­வாதக் கருத்­துக்கள் மேலோங்கி வரு­கின்­றன. சில பகு­தி­களில் முஸ்­லிம்­களின் வியா­பா­ரத்தை திட்­ட­மிட்டு முடக்­கு­கின்ற மறை­முக செயற்­பா­டு­களும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இதற்கு குரு­நாகல் மாவட்­டத்­தி­லுள்ள மும்­மானை முஸ்லிம் கிரா­மத்தில் சமீ­பத்தில் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் சிறந்த உதா­ர­ண­மாகும்.

மேற்­படி சம்­ப­வங்­களை ஒட்­டு­மொத்­த­மாக நோக்­கும்­போது குரு­நாகல் மாவட்­டத்­தி­லுள்ள முஸ்லிம் கிரா­மங்­களை இலக்­கு­வைத்தே இன­வாத செயற்­பா­டு­களும் தாக்­கு­தல்­களும் தலை­தூக்­கி­யுள்­ளதை உணர முடி­கி­றது. இவை நீண்ட கால திட்டம் ஒன்றின் வெளிப்­பா­டு­களா என்ற சந்­தே­கம் எழு­வதை தவிர்க்க முடி­ய­வில்­லை.

என­வேதான் இது தொடர்பில் முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் தமது உறக்­கத்தை கலைக்க வேண்டும். ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் 21 முஸ்லிம் எம்.பி.க்களும் தம்மை எதிர்க்­கட்­சிக்­கா­ரர்­க­ள் போல் கருதி கண்­டன அறிக்­கை­களை விடு­வ­தோடு மாத்­திரம் தமது செயற்­பா­டு­களை நிறுத்தி விடு­கி­றார்கள். 

மாறாக தாம் ஆட்­சி­ய­மைக்க பங்­க­ளித்­துள்ளோம் என்ற அடிப்­ப­டையில் அரச மற்றும் பாது­காப்­பு உயர் மட்டங்க­ளுடன் தொடர்பு கொண்டு அழுத்தங்களை வழங்கி இவ்வாறான முஸ்லிம்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும். 

இன்றேல் முஸ்லிம் மக்கள் உங்களை வாக்களித்து பாராளுமன்றுக்கு அனுப்பியதும் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டதும் விழ­லுக்­கி­றைத்த நீரா­கி­விடும். 

(விடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கம்)

2 கருத்துரைகள்:

No need...Adi paninthu nadangooo.....neenga eathavathu seiyya poi apram BBS kotuvaila katta...Apram..Mr. Faleel (Naleemi) ungalalathaan ithu nadakkuthunnu elutha...Athukku Navamani paperla sign veikka.... MU+SI+LIM podiyanugal ungala vasai paada....Apram MU+SI+LIM MPs itharkku naanga poruppu illa endru arasaanga thalaigalidam solla....Mangala Muslim theeviravaathigala pudikka...thevaya......Thableeq Jama'atha pola thalai thaalthi mounama kettu thoongungo pullaigal....

Jazeera,நீ என்னடா பேசுறாய் நாவை அடக்கி பேசு பைத்திய காறனைப்போல் பேசாதே இஸ்லாத்தில் எல்லா வற்றிக்கும் ஒரு வரையரை உன்டு அதற்கு வழி காட்ட நமக்கு ஜம்மிய்யத்துல் உலமா இருக்கு அவர்களின் வழி கா்ட்டலில் எமது வி்டயங்களை பொறுமையுடன் முன் நகர்த்துவோம்.வீ்ணான உணர்ச்சிகளுக்கு அடிமையாக முடியாது.சாதுரியமாக காரியங்களை நகர்த்த வேண்டும்.எலி அறுக்கும் தூக்க முடியாது.பிறர் மீது பழி சுமத்தும் வழிகெட்ட போக்கை நிறுத்திக்கொள்ளுங்க.அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்க.மறுமை நாள் நிச்சயம் கேள்வி கணக்கும் நிச்சயம் அடுத்த சகோதரன் மீது வீன்பழி சுமத்த வேண்டாம் நீர் செய்யும் அமல் உனக்கு போதாமல் ்போய்விடும் மறுமை வாளழ்வுக்கு

Post a Comment