Header Ads



முஸ்லிம் இளைஞன் படுகொலை, தேடப்­பட்ட பிர­தான சந்­தேக நபர் கைது


அங்­கும்­புர பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கல்­ஹின்ன - பெபி­ல­கொல்ல பள்­ளி­வா­ச­லுக்கு முன்­பாக  மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோ­கத்தில் இளைஞர் ஒருவர் கொல்­லப்­பட்ட சம்­பவம் குறித்து தேடப்­பட்டு வந்த பிர­தான சந்­தேக நபர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு முன்­னெ­டுத்த சிறப்பு விசா­ர­ணை­களின் போது மேற்­படி சந்­தேக நபர் நேற்று முன்­தினம் மாலை வேளையில் ஹோமா­கம பகு­தியில் வைத்து கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­ல­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.


வெலி ஓய, கிரி இப்­பன்­வெவ பகு­தியைச் சேர்ந்த 24 வய­து­டைய பேபில களு ஆரச்சி எனும் சந்­தேக நபரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இந்­நி­லையில் கைதான நப­ரிடம் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நெவில் டி சில்­வாவின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக மேல­திக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

ஏற்­க­னவே கைது செய்­யப்­பட்ட 30 வய­து­டைய மஹி­யாவ பகு­தியைச் சேர்ந்த மொஹம்மட் அலி மற்றும் கடு­வலை – ரணால பகு­தியைச் சேர்ந்த இரா­ணு­வத்தில் இருந்து தப்­பி­யோ­டிய 23 வய­தான கனத்த கமகே இந்­துனில் வஜிர குமார ஆகி­யோ­ரிடம் முன்­னெ­டுத்த சிறப்பு விசா­ர­ணைகள் ஊடாக கொலைக்­கான காரணம் உள்­ளிட்ட பல்­வேறு தக­வல்கள் அம்­ப­ல­மா­கி­யுள்ள நிலை­யி­லேயே பிர­தான சந்­தேக நபர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

கடந்த வாரம் கல்­ஹின்ன -பெபி­ல­கொல்ல பள்­ளி­வா­ச­லுக்கு முன்னால் உள்ள ஒழுங்கை அருகே பிர­தான பாதையை அண்­மித்து இளை­ஞர்கள் இருவர் உரை­யா­டிக்­கொண்­டி­ருந்­துள்­ளனர்.

இதன்­போது பிர­தான பாதை வழியே 301 –- 2218 எனும் இலக்­கத்தைக் கொண்ட சிவப்பு நிற கார் ஒன்று வந்­துள்­ளது. இக்­கா­ரா­னது குறித்த இளை­ஞர்கள் நின்­றி­ருந்த இடத்தைக் கடந்து சென்று, மீண்டும் பின்­னோக்கி வந்­துள்­ள­துடன் அதன் போது அவ்­வி­ளை­ஞர்கள் மீது காருக்குள் இருந்து துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­யப்­பட்­டுள்­ளது.

துப்­பாக்கிப் பிர­யோ­கத்­தை­ய­டுத்து அவ்­வி­ளை­ஞர்­களில் ஒருவர் ஸ்தலத்­தி­லேயே உயி­ரி­ழந்­துள்­ள­துடன் மற்­றை­யவர் பொது­மக்­க­ளினால் வைத்­தி­ய­சா­லைக்குக் கொண்டு செல்­லப்­பட்டார்.

கண்டி வீதி, கல்­ஹின்ன எனும் முக­வ­ரியைச் சேர்ந்த 23 வய­து­டைய மொஹம்மட் ராஸிக் மொஹம்மட் மூசித் எனும் இளை­ஞரே சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் காய­ம­டைந்­தவர் 21 வய­து­டைய இளைஞர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்­சா­ளரின் அலு­வ­ல­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் கேச­ரிக்குத் தெரி­வித்தார்.

காய­ம­டைந்­தவர் பேரா­தனை போதனா வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைப் பெறும் நிலையில் அவரின் நிலைமை கவ­லைக்­கி­ட­மாக இல்லை என வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் குறிப்­பிட்டார்.

இந்­நி­லையில் இந்த சம்­பவம் குறித்து பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்ள நிலையில் பல்­வேறு தக­வல்கள் அம்­ப­லப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

சந்­தேக நபர்கள் கொலை செய்­வ­தற்­காக பய­ணித்த 301 –- 2218 எனும் இலக்­கத்தைக் கொண்ட சிவப்பு நிற காரா­னது கண்டி, பூஜா­பிட்­டிய பகு­தியில் கைவி­டப்­பட்­டி­ருந்த நிலையில் மீட்­கப்­பட்ட போதும் அந்தக் காரா­னது கொழும்பு,- கந்­தானை பகு­தியில் வாட­கைக்கு பெறப்­பட்­டுள்­ளது என்­பது விசா­ர­ணையில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்தக் காரில் கொழும்­பி­லி­ருந்து இருவர் பய­ணித்­துள்­ள­துடன், கண்டி பகு­திக்குள் வைத்து முதலில் கைது செய்­யப்­பட்ட 30 வய­தான மொஹம்மட் அலி எனும் சந்­தேக நபர் காரில் ஏறி­யுள்­ளமை விசா­ர­ணையில் தெரி­ய­வந்­துள்­ளது.

காரில் பய­ணித்த ஏனைய இரு­வரில் ஒரு­வ­ரான ரணால பகு­தியைச் சேர்ந்த முன்னாள் இரா­ணுவ வீர­ரான இந்­துனில் வஜிர குமா­ர­வுடன் சேர்ந்து கொழும்பில் இருந்து பய­ணித்­த­தாகக் கூறப்­படும் நபரே தற்­போது கைது செய்­யப்­பட்­டுள்ளார் என பொலிஸார் குறிப்­பிட்­டனர்.

மொஹம்மட் அலி எனும் சந்­தேக நபர் வழி­காட்­டி­யாக இக்­கொலைச் சம்­பவம் தொடர்பில் செயற்­பட்­டுள்­ள­தாக கண்­ட­றிந்­துள்ள விசா­ர­ணை­யா­ளர்கள் அது தொடர்பில் அவர் 50 ஆயிரம் ரூபா வரையில் பணம் பெற்­றுள்­ள­தா­கவும் வெளிப்­ப­டுத்திக் கொண்­டுள்­ளனர்.

கொலை செய்­யப்­பட்ட இளைஞர் கல்வி நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்­த­போது நில­விய தனிப்­பட்ட விவ­காரம் ஒன்­றினை மையப்­ப­டுத்தி வெளி­நாட்டில் உள்ள நபர் ஒருவர் வழங்­கிய ஒப்­பந்­தத்தின் அடிப்­ப­டையில் பழி தீர்க்க இந்தக் கொலை புரி­யப்­பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­களில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றை உறுதி செய்ய போதிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவின் கீழ் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவும் அங்கும்புர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் கீழான குழுவினரும் முன்னெடுத்துள்ளனர்.  MFM.Fazeer

No comments

Powered by Blogger.