November 18, 2016

ஞானசாரரை கைது செய்யுங்கள் - பாராளுமன்றத்தில் ஹரீஸ்

(அகமட் எஸ். முகைடீன்)

சிறுபான்மை தமிழ் முஸ்லிம் சமூகங்குளக்கு எதிராக மிகக் காட்டமாக பேசி
இனவாதத்தை தூண்டுகின்ற பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் அவர்கள் உடன் கைது செய்யப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.எம் ஹரீஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற வரவு செலவுத்திட்டம் தொடர்பான விவாதத்தில் பிரதிம அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் (17) கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரதி அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்;.

இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் உருவாக்குவதற்காக 2015 ஜனவரி 8 இல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கௌரவ பிரதமர் அவர்களின் ஒத்துழைப்புடன் இந்த நல்லாட்சி உருவாக்கப்பட்டது. இந்த நல்லாட்சி உருவாகுவதற்கு சிறுபாண்மை தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் வெற்றியை தீர்மாணிக்கும் வாக்குகளாக இருந்ததை யாரும் மறுக்க முடியாது. புதிய நல்லாட்சி உருவாக்கத்தின் மூலம்
சிறுபான்மை மக்கள் தமது மத காலச்சார விழிமியங்கள் பேணிப் பாதுகாப்பப்படும் என்றும் தமக்கான   உரிமைகள் சிறப்பாக வழங்கப்படும் என்று நம்பினார்கள். 

ஆனால் இன்று நாட்டில் நடைபெறும் சம்பவங்கள் குறித்த நம்பிக்கையினை தவிடு பொடியாக்கும் வகையில் அமைந்துள்ளது மிகுந்த வேதனையான விடயமாக இருக்கின்றது. சிறுபாண்மை இனத்தவர்களின் மனதை புன்படுத்தும் வகையில் தெற்கில் உள்ள சில தலைமைகள் செயற்பட்டுவருகின்றது. பெரும்பாண்மை இனவாதிகள் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக விஷமத்தனமான பிரச்சாரங்களை மேற்கொள்வதோடு இனவாதத்தை தூண்டும் விதமாக செயற்பட்டுகின்றனர். 

பல மதத்தலைவர்கள் முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும்வகையில் பேசுகின்றனர். இது தொடர்பில் பொலிசார் கண்டும் காணமலும் இருக்கின்றனர்.

பிரபல்யமான முஸ்லிம் அமைப்பின் செயலாளர் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார். அதற்கு பகரமாக பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த டான் பிரியசாத் என்பவரை கைது செய்தார்கள். இனவாதத்தைத் தூண்டும் வகையில் வெளிப்படையாக செயற்படும் பௌத்த மதத் தலைவர்களை கைது செய்யாது பெறுமாணமில்லாத, உப்புச்ப்பு இல்லாத ஒருவரை கைது செய்துள்ளது வேதனையாக இருக்கிறது. இக்கைதானது முஸ்லிம் அமைப்பின் செயலாளரை கைது செய்தமை தொடர்பில் நியயாயம் கற்பிப்பதற்கே அன்றி வேறில்லை. 

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் அவர்கள் நேற்றும் கூட மிகப் பகிரங்கமாக சிறுபான்மை தமிழ் முஸ்லிம் சமூகங்குளக்கு எதிராக மிகக் காட்டமாக பேசியுள்ளார். இவரை பொலிசார் கைது செய்திருக்க வேண்டும். அதனை நியாயமான செயலாக கருதமுடியும். ஆனால் இவரின் இனவாத செயற்பாடு தொடர்பில் நடவடிக்கை எடுக்கக் கோரியும், அதற்கான தகுந்த சாண்றுகள் இருந்தபோதிலும் ஏன் இவரை இன்னும் கைது செய்யவில்லை?. அதவிடுத்து முகவரியில்லாதவரை கைது செய்துவிட்டு சிறுபாண்மையினரை திருப்திப்படுத்த நினைப்பது வேடிக்கையான விடயமாகும்.

இறக்காமம் மாணிக்க மடு பகுதியில் சிலைவைக்கப்பட்டுள்ள விவகாரம் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இச்சிலைவைப்பின் மூலம் பல தசாப்த காலமாக இப்பிரதேச சமூகங்களுக்கிடையில் இருந்த நல்லுறவு கசப்பானதாக மாறியுள்ளதோடு பெரும் பதட்ட நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பின்புலமாக அந்த மாவட்டத்தின் பிரபல அமைச்சர் இருப்பதோடு பகிரங்கமாக தான்தான் இதற்கு காரணம் என்று கூறியிருப்பதுமிகவும் கண்டிக்கதக்க விடயமாகும். மக்கள் மத்தியில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் உருவாக்க வேண்டிய தலைவர்கள் இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தும்வகையில் செயற்பட்டுவருகின்றார். நீதியாகவும் நியாயமாகவும் நடந்து சமூகத்தை வழிநடத்தவேண்டிய பொறுப்பில் உள்ள அமைச்சர் இனங்களுக்கிடையே முறுகல் நிலையை தோற்றுவித்துள்ளார். முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்று அரசியல் அதிகாரத்தை பெற்று அம்மக்களுக்கே துரோகத்தைச் செய்கின்றார்.

இது தொடர்பில் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மத கலாசாரங்களை பாதுகாக்கும்வகையில் அரசியலைப்பு ரீதியான உத்தரவாதங்களை உருவாக்க வேண்டும் என்று இந்தச் சபையில் வேண்டுகோள் விடுக்கிகின்றேன்.

அரசியல் அதிகாரப் பரவலாக்கம் என்று பேசுகின்றபோது. அம்பாறை மாவட்டத்தில் 70 வீதமான தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றனர். இருந்தபோதிலும் நிர்வாக கடமைகள் சிங்கள மொழியில் நடைபெறுகிறது. இதனால் சிங்கள மொழி தெரியாத மக்கள் தமது கருமங்களை பெற்றுக் கொள்வதில் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இதனால் புதிய அரசியல் அமைப்பு மாற்றத்தில் அம்பறையின் கரையோர 12 மேற்;பட பிரதேச செயலகங்களை உள்ளடக்கி, பொத்துவில், சம்மாந்துறை, கல்முனைத் தொகுதிகளை உள்ளடக்கிய கரையோர நிர்வாக மாவட்டம் ஒன்றைஉருவாக்குவதற்கு இந்த நாட்டின் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி என்றவகையில் வேண்டுகோள் விடுக்கின்றேன். 

5 கருத்துரைகள்:

"சட்டி சூடென்று அடுப்புக்குள் குதித்த கதை" ஆகிவிட்டது நமது சமூகத்தின் நிலை. பரவாயில்லை சகோதரர்களே! நம்மால் எடுக்க முடியுமான நகர்வை நாம் அன்று செய்தோம்; ஆனால்,
ஆனால் வாக்களிக்கும் போதே இன்றுள்ள நிலை பற்றிய எதிர்பார்ப்பு நமக்கு, நமது அரசியல்வாதிகளுக்கு இருந்திருக்க வேண்டும். அது இருக்கவில்லை. மாறாக முழுமையாக நம்பினீர்கள் ஆகையால்த்தான் இந்த ஏமாற்றம். உங்களை யார் நம்பச் சொன்னது? உங்கள் அனுபவத்தில் நீங்கள் ஏன் பாடம் கற்கவில்லை?
அவர்களின் காய் நகர்த்தல்களுக்கு ஈடாக நாம் நமது காயை நகர்த்த விவேகம் வேண்டும். இப்படியே விட்டுவிட்டால் கப்ர் வணங்கிகளும், நமது அரசியல் வாதிகளும் 'நம்மை இனவாதிகளுக்கு விருந்தாகப்' பரிமாறுவர். வெறுமனே ஓதி, ஊதிக்கொண்டு திரியாமல் ஆலிம்கள் ஒன்று சேர்ந்து, புத்திஜீவிகள் மற்றும் அரசியல்வாதிகளை ஒன்று சேர்த்தது இன்றே எதுவும் செய்யாவிட்டால் நமது அழிவுக்கு நாமே சாட்சியாக வேண்டி வரும்.

we very well know dpt minister haris. govt planing to arrest jana sara.that is reason you are talking against him..

All muslim members of parliament should voice the same and fight for the justice.

JIFFRY.. do not waste your time here. Allah knows the intention of Harris or every one.

Write your comments as per the situation...

Post a Comment