Header Ads



அமெரிக்க புதிய ஜனாதிபதியுடன் இணைந்து, தமிழரின் உரிமையை வென்றெடுப்போம் - சம்பந்தன்

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட்டிரம்புடன் இணைந்து தமிழ் மக்களின் உரிமைகளை வெல்வதற்காக - நீதியைப்பெறுவதற்காக எடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்துஎடுப்போம். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

கடும் போட்டிகளுக்கு மத்தியில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில்குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் புதிய ஜனாதிபதியாகத்தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பலரும் எதிர்பார்த்த ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரானஅந்நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் அதிர்ச்சித்தோல்வியடைந்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் தலைமையில் அமையவுள்ள அமெரிக்காவின் புதிய ஆட்சி தொடர்பில்ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடுஎன்னவென்று அதன் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறுகூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகின் வல்லரசு நாடுகளில் முக்கிய நாடான அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலில்அங்குள்ள மக்கள் ஜனநாயக ரீதியான தீர்ப்பை தமது வாக்குகளினால் வழங்கியுள்ளனர்.

அதனடிப்படையில் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.அமெரிக்க மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை டொனால்ட் டிரம்புடன் போட்டியிட்டஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளின்டனும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலகிச் செல்லவுள்ள ஜனாதிபதி பராக் ஒபாமாவும்ஏற்றுக்கொண்டுள்ளார்.

எம்மைப் பொறுத்தவரையில் நாம் சொல்வது என்னவெனில், இலங்கை அரசாலும் அதன்படைகளினாலும் மனித உரிமைகள் மீறப்பட்டமை தொடர்பிலும், போர்க்குற்றங்கள்இழைக்கப்பட்டமை தொடர்பிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்உறுப்புரிமை நாடுகளின் ஆதரவுடன் 2012, 2013, 2014, 2015ம் ஆண்டுகளில்பல்வேறு பிரேரணைகளை அமெரிக்கா நிறைவேற்றியுள்ளது.

தற்போது அந்தத் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய நிலைமையில்இருக்கின்றன.

எனவே, அமெரிக்காவினுடைய கொள்கைகள் தொடரும் என்பது எமது நம்பிக்கை.ஏனெனில், ஆழ்ந்த ஆலோசனைக்குப் பின்னர் இலங்கை தொடர்பில் பல்வேறு தீர்மானங்களைஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா நிறையேற்றி இருந்தது.

அமெரிக்காவின் இந்தத் தீர்மானங்களை 2015ல் ஆட்சிக்கு வந்த இலங்கையின் புதியஅரசும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அந்தத் தீர்மானங்கள்நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இருக்கமுடியாது.

அது தொடரும் என்பது எங்களுடைய கருத்து.

ஆனபடியால் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்புடன் இணைந்து எங்களுடைய தமிழ் மக்களின் உரிமைகளை வெல்வதற்காக - நீதியைப்பெறுவதற்காக எடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்துஎடுப்போம் என்றார்.

9 comments:

  1. ஐயா! புத்திஜீவிகளின் கண்களைக்கட்டி,அரசியல்வாதிகளின் மொட்டைத்தலையில் கொச்சிக்காய் அரைக்கும் வடக்கும் கிழக்கும் இணைக்கும் உங்கள் பிடிவாதத்தை விட்டுவிடுங்கள். உங்கள் வயதுக்கும், அனுபவ முதிர்ச்சிக்கும் மிகவும் பொருத்தமான முடிவு அதுதான் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. முயலும் வெற்றி பெறும்! ஆமையும் வெற்றி பெறும்! ஆனால் முயலாமை ஒரு நாளும் வெற்றி பெறாது!

      Delete
    2. ஆமை முயலை வெற்றி பெறுவது கதையில் மட்டும்தான் நிஜத்தில் இல்லை. கற்பனை உலகில் இருந்து மீண்டு வாரும். இன்னும் அந்த பாலர் வகுப்பு மனநிலையிலேயே இருக்கின்றீர்.

      Delete
  2. 30 வருட கொடிய யுத்தத்திற்கு காரணமான இனப்பிரச்சனைக்கு வடகிழக்கை இணைந்து தீர்வுகள் கொண்டுவரும் முயற்சிகளை முஸ்லிம்கள் குழப்பிவருவதை Mr.டிரம்புக்கு, அமெரிக்க தூதுவறூடாக TNA தெரியப்பபடுத்த வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. பெரும்பான்மைக்காறன் கொடுத்திட்டாலும்...

      Delete
    2. முதலில் உலக வரைபடத்தில் இலங்கை எங்கே உள்ளது என்று ட்ரம்ப்புக்கு சொல்லிக்கொடுங்கள்.அவராவது உங்களை கண்டுகொள்வதாவது .

      Delete
  3. Sinhalese always and ONLY WANT North and East remain divided and they want to drag Muslims into the issue and expose them as the culprits to the international community. Their strategy- "We fought with Tamils for 30 years and let Muslims and Tamils fight!"

    If Muslims are wise, they will be better off the topic and watch Sinhalese not allowing the 'Ealam' happen.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்! உங்கள் உருமைகளைப்பெற்றுக்கொள்ள முஸ்லிம்கள் ஒருபோதும் குறுக்கே நிற்கமாட்டார்கள்! எங்களை அடிமைப்படுத்தாதவரை!

    ReplyDelete

Powered by Blogger.