November 06, 2016

தமது இனம் சர்ந்தவர்களையே, ஹிஸ்புல்லா மீள்குடியேற்றுகிறார் - யோகேஸ்வரன்

தமிழ் மக்கள் மீள் குடியேறும் போது பாரபட்சம் காட்டிய இராஜங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தங்கள் இனம் சார்ந்தவர்களை குடியேற்றுவதற்கு தானாகவே பிரதேச செயலகம் சென்று மீள் குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கிறார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

வாகரையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 

வாகரைப் பிரதேசத்திலிருந்து கடந்த கால யுத்த சூழலின் போது இடம்பெயர்ந்தவர்கள் தகுந்த ஆதாரத்துடன் வந்தால் அவர்களை மீளக் குடியேற்றுவதில் எந்த தடையும் இல்லை. தமிழ் மக்கள் மீள் குடியேறும் போது பாரபட்சம் காட்டிய இராஜங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தங்கள் இனம் சார்ந்தவர்களை குடியேற்றுவதற்கு தானாகவே பிரதேச செயலகம் சென்று மீள் குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கிறார்.

மீள் குடியேற்றப்படவுள்ளவர்களின் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நாங்கள் கோரிக்கை முன்வைத்தால் எனது பெயரைக் குறிப்பிட்டு மீள் குடியேற்றத்தை தடுப்பதாக கூறுகிறார். அமைச்சர் தனது பதவியை சரியான முறையில் கையாள வேண்டும்.

இராஜங்க அமைச்சர் ஹிஸ்புல்லா எந்த அரசாங்கத்தை எதிர்த்தாரோ அந்த அரசாங்கம் போட்ட பிச்சையில் நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் பதவி, அபிவிருத்திக் குழுத் தலைமை ஆகிய பதவிகளைப் பெற்று இருக்கிறார். ஆனால் நாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்பதை அவர் மறந்துவிட கூடாது என்றார்.

9 கருத்துரைகள்:

அடியே ஐோகட்வரம் நீ துல்லுவது ஓவர் அடங்கு

உம்மட வாயை பினாயில் போட்டு கழுவனும், எப்படி எல்லோரும் உங்களைப்போலதான் என நெணைக்கிறீங்க?

இந்த தமிழ் புடலங்காய் தேசிய முட்டாள்களுக்கு தன் சமுதாயத்திற்கு ஒரு விடயத்தை செய்யவும் வக்கில்லை. அடுத்த சமுதாயத்திற்கு செய்வதை பார்த்தும் பொறுக்குதில்லை. இன்று உன் கூட்டம் ஒன்றுக்கும் வழியில்லாமல் இருப்பதற்கு காரணம் அன்றிலிருந்து இன்றுவரை உப்புசப்பில்லாத ஈழம் மண்ணாங்கட்டியெண்டு அரசியல் செய்துகொண்டிருப்பதால் தான். ஹிஸ்புல்லா தன் சமுதாயம் சார்ந்தவர்களுக்கு தான் செய்யமுடியும்.அவர்கள்தான் ஹிஸ்புல்லாஹ்விற்கு வாக்களித்தவர்கள். உமக்கெல்லாம் வாக்களித்துக்கொண்டிருக்கும் ஒரு இழிச்சவாய் சமுதாயம் இருக்கும்வரை நீரெல்லாம் முஸ்லிம்கள் மீது பொறாமையை விதைத்த அரசியல் செய்யலாம்.

அக்கரைப்பற்றில் அத்தாவுல்லாவையும் காத்தான்குடியில் ஹிஸ்புல்லாஹ்வையும் இனி எந்த நிலையிலும் பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம்கள் ஆதரிக்க தவறகூடாது இவர்கள் இருவரும் தமிழ் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனம் தான்

@IR MS, "புனர்வாழ்வு அமைச்சர் பதவி" என்பது முழு நாட்டுக்கும் சேவை செய்வதற்கானது. முஸ்லிம்களுக்கு மட்டுமில்லை.

காலில் விழுந்து, கெஞ்சி பெற்ற பதவியானாலும், அவர் முழு நாட்டு மக்களின் வரி பணத்தில் தான் பிழைப்பு நடத்துகின்றார்.

அந்த பதவியை தனது வாக்கு வங்கியை பெருக்குவதற்கு பயன்படுத்த முடியாது. Misusing his position is also a "corruption".

யோகேஸ்வரன் அவா்களே நீங்கள் எங்களது மக்களை அறுத்துக்குமித்து கடத்தி சித்திரவதைசெய்து டயா்போட்டு காணிகளையெல்லாம் அபகாித்துவிட்டு பிறந்த இடங்களிலிருந்து விரட்டி சாதனைபடைத்தீா்கள். அவா்களுக்கு வாழவழியில்லாது தத்தளிக்கின்றனா்.வாழவைக்கின்றீா்களுமில்லை வழிவிடுகின்றீா்களுமில்லை.கிழக்கிலுமப்படித்தான் வடக்கிலுமப்படித்தான் இருக்கின்றீா்கள்.இப்படியான நச்சு எண்ணங்கள்தான் உங்கள் அழிவுக்குக்காரணம். நல்லதை நினை நல்லதை செய்.

ஹிஸ்புல்லா ஒரு முக்கியமான தலைவர்
ஐோகட் அய்யாவுக்கு கூடியசீக்ரம் மேலம்தட்டி தாலீகட்டவேண்டிவரும்

True said! Hisbullah ஒன்றும் யோக்கியனல்ல என்பதை யாவரும் அறிவர். @ IR அவர் ஏற்கனவே மக்களுக்கு சேவை செய்திருந்தால் உங்களுக்கு இப்படி அவலிக்காத வாக்குப்பிச்சை கேட்க அவசியமேட்பட்டிருக்காது.
As Muslim we should do our duties justly. That's what Quran and sunnah has taught us.
Al Quran 5:8
5:8. முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.

ஹிஸ்புல்லா தெமலவர்களையே அதிகமாக குடியேற்றுகிற்றார், முஸ்லிம்கள் தமக்கு வாக்களிக்காமைக்கு பலிவாங்கவே அவ்வாறு செய்கிறார்!
யோகேசு தனக்கு வேண்டிய சிலருக்கு செய்த சிபாரிசை நிராகரித்தமையே இந்த காவி கொறடுவதற்கான காரணம்!

Post a Comment