Header Ads



'அபாயா அணிய முடியாது என்று கூறுவதற்கு, இலங்கையில் யாருக்கும் அதிகாரம் கிடையாது'

அதிகாரிகள் இன ஒற்றுமைக்காக பாடுபடுவதற்கு மாற்றமாக இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த முனையக்கூடாது. பெண்கள் அபாயா (Abaya) அணிவதென்பது முஸ்லிம்களுக்கான தனித்துவமான உடையாகும். பாடசாலைகளிலோ அல்லது வேறு அரச நிறுவனங்களிலோ அபாயா அணிய முடியாது என்று கூறுவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.

புதிதாக நியமனம் பெற்று தமிழ் பாடசாலைகளுக்கு செல்லும் முஸ்லிம் ஆசிரியைகள் கட்டாயம் சேலை (sari) அணிந்து வர வேண்டும் என்று அதிகாரிகளால் நிர்ப்பந்திக்கப்பட்டதாக கடந்த ஒரு சில வாரங்களாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இத்தகைய பிழையான நிர்ப்பந்தங்களை நிருவாகிகள் ஏற்படுத்துவதென்பது கண்டிக்கத்தக்கதாகும். இந்நாட்டில் உள்ள தேசிய இனங்களான சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் என மூவினத்தவர்களுக்கும் அவர்களுக்குரிய கலாச்சார உடைகளை அணிவதற்குரிய பூரண உரிமையுள்ளது. மேலும் இலங்கையில் ஆசிரியைகள் சேலை அணிந்துதான் கடமைக்கு வர வேண்டும் என்ற எந்தவொரு சட்டமும் கிடையாது.

தற்போது நாட்டிலே இனவாதம் தலை தூக்கியிருக்கின்ற ஒரு நிலையில் தமிழ் பேசும் மக்களுக்கிடையில் இத்தகைய பிரச்சினைகளை உருவாக்க நினைப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

முஸ்லிம்கள் தமிழ் பேசும் மக்களாக இருந்தாலும் இந்நாட்டின் தனித்துவமான ஒரு தேசிய இனமாகும். அவர்களுக்கென பிரத்தியேகமான கலாச்சாரமும் மத உரிமைகளும் உள்ளபோது இவ்வாறு கட்டாயப்படுத்துவதென்பதனை ஒரு மனித உரிமை மீறலாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

இவ்விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சருக்கு முன்னதாகவே தெரிவித்திருக்கின்றோம். இருப்பினும் அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இன்றும் இத்தகைய வற்புறுத்தல்கள் விதிக்கப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இவ்வாறன விடயங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்த விடயத்தினை கிழக்கு மாகாண கல்வி அமைச்சரினதும், உரிய அதிகாரிகளினதும் கவனத்திற்கு நாங்கள் கொண்டுவந்துள்ளதோடு இது விடயம் தொடர்பாக மாகாண சபையிலும் பேசியிருக்கின்றோம்.

ஆகவே நாட்டில் எந்தவொரு பிரதேசத்திலாவது முஸ்லிம் பெண்களுடைய தனித்துவமான அபாயா (Abaya) உடைகளை அணிவதில் ஏதேனும் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்ற பாடசாலை அதிபர்கள் அல்லது நிருவாகிகள் இருந்தால் கண்டிப்பாக அவைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

எனவே தமிழ் பாடசாலைகளில் கடமை புரிகின்ற முஸ்லிம் ஆசிரியர்கள் யாராவது இவ்வாறு நிர்ப்பந்திக்கப்பட்டால் அது விடயம் தொடர்பாக எங்களுக்கு உடனடியாக அறியத்தருவதன் மூலம் அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், மேலும் இவ்வாறான நிபந்தனைகளுக்கும் வற்புறுத்தல்களுக்கும் அடிபணிந்து சேலை அணிய வேண்டும் என்ற எந்தவொரு தேவைப்பாடும் கிடையாது நீங்கள் தொடர்ச்சியாக உங்களுக்கான பிரத்தியேக ஆடைகளை அணிய முடியும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

13 comments:

  1. வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால் எப்படி இருக்கும்?

    ReplyDelete
  2. தமிழ் ஆசிரியர்கள் முஸ்லீம் பாடசாலைகளில் அபாயா அணிந்து வர வேண்டும் என்று முஸ்லீம் அதிகாரிகள் சொல்லின்றார்களா

    அரசியல் வாந்தியை பிடித்து அதிகாரி யானால் இப்படித்தான் நடக்கும்

    ReplyDelete
  3. அபாயா இலங்கை முஸ்லிம்களின் கலாச்சார உடை அல்ல. சாரி அணியும் விதத்தில் அணிந்தால் அதை விட சிறப்பான உடை எதுவும் இல்லை. பல முஸ்லிம் ஆசிரியைகள் மிகவும் நேர்த்தியாக சாரி அணிந்து செல்கிறார்கள். இக்காலத்து பெண்கள் சாரி கட்டும் அலுப்பில் செய்யும் முறைப்பாடு தான் இது...

    ReplyDelete
    Replies
    1. Tamils like you do not have any right to talk about Muslims dress codes.

      Delete
    2. நீர் ஏனப்பா மற்றபெண்கள் சாரியணிந்து வருவதை பார்க்கவேண்டும்?

      தெரியாமல்தான்உள்ளது சாரியை தொப்பிளிலிருந்து எங்கோவரைக்கும் இறக்கி அணிந்துவந்து நாகரீகமென்பது,

      ஒருவிடயம் ஏற்கலாம், ஆடை வருத்தி அணியப்படவேண்டியதில்லை, சுதந்திரமாக, இலேசாக அபாயாவை அணிந்தால் உம்போண்றோரின் பார்வயில் விழாமலிருக்கலாம்.

      Delete
  4. மாற்றான் விடயத்தில் மூக்கை நுழைப்பவர்கள்:
    ஃ பொதுவாக மதி குறைந்தவர்
    ஃவேலையற்றவன்
    ஃ குழப்பவாதி
    ஃ சமுகமயமாகாதவன்
    ஃ பாடசாலைப் படியையேனும் மிதியாதவன்
    ஃ போதைவஸ்து பாவனைக்குட்பட்டவன்
    ஃ விதண்டாவாதி
    என இன்னும் பல சிந்தனைக் கோளாறுகளுக்கு உட்பட்டவராக இருப்பர்.
    சம்மந்தப்பட்டோருக்கு மட்டும்.

    ReplyDelete
  5. INTERNET READER
    அப்படியா? சாரி முஸ்லிம்களின் கலாசார உடை அல்ல. அபாயா முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, எல்லா பெண்களுக்கும் பாதுகாப்பான ஆடை.

    ReplyDelete
  6. @internet Reader, தம்பி ஆணுறுப்புக்கு கோயில் கட்டி அதற்க்கு உங்கவீட்டு பொம்பளைங்கள பாலுற்றி கும்பிட வெச்ச வக்கிரம் பிடிச்ச நீங்க பெண்களின் கண்ணியம் பற்றி பொதுவில் கதைக்க வரவேண்டாம். அடுத்து உங்க மூத்த தலைமுறை பெண்கள் எவருக்கும் பார்ப்பனர்கள் இடுப்புக்கு மேல ஆடை அணிய அனுமதி கொடுக்கவில்லை என்பதையும் மறக்க வேண்டாம். முலைவரி கட்டி பெண்களின் மார்பங்களை மறைத்த வம்சத்தில பொறந்த நீயெல்லாம் என்ன தைரியத்தில் பெண்கள் அதுவும் இஸ்லாமியப் பெண்களின் ஆடை விடையத்தில் பேசுறேன்னே புரியல?

    ReplyDelete
  7. Abbobacker! Are you ok? I think you are watching to much movies and Blue padam.
    You are act like Ganarasa Thero!

    ReplyDelete
  8. Anpu Andavar, அதெல்லாம் நாங்க பார்த்துப்போம் உன்னைப் போல வக்கிரம் பிடிச்ச்வனேல்லாம் இதில் கருத்து சொல்லதேன்னுதான் சொல்லுறேன், கேட்டா தமிழன்டா தமிழ் உயிர் மூச்சுடான்னு மேடைப் பேச்சு, ஆனா அற்பனுக்கு பவிசு வந்தால் போல் ஆங்கிலத்தில் பீத்திகிறது. போங்கடா டேய் உருப்படுற வழிய பாருங்க, வடக்கில் விபச்சராத்தில் ஈடு பட்டு இருக்கும் முன்னாள் பெண் புலிகளுக்கு முதல்ல சாபிடவாவது வழி பண்ணுங்க\

    ReplyDelete
  9. Aboobacker:l like to meet you,where we can meet in Colombo,puttalam,Jaffna or Batticalo.your comments and the way you treat other people is not good.I like to talk and clear your mindset and this is good for our future Muslim and Tamil generation. May Allah bless.

    ReplyDelete
  10. உங்க கூட உறவா? நீங்க கொடுத்த வலிகள், எங்கள் மீது சொன்ன பழிகள் எல்லாம் மறக்க முடியுமா? ஏழு தலைமுறைக்கும் வேண்டாம், எங்கள் தலையில் மண்ணள்ளி மீண்டும் போட்டுக் கொள்ள முட்டாள் இல்லை. என்னை சந்திக்கனும்ன்னா உங்க விலாசத்தை கொடுங்க நாடு வரும் போது சந்திக்கிறேன்.

    ReplyDelete
  11. Dear Aboobacker:I dont have any problem to come to your country and meet you....so whare you? and which country you are living?
    We need to clear all our problem and misunderstanding.
    Recently i met view Jaffna muslim friends in puttalam and I talked about you and your anger and hate about tamils.You konw why? they dont like your attitude against other people.

    I think we can meet soon.?

    ReplyDelete

Powered by Blogger.