Header Ads



சந்திரிக்கா அவமானப்படுத்தப்பட்டாரா..?

கம்பஹா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று கலந்துக் கொண்டு ஜே.வி.பியினால் அவமானப்பட்டதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும் கம்பஹா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது? ஏன் அவர் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டார்? என ஜே.வி.பியின் மாகாண சபை உறுப்பினர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிகழ்வில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றைய தினம் கலந்துக் கொண்டனர். ஆனால் சந்திரிக்கா தலைமையில் இந்த கூட்டம் இடம் பெற்றமை உண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததாக ஜே.வி.பியின் மாகாண சபை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்திற்கு ஏன் சந்திரிக்கா தலைமை தாங்குகின்றார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு “தான் முன்னாள் ஜனாதிபதி என்ற காரணத்திற்காகவே தன்னை இந்த நிகழ்விற்கு அழைத்துள்ளார்கள்” என்று சந்திரிக்கா பதிலளித்துள்ளார்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜே.வி.பியின் மாகாணசபை உறுப்பினர்,

மாவட்ட செயலாளர்கள் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மாத்திரமே இந்த கூட்டத்திற்கு தலைமை பொறுப்பேற்க வேண்டும்,

கம்பஹா மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரியோ அல்லது ஒரு அரச அதிகாரியோ இல்லை என்பதால் குமாரதுங்க இங்கு இருக்க முடியாது என்றும் அந்த உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த தற்போது அரசாங்கத்தில் இல்லை என்றாலும், அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மொரக்காஹந்த அணைக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்.

சந்திரிக்கா குமாரதுங்க நல்லிணக்க அலுவலகத்தின் தலைவராக இருந்தாலும் கம்பஹா மாவட்டத்தில் எந்த பொறுப்பையும் மேற்கொள்ள அவருக்கு உத்தியோகப்பூர்வமான அதிகாரமும் இல்லை என ஜே.வி.பியின் மாகாண சபை உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.