Header Ads



பள்ளிவாசலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு - குருட்டு முஸ்லிம் அரசியல்வாதிகளை காணவில்லை


 -அஸ்லாம்-

தம்­புள்ளை புனி­த­பூ­மியில் முஸ்­லிம்கள் புதி­தாக பள்­ளி­வா­ச­லொன்றை நிர்­மாணிப்­ப­தற்கு எதி­ராக தம்­புள்­ளையில் எதிர்­வரும் 19ஆம் திகதி ஆர்ப்­பாட்­ட­மொன்­றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்  ஆர்பாட்டம் தொடர்­பான அழைப்­புகள் சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் முக­நூ­லிலும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. 

இலங்கை சர்வதேச ரீதியாக பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ள வேளை பள்ளிவாசல் ஒன்று தாக்கப்பட்டு அதனை அகற்றுமாறு ஊர்வலம் செல்வது போன்ற நிகழ்வுகள் இந்த நாட்டை சிக்கலுக்குள் மாட்டக் காத்திருக்கும் சக்திகளுக்கு நாமே கதவைத் திறந்து கொடுப்பது போன்றதாக இருக்கும்.
தர்மத்தைப் பேணும் பள்ளிவாசல் ஒன்றுக்குக் கூட இந்த நாடு அங்கீகாரம் அளிக்க மறுக்கின்றது என்று பிரச்சாரம் செய்ய முற்படுவதற்கு இவ்வாறான சம்பவங்கள் தொடர இடமளிப்பதால் பிரச்சாரம் செய்வதற்கு நாமே வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.

ஷீஆ,சியோனிச சக்திகளது கரங்கள் என்றுமில்லாதளவுக்கு இந்த நாட்டில் பலம் பெற்றுள்ள நிலையில் இவ்வாறான நிகழ்வுகள் இல்லை என்று நிராகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான ஒரு சதியை முறியடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சதி பற்றிக் குறிப்பிடும் முஸ்லிம் தலைவர்கள்  அரசினை வற்புறுத்த வேண்டும். ஏன் அவ்வாறு செய்யாதிருக்கிறார்கள். 

சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அரசை வலியுறுத்த வேண்டும்.

இந்த விடயங்களில் சட்டமும் நீதியும் நிலைநாட்டப்படாது மென்மைப் போக்கினை கடைப்பிடித்தால் இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற இடமுண்டு. இது குறித்து அரசு விழிப்பாக இருக்க வேண்டும்.
உருவாகும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதனை ஒத்திப்போடாது உடன் தீர்வு காண முற்பட வேண்டும். கடந்த ஒரு மாத காலத்துக்குள் கிண்ணியா,அம்பாறை,சம்பவங்களால் இந்த நாட்டின் முஸ்லிம் சமூகம் அதிர்ச்சியடைந்துள்ளது. அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்ற அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் தனித் தனியாக சில நடவடிக்கைகளை எடுத்தாலும் ஒன்றுபட்டு இந்தப் பிரச்சினைகளை எதிர் நோக்காதது குறித்து கவலை கொண்டுள்ளது. சமூகத்தின் இருப்போடு தொடர்பான விசயமாக இருப்பதனால் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் ஒன்றுபட்டுச் செயற்படுவது அவசியமாகும். 

பிரச்சினைகளை சிவில் தலைமைத்துவத் திற்கு விட்டு விட்டு முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் ஒதுங்குகின்றதா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது.

முஸ்லீம்  சார்பான  தொண்டு  நிறுவனங்களுக்கு  சிவில் தலைமைத்துவத்தின் பணி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களால் ஓர் எல்லைக்குத்தான் செல்ல முடியும். இந்த நிலையில் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் ஒன்றுபட்டு இவ்வாறான சம்பவங்கள் தொடராதிருப்பதற்கு ஆக்கபூர்வமான சில செயற்பாடுகளை அரசு மூலம் செய்வதற்கு உடனடியாக ஆவன செய்ய வேண்டும்.

அவ்வாறு தவறும் பட்சத்தில் தம்புள்ளை, குருநாகல், தெஹிவளை எனத் தொடரும் சம்பவங்களது பட்டியல் மேலும் நீடிக்க இடமுண்டு.

No comments

Powered by Blogger.