Header Ads



முழு சமு­தா­யம் மீதும், தீவி­ர­வாத முத்­திரை பொறிக்க வேண்­டா­ம் - ரிஸ்வி முப்தி


ஐ.எஸ். அமைப்­புடன் இலங்கை முஸ்­லிம்கள் தொடர்­பு­பட்­டுள்­ள­தாக நீதி­ய­மைச்சர் விஜே­தாஸ ராஜபக்ஷ தெரி­வித்த கருத்­துகள் முஸ்­லிம்­களை கவலை கொள்ளச் செய்­துள்­ளன. ஐ.எஸ். அமைப்பு ஒரு கடு­மை­யான தீவி­ர­வாத இஸ்­லா­மிய விழு­மி­யங்­க­ளுக்கு எதி­ரான அமைப்­பாகும். 

இவ் அமைப்பை 2014 இலி­ருந்தே உலமா சபை கண்­டித்து வரு­கி­றது. ஒரு தனி நபர் தீவி­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டை­ய­வ­ராக இருந்தால் அவர்­க­ளுக்கு எதி­ராக உரிய நட­வ­டிக்­கையை எடுக்­கு­மாறு உலமா சபை வேண்­டுகோள் விடுக்­கி­றது.

மாறாக முழு சமு­தா­யத்­தையும் தீவி­ர­வாத முத்­திரை பொறிக்க வேண்­டா­மெ­னவும் கோரு­கி­றது என அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா சபை அர­சாங்­கத்தை கோரி­யுள்­ளது.

அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி இக் கோரிக்­கையை விடுத்­துள்ளார். அவ­ரது கோரிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

ஐ.எஸ். போன்ற இஸ்­லா­மிய போத­னை­க­ளுக்கு முர­ணாக செயற்­படும் தீவி­ர­வாத அமைப்­பு­க­ளோடு எவ­ரா­வது தொடர்­பு­பட்டால் நாம் அதனை மிகவும் வன்­மை­யாகக் கண்­டிக்­கிறோம். இவ்­வா­றான அமைப்­பு­க­ளுக்கும் இஸ்­லா­மிய அடிப்­படை விழு­மி­யங்­க­ளுக்கும் எவ்­வித தொடர்பும் கிடை­யாது என்­பதை உறு­தி­யாகக் குறிப்­பி­டு­கின்றோம்.

இஸ்லாம் எமக்கு அனைத்து மனி­தர்­க­ளு­டனும் சமா­தா­ன­மா­கவும் நீத­மா­கவும் பொறு­மை­யா­கவும் நடந்து கொள்­ளு­மாறு ஏவு­கின்­றது. மேலும் அநி­யாயம் இழைத்தல், தீவி­ர­வாத செயற்­பா­டு­களில் ஈடு­படல் போன்­ற­வற்றை இஸ்லாம் வன்­மை­யாகக் கண்­டிக்­கி­றது. மேலும் குழப்பம் விளை­வித்தல், கடும் போக்­காக நடந்து கொள்ளல், கொலை செய்தல் ஆகி­ய­வற்றை பெரும்­பா­வங்­க­ளா­கவும் குற்­றங்­க­ளா­கவும் இஸ்லாம் கரு­து­கின்­றது.

நீதி­ய­மைச்சர் இலங்­கையின் முஸ்லிம் சர்­வ­தேச பாட­சா­லை­களில் மாண­வர்கள் வெளி­நாட்­டி­லி­ருந்து வருகை தரும் இஸ்­லா­மிய விரி­வு­ரை­யா­ளர்­களால் மூளைச் சலவை செய்­யப்­ப­டு­வ­தாகக் கூறி­யுள்ளார். இது தவ­றான கருத்­தாகும். இலங்­கைக்கு அர­பிகள் வந்து போவது ஒன்றும் புதி­தல்ல. 2000 வரு­டத்­துக்கு முன்­பி­ருந்தே இலங்­கைக்கு அர­பிகள் வந்து போயுள்­ளனர்.

இலங்­கைக்கு சுற்­றுலா விசாவில் வருகை தரும் அவர்கள் மத்­ர­ஸாக்கள், சர்­வ­தேச பாட­சா­லை­க­ளுக்கும் போகி­றார்கள். வேறு மதத் தலை­வர்கள் வருகை தந்தால் அவர்கள் பன்­ச­லை­க­ளுக்கும் ஆல­யங்­க­ளுக்கும் விஜயம் செய்­கி­றார்கள். இதில் தவ­றேதும் இல்லை. 

இலங்­கையின் உல­மாக்­களில் 95 வீத­மானோர் இலங்­கை­யிலே படித்­த­வர்கள். அவர்கள் வெ ளிநா­டு­களில் படிக்­க­வில்லை. இலங்­கையின் மத்­ர­ஸாக்­களில் மற்றும் பாட­ச­ாலை­களில் தீவி­ர­வாதம் போதிக்­கப்­ப­ட­வில்லை.

அங்கு கருணை, அன்பு என்­ப­ன­வற்­றுடன் இலங்­கையில் நடை­மு­றை­யி­லுள்ள பாடத் திட்­டமே போதிக்­கப்­ப­டு­கி­றது.

நீதி அமைச்சரின் கருத்துகள் ஏனைய மதத்தவர்கள் மத்தியில் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பாக தவறான கருத்துகளை உருவாக்குவதாக அமைந்துள்ளது.

அரபு படிப்பிப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து அரபிகள் வருவதற்குத் தேவையில்லை. இலங்கையில் படித்த உலமாக்கள் போதியளவு இருக்கிறார்கள் என்றார். விடிவெள்ளி  ARA.Fareel

4 comments:

  1. Yes Mufthi Sahab, even that one isolated thing never indicate any security threats to our country despite the fact they involve in Syrian battle field. But we condemning even itself. Our Ulamas whether studies here or overseas doesn't matter as they always opposed all forms of violence in our community.

    ReplyDelete
  2. தூங்குகிறவனை எழுப்பலாம் தூங்குவது போல நடிப்பவனை எழுப்ப முடியாது.ஒரு நாட்டில் என்ன நடக்கிறது என்ற அறிவில்லதவர் நீதி அமைச்சர் என்றால் அந் நாட்டில் எப்படி நீதியை எதிர் பார்க்க முடியும்.அல்லது ஆதாரமற்ற ஒரு பழய செய்தியை பா/மன்றத்தில் அதுவும் ஒரு சிறுபாண்மை இணத்திற்கு இக்கட்டான காலகட்டத்தில் தூசி தட்டி எடுத்து போசியிருக்கிறார் என்றால் இவர் வேறு ஒருவருடைய நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே பேசுகிறார்.

    ReplyDelete
  3. This title is wrong then they may think that : "So, some of the muslims are terrorists...?"
    So, we say there is no terrorism in Islam and who is supporting for terrorism then he is not a Muslim..because a Muslim name can not be a Muslim...

    ReplyDelete
  4. How many of your comments not published under this heading ?

    ReplyDelete

Powered by Blogger.