Header Ads



ஞானசாரருக்கு எதிரான வழக்கு - ஜனவரியில் விசாரணை

நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜனவரி 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று -18- உத்தரவிட்டுள்ளது.

ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதவான் ரங்க திஸாநாயக்க முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட போது, நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிமன்றத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தி சட்டமா அதிபர் ஞானசார தேரருக்கு எதிராக திருத்த குற்றப் பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த குற்றப் பத்திரிகைக்கு எதிராக அடிப்படை எதிர்தரப்பு வாதங்களை முன்வைக்க உள்ளதாக ஞானசார தேரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

2 comments:

  1. There are so many other cases against him still pending, what happens to those cases? Will this government ever have guts to bring him to trial on those charges? I don't think so because those cases are for crimes he committed against Muslims.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

Powered by Blogger.