November 23, 2016

முஸ்­லிம்கள் ஏமாறப் போவ­தில்லை - அஸ்வர்

பெபி­லி­யான பெஷன் பக் ஆடை தொழிற்­சா­லையில் ஏற்­பட்ட தீ மின் ஒழுக்­கினால் ஏற்­பட்­டதா அல்­லது சதி­கா­ரர்­களின் நாச­கார வேலையா என்­பதை அர­சாங்கம் உடன் மக்­க­ளுக்கு அறி­விக்க வேண்டும் என்று முஸ்லிம் முற்­போக்கு முன்­னணி செய­ல­திபர் ஏ.எச்.எம். அஸ்வர் தனது ஊடக அறிக்­கையில் குறிப்­பிட்­டி­ருக்­கிறார். 

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­வது;

இது குறித்து தீய­ணைக்கும் படை­யினர் உடன் கருத்­து­கூற முடியும் என்று விஷ­ய­ம­றிந்த நிபு­ணர்கள் கருத்து வெளி­யிட்­டுள்­ளனர். இர­சா­யனப் பகுப்­பாய்­வா­ளர்­களும் தாம­த­மின்றி தமது அறிக்­கையை அர­சுக்கு சமர்ப்­பிக்க வேண்டும். 

இல்­லையேல் மக்கள் அவ­தா­னத்தை திசை­தி­ருப்ப விஷ­மிகள் அங்கும் இங்கும் குற்ற விரல்­களை காட்­ட­மு­னைவர். இதனால் இன்று முஸ்­லிம்கள் ஏமாறப் போவ­தில்லை. முன்பு அர­சாங்­கத்தில் நிகழ்ந்த அசம்­பா­வி­தங்கள் அனைத்­துக்கும் மஹிந்த ராஜபக் ஷவை குற்றம் சாட்­டினர்.

அக்­குற்றச் சாட்­டுக்கள் அனைத்தும் இப்­போது பொய்யாய் பொசிந்­துள்­ளது. அளுத்­க­மையில் நடந்த தாக்­குதல் கூட அப்­போ­தைய அரச தலை­வர்கள் தான் செய்­தார்கள் என்று குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது.

இப்­போது முழு சுரக்­காயும் சோற்­றி­லி­ருந்து கிளறி எடுக்­கப்­பட்­டு­விட்­டது. அந்த அநி­யா­யத்தை செய்­த­வர்கள் இன்­றைய நல்­லாட்­சியில் அமைச்­சர்­க­ளாக பதவி வகிக்­கின்­றார்கள் என்று இனங்­காட்­டப்­பட்­டுள்­ளனர். 

ஷரீ ஆ சட்­டத்தை தாக்கு தாக்­கென்று  சாடி ஒரு நூல் கூட சம்­பிக்க ரண­வக்க எழுதியுள்ளார். அதில் உள்­ள­டங்­கி­யி­ருந்­தற்­கி­ணங்­கவே மத்­ர­ஸாக்கள், குர்ஆன் பாட­சா­லைகள் தீவி­ர­வா­தி­களின் பயிற்­சி­க­ள­மாக விளங்­கு­கி­றது என்றும் அவைகள் மூட வேண்டும் என்றும் அட்­ட­காசம் புரி­கின்­றனர். இலங்கை வந்த நாளி­லி­ருந்து மத்­ர­ஸாக்­களும் குர்ஆன் பாட­சா­லை­களும் மார்க்கம் போதிப்­பதில் மகத்­தான சேவை செய்து வரு­வது அனை­வரும் அறிந்த விடயம். பெளத்த அற­நெறி, ஹிந்து மத பாட­சா­லைகள் மூடு­மாறு யாரும் கேட்­க­லாமா?

32 பேர்கள் ஐ.எஸ்.ஐஎஸ். இல் சேர்ந்­துள்­ளனர் என்ற அநீ­திக்கு முட்டுக் கொடுக்கும் நீதி அமைச்­சரின் கூற்­றுக்கு நல்­ல­தொரு பதில் இணை­யத்­தளம் மூலம் முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கேதா­பய ராஜபக்ஷ கூறி­யுள்ளார். ஐ.எஸ் .உடன் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எவ்­வித தொடர்­பு­மில்லை என்று தான் தான் முதலில் அறிவித்ததாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார். 

6 கருத்துரைகள்:

அவனையும் இவனையும் குற்றம்சாடிக் கொண்டே காலத்தைக்கடந்தும் முஸ்லிம் சமூகத்துக்கு நீர் செய்த நன்மை என்ன? வேலையைப்பாரு மச்சான். ரணில் கிட்டப் போய் ஒரு ரை பண்ணினால் டிபுயிடி ஒன்றாவது கிடைக்குமா என முயற்சி செய்தால் என்ன?

உங்கள் நம்பிக்கைக்குறிய மகிந்த புத்தியாக இருந்திருந்தால் இப்படி பொலம்பவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
1. ஜனாதிபதி தேர்தலை உரிய நேரத்தில் வைத்திருந்தால் இன்றும் அவர் தான் ஹீரோ.
2.இனவாதிகளோடு சேராதிருந்தால் தேர்தலில் வென்று இன்றும் அவர் தான் ஹீரோ.

நல்லாட்சி அரசில் இது நடக்க கூடாது மகிந்த அரசில்தான் நடக்கணும் என்று ஆசப்படர்ரார் போல ..

Vasu deva and mr azwer may allah guide them

We do not such hypocritical in our community

So what shall we, Muslims, do now? Flop UNP and vote for SLFP back again?

Post a Comment