Header Ads



இலங்கையில் பாரிய, முதலை பிடிபட்டது (படங்கள்)


நில்வளா கங்கையில் பாரிய முதலையொன்று சிக்கியுள்ளது. கங்கையிலிருந்து பாரிய முதலையொன்று கிராமத்திற்குள் பிரவேசித்துள்ளது.

மாத்தறை, வெல்கொட பிரசேத்தில் வைத்து குறித்து முதலை வனிவிலக்கு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 18 அடியுடனான இந்த முதலை இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட முதலைகளில் மிக்பெரியதென வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை வெளிப்பகுதிக்கு வந்துள்ள இந்த முதலை அந்த பகுதி மக்கள் மற்றும் வனவிலங்கு அதிகாரிகளின் பாரிய முயற்சியில் நில்வளா கங்களையில் விடுவிக்கப்பட்டுள்ளது.

மூன்று பாதங்களை கொண்டுள்ள இந்த முதலை, பிறப்பில் இருந்தே அவ்வாறான நிலைமையை கொண்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை பொலிஸ் அதிகாரிகள், மிரஸ்ஸ வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் கலமெடிய வனவிலங்கு அதிகாரிகள் அதிகாரிகளின் உதவியுடன் இந்த முதலை நில்வளா கங்ககையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



1 comment:

  1. சும்மா தேவையில்லாத விஷயங்களுக்கு வீடியோ எடுத்து போடுவாங்க ஆனால் இந்த மாதிரி விஷயங்களுக்கு ஒன்றுமில்லை சும்மா புகை படம் மட்டும் தான்.

    ReplyDelete

Powered by Blogger.