Header Ads



மனித உரிமை ஆர்வலர்களையும், சுட்டுக் கொல்வேன் - பிலிப்பின் அதிபர்

பிலிப்பின்ஸில் போதை மருந்து கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் போலி என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மனித உரிமை ஆர்வலர்களையும் சுட்டுக் கொல்லப்போவதாக அந்த நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

போதை மருந்துக் கடத்தல் கும்பல்களின் வன்முறையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த பிலிப்பின்ஸில் கடந்த மே மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது.

அந்தத் தேர்தலில் போட்டியிட்ட ரோட்ரிகோ டுடேர்தே, தான் வெற்றி பெற்றால் போதை மருந்து கடத்தல்காரர்களை லட்சக் கணக்கில் கொன்று குவிக்கப்போவதாகவும், அவர்களது உடல்களைத் தின்று கடல் மீன்கள் கொழுக்கும் என்றும் பிரசாரத்தின்போது கூறினார்.

இதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

எனினும், அந்தத் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்த டுடேர்தே, பிலிப்பின்ஸ் அதிபராக கடந்த ஜூன் மாதம் பொறுப்பேற்றார்.

அவர் பதவியேற்றதிலிருந்து இதுவரை 4,800-க்கும் மேற்பட்ட போதை மருந்துக் கடத்தல்காரர்கள் காவல்துறையினரால் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ரோட்ரிகோ டுடேர்தே திங்கள்கிழமை கூறியதாவது:

நான் குற்றவாளிகளை படுகொலை செய்வதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் சொல்வதற்காக நான் கொலை செய்வதை நிறுத்தினால் குற்றவாளிகள் பல்கிப் பெருகுவர்.

சிறிது காலம் கழித்துப் பார்த்தால் கொல்லப்பட வேண்டிய குற்றவாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும்.

அப்போது அவர்களுடன் சேர்த்து, அவர்கள் பல்கிப் பெருகக் காரணமான மனித உரிமை ஆர்வலர்களையும் கொல்வேன் என்றார் டுடேர்தே. அவரது இந்தப் பேச்சு மனித உரிமை ஆர்வலர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதுகுறித்து "ஆம்னஸ்டி' சர்வதேச மனித உரிமை அமைப்பின் பிலிப்பின்ஸ் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிபரின் போதைப் பொருள் கும்பலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் அனைவர் மீதும் வெறுப்பை உமிழும் வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளது" என்று குற்றம் சாட்டியுள்ளது.

4 comments:

  1. Human right is important, BUT these Human rights group is playing double standard, They never find mistake in US and WEST human right violation around the world. In the name of peace invading a country and killing millons.. especially count in IRAQ, VIYATNAM, SYRIA , Plestine so on...

    Where were these HUMAN rights groups?

    Good answer Mr. President.

    ReplyDelete

Powered by Blogger.