Header Ads



மாணவனின் விருப்பத்தை, நிறைவேற்றிய ஜனாதிபதி


80 ஆண்டுகள் பழமைவாய்ந்த மட்டக்களப்பு நாசிவன்தீவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வரலாற்றில் முதற்தடவையாக புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ந திலீப்குமார் சனூஜன் எனும் மாணவர் இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார். 

ஜனாதிபதியைச் சந்திக்க வேண்டுமென்ற அவரது விருப்பத்தை நிறைவேற்றிய இச் சந்திப்பில் மாணவர் திலீப்குமாருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து பரிசில்களையும் ஜனாதிபதி அவர்கள் வழங்கினார்.

பாடசாலை அதிபர் ரி.ஜெயபிரதீபன், வகுப்பாசிரியர் ஏ.மோகன்ராஜ், மாணவனின் பெற்றோர் ஆகியோர் இச்சந்திப்பில் பங்குபற்றினார்கள்.  

அதேவேளை 2016 ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்தோரின் அடைவு மட்டத்தின் அடிப்படையில் தேசிய ரீதியில் முதலாமிடத்தைப் பெற்ற குருணாகல், மாகோ கல்வி வலயத்துக்குரிய கல்கமுவ எரியாவ கனிஷ்ட வித்தியாலய மாணவர்களும் ஜனாதிபதி செயலகத்தில்  ஜனாதிபதி அவர்களைச் சந்தித்தனர்.

வருகை தந்த 19 பாடசாலைப் பிள்ளைகளுக்கும் ஜனாதிபதி பாராட்டுக்களைத் தெரிவித்து, பரிசுப் பொருட்களையும் வழங்கிவைத்தார். 

அவர்களுடன் அளவளாவிய ஜனாதிபதி பாடசாலையின் குறைபாடுகள் பற்றி கேட்டறிந்தார். பாடசாலைக்கு புதிதாக கட்டிடமொன்றை வழங்குமாறு மாணவர்கள் கேட்டுக்கொண்டபோது, கட்டிடத்துக்கான செலவு மதிப்பீட்டினை தனக்கு அனுப்புமாறு பாடசாலை அதிபர் ஆர்.எம். திலகரத்னவிடம் தெரிவித்தார்.

மாகோ வலயக் கல்விப் பணிப்பாளர் டப்ள்யூ.எம். அருணசாந்த, கல்கமுவ கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆர்.ஏ.எச்.எம்.எஸ். பண்டார உட்பட்டோர் இச்சந்திப்பில் பங்குபற்றினார்கள்.    

2 comments:

  1. வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  2. மாணவனின் நியாரமான ஆசை நிறைவேறியுள்ளது.இந்த மாணவனின் ஆசையால் ஜனாதிபதியை சந்திதுள்ள இவரால் அந்த பாடசாலைக்கு புதிய கட்டிடம் கிடைக்கப்போகீறது.அந்த கட்டிடத்திற்கு மாணவான் பெயரை சூட்டுவது பொருத்தமானதும் மற்ற மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் ,

    ReplyDelete

Powered by Blogger.