Header Ads



ஆர்ப்பாட்டங்களின்போது, நிதானம் தேவை


(நவமணி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்)

இலங்கையில் அமுலிலுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்து (தனியார்) சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது குறித்த விவாதம், அரச, சமூக மட்டங்களில் மிகவும் தீவிரவமாக நடைபெற்று வருகின்ற இவ்வேளையில், கடந்த வியாழனன்று, முஸ்லிம் அமைப்பொன்று நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாக, முஸ்லிம் சமூகத்தை கொச்சைப்படுத்தும், முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான வெறுப்பு பிரசார நடவடிக்கைகள் பேரினவாதத் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முஸ்லிம் விவாக, விவாகரத்து (தனியார்) சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்ற கோரிக்கைகள் பல வருடங்களாக முன்வைக்கப்பட்டு, அதற்குரிய பரிந்துரைகளை வழங்குவதற்காக, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சலீம் மர்சூபின் தலைமையிலான குழு செயற்பட்டு வருகின்றது.

எவ்வாறாயினும், ஜி.எஸ்.பி. பிளஸ்ஸை பெற்றுக்கொள்வதற்காக, சர்வதேச நியமங்களின்படி, முஸ்லிம் விவாக, விவாகரத்து (தனியார்) சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக, அரசு அறிவித்ததன் பின்னரே, இந்த விவகாரம் பூதாகரம் எடுத்துள்ளது. 

முஸ்லிம் தனியார் சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை முஸ்லிம் தரப்புக்களினாலேயே முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஏனெனில், இஸ்லாத்தின் அடிப்படைகளுடனும், இஸ்லாமிய விழுமியங்களுடனும் முரண்படுகின்ற பல்வேறு விடயங்கள், முஸ்லிம் தனியார் சட்டத்தில் உள்ளன. 

எனினும், முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான முன்னெடுப்பு, வெளிநாட்டு வேண்டுகோள்களுக்கிணங்க மேற்கொள்ளப்படுவதை எதிர்த்தே, முஸ்லிம் தரப்புக்களிடமிருந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. முஸ்லிம் விவாகர, விவாகரத்து (தனியார்) சட்டத்தில் கை வைக்கப்படுவதை எதிர்த்து, ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத், கடந்த வியாழனன்று, கொழும்பு மாளிகாவத்தையிலிருந்து புறக்கோட்டை நோக்கி ஓர் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தது.

பேச்சு சுதந்திரமும், ஒன்றுகூடும் சுதந்திரமும் இந்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளபோதும், அந்த சுதந்திரங்களை முறையாகப் பயன்படுத்துவதற்கு, ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் தவறிவிட்டது என்றே பலரும் தெரிவிக்கின்றனர். ஏனெனில், ஆர்ப்பாட்டத்தின்போது, ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள், இந்த நாட்டிலுள்ள பேரினவாதிகளுக்கு அவல் கிடைத்தாற்போல் அமைந்துள்ளன.

முஸ்லிம் சமூகம் தனது விவகாரங்களை கையாள்வதற்கு, இராஜதந்திர வழிமுறைகளை கையாள்வது போன்று, ஆர்ப்பாட்டம், ஒன்றுகூடல்கள் போன்ற வழிமுறைகளையும் பயன்படுத்தலாம். அதில் தவறில்லை. ஆனால், ஆர்ப்பாட்டங்களின்போது எவ்வாறு கருத்து வெளியிடுவது? என்பது குறித்து ஆழ்ந்த நோக்கு அதற்கு வேண்டும். ஆனால், ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் அதில் தவறு விட்டுள்ளது.

பேரினவாதிகள் விமர்சிக்கப்படல் வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இலங்கை பௌத்த பெரும்பான்மை மக்களை கொண்ட நாடாயினும் இனவாதிகள் ஓர் சிறு குழுவினரே என்பதை கருத்திற்கொண்டு, விமர்சிக்கும்போது கையாள வேண்டிய வார்த்தைகளும், பிரயோகங்களும் மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும். ஓர் சிறு இனவாத குழுவை விமர்சிக்கச் சென்ற நாம் பெரும்பான்மை பௌத்தர்களை பகைத்துக்கொண்ட நிலைமை வந்துவிடக்கூடாது. ஒரு அமைப்பு என்ற வகையில் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் அதில் பெரும் தவறு விட்டுள்ளது.

சிங்கள பௌத்த சமூகத்தை பொறுத்தவரையில், காவியுடை அணிந்த துறவிகளுக்கு, அவர்கள் பெரும் மதிப்பு வழங்குகின்றனர். துறவிகளின் நடவடிக்கைகள் எவ்வாறு அமைகின்றபோதும், காவியுடைக்கான கௌரவம் அவர்களிடம் குறைவதில்லை. எனவே, இனவாத துறவிகளுக்கு எதிரான சிங்களவர்களும்கூட, ஆர்ப்பாட்டத்தின்போது பயன்படுத்தப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள் குறித்து கவலை அடைந்துள்ளனர். ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத், தனது பக்கத் தவறுகளுக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும்.

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் காரசாரமான கருத்துக்கள், இலங்கையின் மொத்த முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்பதை ஏனைய முஸ்லிம் அமைப்புக்களும், நிறுவனங்களும் இந்நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும். 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாக, முஸ்லிம் கவுன்ஸில், தேசிய சூறா சபை என்பன கூட்டாக அறிக்கை விடுத்து, இதனைத் தெளிவுபடுத்த வேண்டும். அப்போதுதான், இனவாதிகள் எப்படியேனும், சிங்கள சமூகத்திலுள்ள நல்லவர்களில் ஏற்பட்டுள்ள காயங்களையேனும் ஓரளவு இல்லாமலாக்கலாம்.

14 comments:

  1. SLTJ முன்னேடுத்த ஆர்ப்பாட்டம் என்று உலகமே சரி என்றும் தேவையானதை அல்லாஹ் அந்த பேச்சாளர்களின் எண்ணத்தில் போட்டு பேச வைத்தான் என்றும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் பலர் நினைக்கும் இந்த தருணத்தில் சிலர் அவர்களின் இருப்புக்காக பேசுவதை புறக்கணிப்பது பொது மக்களாகிய எமது கடமை அல்லாஹ் SLTJ முன்னேடுத்த இந்த வேளைக்கு உதவி செய்வானாக 03-11-2016 வரை எந்த அறிக்கையும் விடாதவர்கள் இப்ப அறிக்கையும் SLTJ யை குறைகூறவும் தலைப்பட்டுள்ளார்கள் பத்திரிக்கை தர்மம் பேணுவது சிறந்தது

    ReplyDelete
  2. Kavikalai vida intha polikalidamirunthu allah enkalai kaappanaaka

    ReplyDelete
  3. முஸ்லிம் மக்கள் தலைமைகளின்றி தவிக்கும் நேரத்தில் இப்படியான ஒரு அறிக்கை அவசியமானது. உயிரை பணயம் வைத்து போராடிய அளுத்கமை மக்களுக்கு பொதுபலுவின் அட்டூழியம் மறக்க முடியாதது.
    TNTJ யின் தைரியத்தை பாராட்டுகிறோம்

    ReplyDelete
  4. பீ.ஜேயின் அடிச்சுவடுகளை பின்பற்றும் SLTJ குழுவினர்கள் இஸ்லாமியர்களா??? என்று கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
    எனவே முதலில் இஸ்லாமியர்களின் சட்டட திட்டங்களை பேசுவதற்கு முன் தாம் தௌபா செய்து இஸ்லாமியனாக மாற முயற்சி செய்யட்டும். அதுவரை அவர்கள் இவ்விடயங்களைப் பற்றி பேசவே தேவையில்லை.
    குறித்த பிரச்சினைகளை முஸ்லிம்கள் பார்த்துக்கொள்வார்கள்.

    அத்தோடு அன்மையில் உருவாக்கப்பட்ட அகில இலங்கை தொளஹீத் உறுப்பினர்கள் மிக விரைவில் SLTJ கூட்டத்தினர்கள் அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத் என்ற அடிப்படையில் உள் தொளஹீத் வாதிகளா? இல்லையா? என்பதனை மக்கள் மயப்படுத்துங்கள். தௌஹீத் அமைப்பை பின்பகற்றக்டகூடிய பாரமர மக்கள் இவனுகளை பின்பற்றி அநியாயமாக நரகத்திக்குச் செல்வார்கள்.

    ReplyDelete
    Replies
    1. எப்படிங்க?
      நீங்க முஸ்லிம்தானா எதைவைத்து உங்களை முஸ்லிம் என்று சொல்றது? றஸூல்ல்லாஹ் குறிப்பிட்ட 72/73 கூட்டத்தில்தான் நீங்க இருக்கீங்க!
      ஷஹாதாசொல்லி நீங்க முஸ்லிமாவுங்க ஒன்னாவது!
      வஹ்ல்
      உள்ளத்தில் வந்தா இப்படி வார்த்தை வரும்

      Delete
    2. உன்மையான முஸ்லிம் யாறென்பதை அல்லாஹ் மட்டும் தான் அறிவான்.
      ஸகராத் நேரத்தில் ஒவ்வொருவரும் அரிந்து கொள்வர்.
      கப்ரு வனங்கிகளை உன்மை முஸ்லிகளென்று சிலர் சொல்கிரார்கள்.

      Delete
  5. unkalap pola eluththaalarkellam muddaithaan sirantha paathukaappana idam.

    ReplyDelete
  6. I previously stated a comment that this type of protest will not be successful. It is true now. the rulers neglected the protest. That's why I stated to involve every Muslims to unite under one raw to protest but we should not represent by a name of a group. There is no use in this protest conducted by SLTJ but they put us into more trouble now. However, protest is finished now. we cannot give now press statements like NAVAMANI. Why this type of NAVAMANI press statement was not given before protest in order reduce the errornious.

    It's clearly understood that why SLTJ was hurry to do a protest in this issue without consulting in legel way. It's for many reasons. the SLTJ may wanted to show their strength to foreign Muslim countries to get more money from them. I can reveal it by the photos of the protest there. One slogan board shows only SLTJ name. It means this group wanted to show to foreign countries the activities of SLTJ in order to get money. Because many groups in Sri Lanka will not active without money from foreign countries. And many childrens was there. It's avoidable.

    In my point of view, This type of protest should not done by SLTJ or any other groups but should done by every Muslims of Sri Lanka. But unfortunately they divided us to many groups. That's the problem (EGO).

    Anyhow, I pray Allah to get a good reply from rulers regarding this issue.

    My kind request to the peoples, we will unite under one raw inshallah to fight against injustice in the future at least. We will be with eeman. Allah will protect us.

    ReplyDelete
  7. SLTJ is not suitable to represent the muslim community at all. they are comprised of the most emotionally driven leadership. I personally distant myself from their ideologies and actions.

    ReplyDelete
  8. CAN SLTJ COME UNDER THE GUIDANCE OF ACJU? ACJU IS THE ONE AND ONLY LEADING ISLAMIC INSTITUTION IN SRI LANKA WHICH CAN ACT FOR THE WHOLE MUSLIMS IN THE COUNTRY. SLTJ MEMBERS SHOULD NOT BECOME SPEAKERS FOR THE MUSLIMS IN THE COUNTRY. PLEASE GO TO TAMIL NADU AND DO YOUR DAHWA.

    ReplyDelete
  9. Sltj irukkirathalathaan bbs vara payapaduraan illanna unga veettukkulla vanthu uthaippan!!! iman ullavanukku payam varaathu!l iman illanna varum !! Veettukkulla pohi kathava satha sollura koottam illai!!! Sltj keep it up

    ReplyDelete
  10. SLTJ யினரிடம் நாம் கேட்பது ....
    உங்கள் ஆர்பாட்டத்திற்கு குர்ஆன் ஹதீஸிலிருந்து ஆதாரம் தரவும்..
    நீங்கள் தானே குர்ஆன் ஹதீஸ் சொல்லாததை செய்யமாட்டீர்கள்...

    ReplyDelete
  11. So Navamani is saying....what????
    Is this Navamani National News Papers...? then how they can not understand the seriousness about this law...?
    All are childish...backing Navamani some1...!!!

    ReplyDelete

Powered by Blogger.