November 08, 2016

கேவலமாக பேசிய ஞானசார, முஸ்லிம்களை கொல்லுவோம் என்பவர்களுக்கு எதிராக முறைப்பாடு

முஸ்லிம்களை நெருப்பு வைத்துக் கொல்லுவோம் என்று மிரட்டியவர் மற்றும் அல்லாஹ்வை கேவலமாக பேசிய ஞானசார தேரர் ஆகியோர் மீது பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்தது தவ்ஹீத் ஜமாத் - SLTJ

ஆர்பாட்டம் செய்வதற்க்காக முஸ்லிம்கள் வந்தால் அவர்களை நெருப்பு வைத்துக் கொள்ளுவோம், அவர்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டல் விடுத்தவர் மீதும் அல்லாஹ்வை கேவலமாக பேசிய ஞானசார தேரர் மீதும் தவ்ஹீத் ஜமாத் சார்பில் நேற்றைய தினம் (07.11.2016) கொழும்பு, கோட்டை பொலிஸ் நிலையத்தில் இரண்டு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

GSP+ வரிச் சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் அரசாங்கத்தை கண்டித்து தவ்ஹீத் ஜமாத் நடத்திய ஆர்ப்பாட்டம் கடந்த 03.11.2016 அன்று கொழும்பில் நடைபெற்றது.

குறித்த ஆர்பாட்டத்தை தடை செய்யுமாறு கோரி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் அல்லாஹ்வுக்கு இரண்டா? மூன்றா? என்றும் இவர்கள் எங்கிருந்து பிறந்தவர்களோ தெரியாது. என்றும் அல்லாஹ்வை கேவலப்படுத்தும் விதமாக பேசியிருந்தார்.

இதே நேரம் கொழும்பு, புறக்கோட்டை, ரயில் நிலையம் முன்பு தவ்ஹீத் ஜமாத் ஆர்பாட்டம் நடத்தினால் அடித்து விரட்டுவோம் என்றும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.

ஞானசார தேரரின் இந்த இனவாத பேச்சினால் தூண்டப்பட்ட சுமார் 10 க்கு உட்பட்ட பெரும்பான்மை இன இளைஞர்கள் தவ்ஹீத் ஜமாத் ஆர்பாட்டம் நடத்திய குறித்த 03.11.2016ம் அன்று புறக்கோட்டை இரயில் நிலையத்திற்கு முன்பு திரண்டு முஸ்லிம்களுக்கு எதிரான தமது இனவாத கருத்துக்களை வெளியிட்டார்கள். அதனை அவர்களே வீடியோ பதிவும் செய்து பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களிலும் பரப்பியிருந்தார்கள்.

அல்லாஹ்வை கேவலப் படுத்தும் விதமாக கருத்து வெளியிட்ட ஞானசார தேரருக்கும், அவருடைய தூண்டுதலினால் "ஆர்பாட்டம் செய்வதற்க்காக முஸ்லிம்கள் வந்தால் அவர்களை நெருப்பு வைத்துக் கொல்லுவோம், அவர்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்துவோம், தேவையான ஆயுதங்களையும் கொண்டு வந்திருக்கிறோம்" என்று பேசியவர் மீதும் தனித் தனியான இரண்டு முறைப்படுகள் செய்யப்பட்டுள்ளன.

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் குறித்த முறைப்பாடு நேற்றைய தினம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

-ஊடகப் பிரிவு
தவ்ஹீத் ஜமாத் - SLTJ,
கொழும்பு

25 கருத்துரைகள்:

அல்லாஹ் மற்றும் ரஸூல் (ஸல்) பற்றி இலிவாக பேசினால் விடவேண்டாம்.
கோலைகளின் பேச்சை கேட்டு அஞ்சவும் வேண்டாம்.
உங்கள் கொள்கை எப்படி இருப்பினும் சமூகம் சார்ந்த செயற்பாடுகள் நல்லது.

This has to be considered as a personal fight between BB Jamath and Thaw Sena. Both Muslims and Buddhists in general have nothing to do on this.

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த கதைதான்! தலையையும் கொடுத்து தடியையும் கொடுத்த நிலையைத்தான் நம்மவர் சிலர் உருவாக்கினர்.

எப்படா முஸ்லிம்களுக்கு எதிராக ஏதாவது பிரச்சினைகளைக் கிளப்பி விடலாம் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கு வழியையும் ஏற்படுத்தி, ஊக்கமருந்தும் கொடுத்து, தாக்கும் அளவுக்குத் தைரியத்தையும் கொடுத்தவர்கள் முஸ்லிம்களில் மிகச் சிறு பகுதியினரான மதத் தலைமைகளாகத் தமமை கூறிக் கொள்வோர், மார்க்கத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டு தாம் செய்வதுதான் சரியென மகிழ்ந்து கொண்டிருப்போர், சந்தர்ப்பவாத அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தறுதலை முஸ்லிம் அரசியல் வியாதிகள்!

why complain to police about those who mocked Allah. Make sincere dua and let Allah take care of the rest.

Yes. You are correct. We should make dua and pray Allah. This type acts will make the situation bad. We will be strong with our eeman first.

Buddhist community have already ignored and rejected BBS but the Muslims trigger them to reconsider. Hopefully BBS goes to the parliament next time- thanks to Muslims and Muslim media.

ஏன் உங்களுடைய புத்தி இப்படிச் செல்கின்றது

எல்லா விடயங்களையும் துஆ பிரார்த்தனை மூலம் மட்டும் சாதித்துக் கொள்ளலாம் என்றில்லை

நம்முடைய முயற்சிகளும் வேன்டும் நபிகளாரும்(ஸல்) அவர்களுடைய துஆவை மட்டும் செய்து விட்டு ஒதுங்க வில்லை அவர்கள் சந்தித்த போர்களையும் கொஞ்சம் நினைவு கூர்ந்து உங்களுடைய பின்னூட்டங்களை இடுங்கள்

வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக ஆமீன்....

Inda Gnanasara wukku ediraha complaints panni pirayosanam illai. 5 neram tolutu vittu ALLAH vidam complaints pannunga. TAndanai nitchayam koduppan.

Agree with nisar and unearth.com, Our people called them for blame us and Islam. We have to ask ISTHIKHFAR, and Ask Du'a for show us right path, for us fist and second for them .

Divine punishment awaits for Gnanasara!

In an unstable politics anything can happen and the same will
happen even in a stable politics based on racist policies.
Racism is a menace and living with it is unending struggle
and for some it could be a big business .

There is no any good Police and judge then Allah. So, we will pray and ask dua with Allah in order to fight against injustice. We cannot have justice from a kafir in complaining of a kafir (BBS). This is something I believe stupidity of SLTJ.

Good brother appreciated. We should fight against injustice but it should not motivate by the name of a group. It's should be done by involving every Muslims. Our prophet (pbuh) did not motivate a single group to war but he motivated to involve every single Muslims to the war. So, SLTJ has done a historical mistake. It's clear. We should not stick to a group but we should unite under one circle Quran and sunnah.

UNEARTH.COM IS A THODAI NADUNGI, JUST IGNORE THIS KIND OF PEOPLE SLTJ UR SO BRAVE AND INTELLIGENT GO ON.

Period of nabi (sal)Many qaafir deny allah. they are gave very hardtime for nabi sal and sahaba.exampke abu jahl uthuba saeiba in front of them what our ghanasara????

சமுதாயமே சரியாக புரிந்புகெள் முட்டையிலிருந்து கேரழி வந்ததா இல்லை கேரழியிலிருந்து முட்டை வந்ததா.

அல்லாஹ்வையும், ரசூலையும் ஏசினார் என்று நீதி கேட்டு காபிர் போலீஸ்காரனிடம் அல்லவா போக வேண்டியாகிவிட்டது? அல்லாஹ்விடம் முறையிட்டால் ஒன்றுமே நடக்காது என்பதை நன்றாக புரிந்து வைத்திருக்கின்றனர்.

(நபியே!) உம் இறைவன் மிகப்பிழை பொறுப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்; அவர்கள் சம்பாதித்த (தீவினைகளைக்) கொண்டு, (உடனுக்குடன்) அவர்களைப் பிடிப்பதாக இருந்தால், நிச்சயமாக அவர்களுக்கு வேதனையை தீவிரமாக்கியிருப்பான்; ஆனால் அவர்களுக்கு ஒரு (குறிப்பிட்ட) தவணை உண்டு; அப்போது அவனையன்றி புகலிடத்தைக் காணவே மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 18:58)

இந்த அறிவு குன்றிய எஸ்.எல்.டி.ஜே பெண்களையும் சிறுவர்களையும் பாதைக்கு இலுத்து ஆர்பாட்டம் செய்ய எங்கிருந்து ஆதாரம் கொண்டு வந்தார்ளோ தெரியாது.

SLTJ இன் இந்த போராட்டத்துக்கு உடன்பாடு இல்லை.
உங்கள் கூற்று பிழையானது bro போருக்கு கூட்டி கொண்டு செல்லலாமா bro ? அந்த காலத்தில் போர்முனைக்கு ஏன் கூட்டிக்கொண்டு போனார்களோ தெரியாது. போரில் வீர்ர்களை ஆரவாரப்படுத்த பெண்களை கூட்டிக்கொண்டு போனது , பெண்கள் போரில் கலந்து கொண்டது ஒன்று உங்களுக்குத்தெரியாதா இல்லாவிட்டால் Nizar போல் தவ்ஹீத் ஜமாத் எது செய்தாலும் அது பிழையென்ற மனப்ப்பாங்குள்ளவரா?

Post a Comment