October 05, 2016

யாழ்ப்பாண முஸ்லிம் சமுதாயத்தின் தலைசிறந்த கல்விமான் MM குத்தூஸ்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த எம்.எப்.எம் இக்பால் ஆகிய நான் அண்மையில்   சுகக்குறைவுடன் இருக்கும் எமது முன்னாள் ஒஸ்மானியா கல்லூரி அதிபர் எம்.எம்.குத்தூஸ் அவர்களை சந்தித்த போது பரிமாறப்பட்ட விடயங்கள்

யாழ். முஸ்லிம் சமுதாயத்தின் தலை சிறந்த கல்விமான் எம்.எம். குத்தூஸ். யாழ்ப்பாணம், சோனகத் தெருவைச் சேர்ந்த முஹம்மது முஹிதீன் - மைமூன் தம்பதியினருக்கு 1932 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 2ஆம் திகதி அன்று  5 மகன்களும் 5 மகள்களையும் கொண்ட குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாக பிறந்தவர்தான் குத்தூஸ் ஆவார்.குத்தூஸ் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம், மன்ப உல் உலூம் பாடசாலையிலும் 6,7,8 ஆம் வகுப்புகள் யாழ்ப்பாணம், பெருமாள் கோவிலடி, சன்மார்க்க போதனா பாடசாலையிலும்,ளுளுஊஇ ர்ளுஊ வகுப்புகள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். மாலையில் குர்ஆன் மதரஸா வகுப்புகளுக்கு செல்வார். சிறு வயதிலேயே அழகான முறையில் குர்ஆன் ஓதக் கூடியவராகவும் இருந்தார்.

சிறு வயதிலேயே கல்வியில் ஆர்வம் காட்டிய இவர் பள்ளிவாசலுக்கு சென்று தொழுகையை நிறைவேற்றக் கூடியவராகவும் இருந்தார். குத்தூஸ் அவர்கள் யாழ்ப்பாணம், இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் போது யாழ். சோனகத் தெருவில் திண்ணைகளில் இளைஞர்கள் கூடி இருந்து கொண்டு பள்ளி வாசலுக்கும் செல்லாமல் பீடியும் அடித்துக் கொண்டிருந்ததை பார்த்து கவலைப்பட்டு, அந்த இளைஞர்களை ஒன்று கூட்டி 'யாழ்ப்பாண முஸ்லிம் வாலிபர் இயக்கம்' என்ற ஓர் அமைப்பை உருவாக்கி மன்ப உல் உலூம் பாடசாலையில் வாரத்திற்கு ஒருமுறை மாலையில் புலவர் அப்துல்லாஹ் லெப்பை (முன்னாள் யாழ். தப்லீஹ் ஜமாஅத் அமீரான பஷீர் மாஸ்டரின் வாப்பா)

அவர்களைக் கொண்டு இஸ்ஸாமிய போதனை வகுப்புகளை நடாத்தினார். அந்த இளைஞர்கள் ஒழுங்காக பள்ளிவாசலுக்கு சென்று தொழுகையை நிறைவேற்றக் கூடியவர்களாக மாறினார்கள். சமூகத் தொண்டு செய்யக் கூடியவர்களகவும் இருந்தனர். இதே நேரத்தில் 'யாழ்ப்பாண முஸ்லிம் மாணவர்கள் சங்கம்' ஒன்றை நிறுவி மாணவர்களுக்கு நல்வழி காட்டக் கூடியவராகவும் இருந்தார். 

குத்தூஸ் அவர்கள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ர்ளுஊவகுப்பில் சித்தியடைந்ததும் வழக்கறிஞராக வர விரும்பி அதற்கான ஆயத்தங்களை செய்தார். அவரது தாயாரான மைமூன் அவர்கள் மகனே! வேண்டாம் உனக்கு அந்த சட்டப்படிப்பு. நிறைய பொய்யெல்லாம் சொல்ல வேண்டிவரும். எனவே உடனே கிளம்பு தமிழ் நாட்டிற்கு என்று கூறியதும். தாயின் சொல்லை தட்டாத குத்தூஸ் அவர்கள் தனது மேற்படிப்பிற்காக திருச்சி ஜமால் முஹம்மது கொலிஜ்ஜில் சேர்ந்தார். அங்கு படித்து டீஃயு பட்டம் பெற்றார்.

டீஃயு பட்டம் பெற்றதும் நாடு திரும்பினார். 1957இல் யாழ். இந்துக் கல்லூரியில் அரச நியமனமற்ற ஆங்கில ஆசிரியராகவும், 1958 இல் கொழும்பு ஸாஹிரா கல்லூரியிலும் அரச நியமனமற்ற ஆங்கில ஆசிரியராகவும் பணியாற்றினார்.
குத்தூஸ் அவர்கள் யாழ் இந்துக் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றும் போது, மீரானியா கல்லூரி இரவுப் பாடசாலையிலும் சிறிது காலம் ஆங்கில ஆசிரியராகவும்பணியாற்றியுள்ளார்.

குத்தூஸ் அவர்கள் 28-01-1960இல் தாய்மாமன் முறையில் மச்சியான நூர்ஜஹான் என்பவரை திருமணம் செய்தார்கள். அவர்களுக்கு 6 பெண்பிள்ளைகளும் 1ஆண் மகனும் முத்தான பிள்ளைகளாக கிடைத்தனர். குத்தூஸ் அதிபர் அவர்களுக்கு 7 பிள்ளைகள் 23பேரப்பிள்ளைகள். பூட்டப்பிள்ளைகளாக ரீஹா, ஐமன் என இருவருமாவார்கள்.

குத்தூஸ் அவர்கள் 1960 இறுதிப் பகுதியில் கொம்பனித் தெரு அல் இக்பால் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு அதிபராக நியமிக்கப்பட்டார். நியமிக்கப்படும் போது அந்த பாடசாலையின் பெயர் அரசினர் முஸ்லிம் மஹா வித்தியாலயம் என்றே இருந்தது. குத்தூஸ் அவர்கள் அதிபராக இருந்த காலத்தில்தான் அல்-இக்பால் மஹா வித்தியாலயம் எனப் பெயர் பெற்றது. தற்போது அந்தப் பாடசாலை அல்இக்பால் பாலிகா மஹா வித்தியாலயம் என மாறியுள்ளது.அல்இக்பால் மஹா வித்தியாலயத்தில் ஐந்தாண்டுகள் சிறப்பான முறையில் குத்தூஸ் அவர்கள் அதிபராக பணியாற்றினர். 1965இல் குத்தூஸ் அவர்கள் யாழ். ஒஸ்மானியா கல்லூரியில் அதிபராக நியமனம் பெற்றார். யாழ். ஒஸ்மானியா கல்லூரியில் குத்தூஸ் அவர்களின் காலத்தில்தான் தொலைபேசி, றோனியோ மெஷின் கிடைத்தன. குத்தூஸ் அதிபர் காலத்தில்தான் கிளார்க், கண்காணிப்பாளர், பியோன்,விஞ்ஞான ஆய்வு கூட உதவியாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். பூரணப்படுத்தப்படாத ஒஸ்மானியா கல்லூரி கட்டிடங்கள்பூரணமடைந்தும். மஃமூத் மண்டபம் உருவானதும் இவரது காலத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஒஸ்மானியா கல்லூரியில் குத்தூஸ் அதிபரின் காலத்தில் தான் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். பல மாணவர்கள் இராணிச் சாரணர்களாக கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

குத்தூஸ் அவர்கள் யாழ். ஒஸ்மானியா கல்லூரியின் அதிபராக இருந்த காலம் பொற்காலம் எனலாம். பூரணப்படுத்தப்படாத கட்டிடங்கள் பூரணப்படுத்தி அழகான மஃமூத் மண்டப கட்டித் திறப்பு விழாவிற்கு வருகை தந்த முன்னாள் கல்வி அமைச்சர்அல்ஹாஜ் பதியுத்தீன் மஃமூத் அவர்களுக்கு ஒஸ்மானியா கல்லூரியின் வளர்ச்சியில் பெரும் பங்குண்டு.

1992 இல் குத்தூஸ் அவர்கள் 'பிரதி கல்விப் பணிப்பாளர் நாயகம்' பதவிக்கு உயர்த்தப்பட்டார். பிரதி கல்விப் பணிப்பாளர் பதவி வகித்த முதலாவது முஸ்ஸிம் குத்தூஸ் அவர்களே என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்த விடயமானது யாழ். முஸ்ஸிம்களை பெருமைப்படுத்துகிறது. 1992 இல் குத்தூஸ் அதிபர் அவர்களுக்கு ஒய்வுபெறும் நிலையிலிருந்து பதவி உயர்வுடன் மேலதிக மூன்று வருட பதவி நீடிப்பும் கிடைத்தது.

குத்தூஸ் அதிபர் அவர்கள் 02.06.1995இல் ஒய்வுபெற்றார்.ஒய்வு பெற்ற பின்னர் ரத்மலானையில் இயங்கிய இஸ்லாமிய இளைஞர் அநாதை நிலையத்தில் பணிப்பாளராக 5வருடங்கள் பணி புரிந்தார். அந்த சந்தர்ப்பத்தில் தான் ஹஜ் செய்தார். அல்ஹாஜ் குத்தூஸ் ஆனார். அதனை தொடர்ந்து வவுனியா வைரவ புளியங்குளத்தில் இயங்கும் 'சேவா லங்கா' நிறுவனத்தில் ஆங்கில சம்பந்தமான விடயங்களுக்கு பணிப்பாளராக 4 வருடங்கள் பணி புரிந்தார்.

யாழ். முஸ்லிம் மாணவர்களின் கல்வி மறுமலர்ச்சிக்கு அரும்பணியாற்றிய ஒரு மாமேதை என்றே குத்தூஸ் அதிபரைக் குறிப்பிடுதல் வேண்டும். ஆளுமைத் திறனிலும் நிர்வாகத் திறமையிலும் கைதேர்ந்த குத்தூஸ் அதிபர் யாழ் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்பைச் செய்தார். முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சி, கல்வி வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது என்பதை உணர்ந்த குத்தூஸ் அதிபர் பலதரப்பட்ட இன்னல்களுக்கு மத்தியில் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியை தலைசிறந்த கல்லூரியாக மாற்றினார்.

குத்தூஸ் அதிபரது பாசறையில் பயின்ற மாணவர்கள் யாழ். ஒஸ்மானியா கல்லூரி, கம்பளை ஸாஹிறா கல்லூரியில் பயின்ற மாணவர்கள் இன்று உயர் தொழில்களில் மட்டுமன்றி தொழிலதிபர்களாகவும் பொறியியலாளர்களாகவும் விரிவுரையாளர்களாகவும் வைத்தியர்களாகவும் அதிபர்களாகவும் ஆசிரியர்களாகவும் கடமையாற்றுகின்றனர். பெருமைப்பட வேண்டிய விடயமாகும். தற்போது சுக குறைவுடன் 84 வயது கடந்த நிலையில் வவுனியா, பட்டாணிச்சூரில் தனது மகள் வீட்டில் வசித்து வருகின்றார். குத்தூஸ் அதிபர் அவர்கள் பூரண சுகத்துடன் நீடூழி வாழ அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றோம்.ஆமீன்.

அல்ஹாஜ் எம்.எப்.எம். இக்பால் (ஜே.பி)
யாழ்ப்பாணம்.

5 கருத்துரைகள்:

May Allah reward him...I came to know how helped many teachers ...
While he was Education Director working among Sinhalese he helped many Moulavi who passed teaching examination.when they went his office he helped them to do all works as soon as possible and he sent them. Letter of appointment to them and he told them what to do..

He was a professional man we really like him today..
Excellent manners and kind hearted man ..and helping minded
May Allah reward him Jennath Firdaus

அதிபர் குத்தூஸ் சேர் உரையாற்றும் போது ஆங்கிலம் கலந்தே பேசுவார் அதில் ஆங்கிலத்தை ஓரளவு கற்றவர்கள் நாம் மறந்திருந்த குத்தூஸ் பிரின்ஷிபலை ஞாபகப்படுத்திய சகோ.இக்பால் அவர்களுக்கு நன்றி....

அல்லாஹ் அவருக்கு சுகத்தோடு கூடிய நீண்ட ஆயுளையும் நாளை மறுமையில் சுவனபதியில் உயர்வான இருப்பிடத்தையும் கொடுத்தருள்வானாக.

இவா் கம்பளை சாஹிரா கல்லுாரி அதிபராகவும் கண்டி மாவட்ட பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் இருந்தாா்.மடவளையிலும் சிறிது காலம் குடி இருந்து அயலவர்களது நன்மதிப்பை பெற்ற அதிகாரி என்பதற்கு அப்பால் ஒரு சிறந்த தந்தைக்கான ஸ்தானத்திலும் ஒரு வழிகாட்டியாகவும் இருந்தார்.அவா் நீடூழி வாழ வாழ்ததுகிறேன்.

Post a Comment