October 06, 2016

புனித பூமி பிர­தே­சத்தில் வாழும், முஸ்லிம்களின் நிலை என்­ன­வாகும்..?

-விடிவெள்ளி ARA.Fareel-

மாதம்பை முஸ்­லிம்­களின் காணி சுவீ­க­ரிப்பு விவ­காரம் தொடர்பில் பரி­சோ­தனை செய்து விசா­ர­ணை­களை மேற்­கொண்டு அறிக்­கை­யொன்­றினைத் தனது அமைச்­சுக்கு அனுப்பி வைக்­கு­மாறு பாரிய நகர அபி­வி­ருத்தி மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க மாதம்பை பிர­தேச செய­லா­ளரைக் கோரி­யுள்ளார்.

இந்த காணி சுவீ­க­ரிப்பு மேற்­கொள்­ளப்­பட்டால் புனித பூமி பிர­தே­சத்தில் வாழும் முஸ்லிம் குடும்­பங்­களின் நிலை என்­ன­வாகும் எனவும் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க பிர­தேச செய­லா­ள­ரிடம் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார்.

நேற்று மதியம் மாதம்பை முஸ்­லிம்­களின் காணி சுவீ­க­ரிப்பு விடயம் தொடர்­பாக மாதம்பை ஜாமியுல் அல் பரீயா (Fariyya) ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பி­னர்கள் மற்றும் மாதம்பை கிரா­மத்தின் புத்­தி­ஜீ­விகள் குழு­வொன்று அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­கவை அவ­ரது அமைச்சில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யது.

முஸ்­லிம்­களின் காணி சுவீ­க­ரிப்பு விட­யத்தை கேட்­ட­றிந்த அமைச்சர் சம்­பிக்க உடனே மாதம்பை பிர­தேச செய­லா­ளரைத் தொடர்­பு­கொண்டு குறிப்­பிட்ட கோரிக்­கையை விடுத்தார்.

காணி சுவீ­க­ரிப்பு விடயம் மற்றும் புனி­த­பூமி வர்த்­த­மானி அறி­வித்தல், முஸ்­லிம்­களின் பூர்­வீகம் உட்­பட இவ்­வி­வ­காரம் தொடர்­பான பூரண விப­ரங்­களை உள்­ள­டக்கி மாதம்பை பிர­தேச செய­லா­ள­ருக்கு அறிக்­கை­யொன்­றினைச் சமர்ப்­பிக்­கும்­ப­டியும் தன்னைச் சந்­தித்த மாதம்பைப் பிர­தேச பிர­தி­நி­தி­க­ளிடம் அமைச்சர் சம்­பிக்க வேண்­டுகோள் விடுத்தார்.

இவ்­வி­வ­கா­ரத்தை அமைச்­சர்கள் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதி­யுதீன் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முஜிபுர் ரஹ்மான் எம்.எச்.எம்.நவவி ஆகியோர் ஜனா­தி­ப­தி­யி­னதும் பிர­த­ம­ரி­னதும் கவ­னத்­திற்கும் கொண்டு வரு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.எம்.நவவி ஸ்தலத்­துக்கு நேரடி விஜ­யத்­தினை மேற்­கொண்டு நிலை­மையை அவ­தா­னித்­துள்ளார்.

இதே­வேளை பொலிஸ் பிரி­வினர் நாளை வெள்­ளிக்­கி­ழமை முஸ்­லிம்கள் தொழு­கையின் பின்பு எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கத் திட்­ட­மிட்­டுள்­ள­னரா என்­பது தொடர்பில் விசா­ரணை செய்­துள்­ளனர். அவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­மாட்­டாது என பதி­ல­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

பள்­ளி­வாசல் பரி­பா­லன சபை உறுப்­பினர் நுஸ்ரத் மஹ்மூத்
மாதம்­பையில் முஸ்­லிம்­களின் காணி சுவீ­க­ரிப்பு விடயம் ஒரு திட்­ட­மிட்ட செய­லாகும். பல தசாப்த கால­மாக பெரும்­பான்மை சமூ­கத்­துடன் நல்­லு­ற­வுடன் வாழ்ந்த முஸ்­லிம்­களை வேறு­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கையே இது என மாதம்பை ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பினர் நுஸ்ரத் மஹ்மூத் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;
இப்­ப­கு­தியில் இன முறுகல் ஒன்­றினை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. முஸ்­லிம்­களின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ளது. முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை தேசிய ஷூரா சபை என்­ப­னவும் ஒன்­றி­ணைந்து பிரச்­சி­னைக்குத் தீர்வு பெற்­றுத்­தர வேண்டும் என்றார்.

உலமா சபையின் பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.சி.அகார் மொஹமட்
அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பிரதித் தலைவர் ஏ.சி.அகார் மொஹ­மட்டை விடி­வெள்ளி தொடர்பு கொண்டு கருத்து வின­வி­ய­போது மாதம்பை பகு­தியில் முறுகல் நில­வா­தி­ருப்­ப­தற்­கா­கவும் சமா­தான சூழ்­நிலை நில­வு­வ­தற்­கா­கவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றார்.

நேற்று மதியம் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுடனான கலந்துரையாடலில் மாதம்பை ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள் எஸ்.எம்.அரபாத், எஸ்.எம்.எம்.அனீஸ், ஜே.எஸ்.எம்.ரிப்கான் மற்றும் எஸ்.எம்.ஜே.அமீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 கருத்துரைகள்:

சிறுபான்மையினர் எதிர்கொள்ளம் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளம் நெருக்கடிகளையும் ஆராயவென யூ என் ஓ வின்விஷேட பிரதிநிதி இலங்கை வந்து ஒக்டோபர் பத்தாம் திகதி முதல் இருபதாம் திகதி வரையில் இருந்து.பல பகுதிகளக்கு சென்று பிரச்சினைகளை ஆராய்ந்து உண்மைநிலை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார்.எனவே இதுவிடயமாக முஸ்லீம் மக்கள் இன்று எதிர்கொள்ளும் சகல பிரச்சினைகளையும் முன்வைக்க சந்தர்ப்பமாகும் இன்ஷா அல்லாஹ இது விடயமாக சகல முஸ்லீம் அமைப்புக்களம் தூரநோக்குடன் ஒன்றுபட்டு செயற்படுங்கள் எமது தூய முயற்சிகளை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக ஆமீன்

Post a Comment