Header Ads



தொலைபேசி ஒட்டுக் கேட்டல், தொடர்பில் அரசாங்கம் மௌனம்

தொலைபேசி ஒட்டுக் கேட்டல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில நீதவான்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி கட்சி கோரியுள்ளது.

தொலைபேசி ஒட்டுக் கேட்டல் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் மௌனம் காத்து வருவதாகவும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் பொய்யானால் அது குறித்து தமது நிலைப்பாட்டை அரசாங்கம் தெளிவாக வெளிப்படுத்த வேண்டுமெனவும் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த குற்றச்சாட்டு குறித்து நீதவான் முறைப்பாடு செய்தாலே காவல்துறையினர் விசாரணை நடத்தப்பட முடியும் எனவும்  நீதவான்கள் எவரும் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு எதனையும் செய்யவில்லை எனவும் பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.