Header Ads



'முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை குறைக்க, நல்லாட்சி அரசு இனவாதமாக செயற்படுவதாக முறைப்பாடு'

உத்தேச தேர்தல் திருத்தச்சட்டம் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை வெகுவாக குறைக்கும் திட்டம் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் இப்போது கூறுவது அவரது மிகவும் தாமதமான அரசியல் ஞானத்தை காட்டுகிறது என முஸ்லிம் உலமா கட்சி தெரிவித்துள்ளது.

இது பற்றி அக்கட்சி தெரிவித்ததாவது,

தேர்தல் திருத்தச்சட்டம், அரசியல் யாப்பு திருத்தம் என்;பதல்லாம் நாட்டின் தற்போதைய முக்கிய பிரச்சினைகள் அல்ல என்பதே உலமா கட்சியின் நிலைப்பாடாகும். அத்துடன் தொகுதிவாரி தேர்தல் என்பது அவசியமற்றது என்றும் விகிதாசார தேர்தல் முறையே அனைவருக்கம் நல்லது என்றும் மஹிந்த ராஜபக்ஷ காலம் முதல் உலமா கட்சி சொல்லி வருகிறது. ஆனால் மஹிந்த காலத்தில் தேர்தல் திருத்தம் முதலில் கொண்டு வரப்பட்ட போது முஸ்லிம் காங்கிரஸ் அதற்கு ஆதரவாக கையை உயர்த்தியது. பின்னர் நல்லாட்சியிலும் சில மாற்றங்களுடன் இச்சட்டம் கொண்டு வரப்பட்ட போது பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு அதற்கு கை உயர்த்தி விட்டு இப்போது அக்கட்சியின் தலைவர் மூக்கால் அழுவது மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும்.

எம்மை பொறுத்த வரை வட்டார தேர்தல் என்பது வேட்பாளருக்குரிய தேர்தல் செலவை குறைக்கும் என்ற நன்மையை விட வேறு நன்மை கிடையாது. அத்துடன் அந்த வட்டாரத்தில் செல்வாக்குள்ள கட்சியே வெற்றிபெறக்கூடிய நிலைதான் உண்டே தவிர சமூக சேவையாளர்கள் வெல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் மிக குறைவு. பணமும், பதவியுமே தேர்தலின் வெற்றியை தீர்மாணிக்கும் இக்காலத்தில் வட்டார தேர்தல் முறையில் சாதகங்களை விட பாதகங்களே அதிகம்.

அது மட்டுமல்லாமல் தென்னிலங்கை முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை வேண்டுமென்றே குறைக்கும் வகையில் நல்லாட்சி அரசு எல்லை வகுப்பதில் இனவாதமாக செயற்படுவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக கொழும்பு மாவட்டம் மற்றும் கண்டி மாவட்டத்தின் அக்குறணை, தெல்தெனிய போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்களின் பிரதிநிதித்தவத்தை குறைக்கும் வகையில் அவர்களின் வட்டாரங்களை சிங்கள கிராம சேவகர்களின் பிரதேசங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாக அம்மக்கள் உலமா கட்சியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்த ஆபத்துக்களை சிந்திக்காமல் பணத்துக்காக நல்லாச்சிக்கு ஆதரவளித்ததுடன் அதன் தேர்தல் சீர் திருத்தத்துக்கும் கண்மூடித்தனமாக ஆதரவளித்து விட்டு முஸ்லிம் காங்கிரஸ் இப்போது ஒப்பபாரி வைத்துக்கொண்டு திரிகிறது.

வட்டார முறைப்படி தேர்தல் போன்ற கூத்துக்களை விட்டு விட்டு இருக்கின்ற விகிதாச தேர்தல் முறைப்படி உள்ளுராட்சி தேர்தலை நடத்த வேண்டும் என அரசாங்கத்துக்கு வெளிப்படையாக சொல்ல முடியாத அளவு முதுகெலும்பற்ற கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது. அரசும் மஹிந்த ராஜபக்ஷவின் கட்சி அமோக வெற்றி பெறும் என பயந்து வட்டார எல்லைப்பிரச்சினைகளை காட்டி உள்ளுராட்சி தேர்தலை இழுத்தடிக்கிறது.

ஆகவே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அரசிடம் ஒரு முகமும் மக்களிடம் இன்னொரு முகமும் காட்டிக்கொண்டிருக்காமல் அரசியல் யாப்பு திருத்;தமோ, தேர்தல் முறை மாற்றமோ இப்போதைக்கு தேவையில்லை என தைரியமாக சொல்ல வேண்டும்.

6 comments:

  1. முஸ்லீம் அரசியல்வாதிகளின் ஆட்டத்துக்குகாரணமே வீதாசார தேர்தல் முறையே ததொகுதி முறை தேர்தல் முறைவரவேண்டும் அப்போது தான் ரிஷாத் போன்றவர்கள் எம்பிரதேசங்களுக்கு வந்து எம்வளங்களை அபகரிக்க மாட்டார்கள்

    ReplyDelete
    Replies
    1. Honourable Minister Rishad Badiudheen does good works to the people irrespective of religion or race.

      Proportionate electoral system is far better to the minorities.

      Delete
  2. எவன் எனோ நம் இடங்களுக்ககு வந்து நாட்டாமை செய்யமாட்டான்.விதாசரதேர்தல் நீக்கபட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. Proportionate electoral system is far better to minorities.

      Delete
  3. விதாசார தேர்தல் என்பது ஜனநாயகதிற்கு விரோதமானது .குறிப்பாக ஒரு தேர்தல்மாவட்டத்தில் ஒருகுறுகிய பிரதேசத்தில் வாக்குகளை பெற்று முழுதேர்தல்மாவட்டத்தையும் கட்டுப்படுத்த முடிகிறது.மட்டக்களப்பு,வன்னி தமிழர்கள் இதனால் பெரிதும் பாதிப்படைகின்றனர்.

    ReplyDelete
  4. Sri Lanka is a democratic country.

    Its constitution includes the Proportionate Electoral System.

    It implements democratically.

    There is no need for hue and cry.

    ReplyDelete

Powered by Blogger.