Header Ads



இலங்கை வந்த விமானத்தில், மலசல கூடத்திலிருந்து சடலம் மீட்பு

டுபாயில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த பிரித்தானியா பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பறந்து கொண்டிருந்த விமானத்தில் குறித்த பிரஜை நேற்று -19- உயிரிழந்ததாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலா விசா மூலம் இலங்கை வந்த பிரித்தானிய நாட்டை சேர்ந்த ஜோன் ஸ்டுவட் பின்கல் என்ற 72 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே.650 என்ற விமானத்தில் நேற்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்குவதற்காக பறந்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த பிரித்தானிய பிரஜையை விமான ஆசனத்தினுள் நீண்ட நேரம் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குழப்பமடைந்த விமான ஊழியர்கள், அவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவர் உயிரிழந்த நிலையில் விமான மலசலகூடத்தில் கண்டுபிடிக்கப்பட்டார்.

1 comment:

  1. இந்த இளவரசர் குடும்பமே குற்றவாளியின் குடும்பத்தின் கால்களில் விழுந்து கதறிப் பார்த்தது. மன்னிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அப்படி ஒரு வேளை அவர்கள் மன்னித்திருந்தால் தப்பித்து இருந்திருப்பான். கற்பழிப்பிற்குக்கூட நாலு பேர் சாட்சி வேண்டும் என்கின்ற ஷரியத் மிகமிக ஆபத்தானது. ஒருவன் தவறிழைத்திருக்கிறான். அவனுக்கு தண்டனை கிடைத்துள்ளது. அதில் என்ன பெருமை வேண்டி கிடக்கிறது? எங்க ஊர் சிறைகளில் பணக்காரனும் இருக்கிறான். பிச்சைக்காரனும் இருக்கான். அதற்காக நாம பெருமைப்பட்டுக்கவா முடியும்?

    ReplyDelete

Powered by Blogger.