October 17, 2016

அளுத்­கம முஸ்லிம், வர்த்தகரின் ஆதங்கம்

-விடிவெள்ளி ARA.Fareel-

அண்­மையில் அளுத்­க­மையில் தீயில் எரிந்து சாம்­ப­ரா­கிய அளுத்­கம 'மல்­லிகாஸ்' ஆடை விற்­பனை நிலை­யத்தில் தீ ஏற்­பட்­ட­தற்­கான கார­ணத்தைக் கண்­ட­றி­வதில் வேண்­டு­மென்றே கால­தா­மதம் செய்­யப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தீ விபத்து ஏற்­பட்டு சில நாட்கள் கடந்த பின்பு பொலி­ஸா­ரினால் இர­சா­யனப் பகுப்­பாய்வு செய்­வ­தற்­காக சேதத்­துக்­குள்­ளான விற்­பனை நிலை­யத்தின் மாதி­ரிகள் எடுத்துச் செல்­லப்­பட்­டாலும் இரு வாரங்கள் கடந்து விட்ட நிலையில் இது­வரை இர­சா­யனப் பகுப்­பாய்வு அறிக்கை வெளி­யி­டப்­ப­ட­வில்லை என மல்­லிகாஸ் ஆடை விற்­பனை நிலைய உரி­மை­யாளர் எம்.ஜே.எம். சம்­சுதீன் தெரி­வித்­துள்ளார்.

இர­சா­யனப் பகுப்­பாய்வு அறிக்கை ஓரிரு தினங்­களில் வெளி­யி­டப்­படும் என அளுத்­கம பொலிஸார் தெரி­வித்­தி­ருந்­தாலும் அது வேண்­டு­மென்றே கால­தா­ம­தப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. அதனால் தீ விபத்து சம்­பவம் தொடர்பில் தனக்குச் சந்­தேகம் நில­வு­வ­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார். 

பொலிஸார் எனது வாக்­கு­மூ­லத்­தையும் பதிவு செய்­தார்கள். இவ்­வி­பத்தில் எனக்கு சந்­தேகம் நில­வு­வ­தாகத் தெரி­வித்­துள்ளேன். இந்த தீ விபத்து ஏற்­பட்­டுள்­ளதால் விற்­பனை நிலை­யத்தில் தொழில் புரிந்­த­வர்­களில்15 பேர்­க­ளி­னது குடும்­பங்கள் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளன.

மல்­லிகாஸ் விற்­பனை  நிலையம் ஏற்­க­னவே இரு தட­வைகள் இன­வா­தி­களால் தீ வைக்­கப்­பட்­டது.

இந்த விபத்து மூன்­றா­வது தட­வை­யாக ஏற்­பட்­டுள்­ளது. அதனால் இதில் எனக்கு சந்­தேகம் ஏற்­பட்­டுள்­ளது. மூன்­றா­வது தடவை ஏற்­பட்­டுள்ள தீ விபத்து தொடர்­பான விசா­ர­ணைகள் கால தாம­தப்­ப­டுத்­தப்­ப­டு­வது எனக்கு சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

மூன்­றா­வது தடவை ஏற்­பட்ட தீ விபத்­தினால் மொத்­த­மாக எனக்கு 7 கோடி ரூபா நஷ்­ட­மேற்­பட்­டுள்­ளது.

எனவே இது தொடர்பில் விசாரணைகளைத் துரிதப்படுத்தி தீ ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்டறிவதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகளும் சமூக நல அமைப்புகளும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்றார்.

1 கருத்துரைகள்:

"The Muslim Voice" wishes to repeat this call - Insha Allah. Where is the loud mouthed Azad Sally, where is the "Thustakoneya, Sathyabawaya, janathawege prajathandrawaadaya venuwen kriyaa korana" deceptive Minister Faizer Mustapha, the ACMC and SLMC - monkey political party leaders? WHY HAS THE GOVERNMENT NOT SET-IN MOTION A PRESIDENTIAL COMMISSION OF INQUIRY INTO THE ALUTHGAMA/BERUWELA WHICH TOOK PLACE ON SUNDAY JUNE 15th.,2014.
Muslims in Sri Lanka do NOT have a voice - a POLITICAL VOICE for that purpose. The SLMC is dead. The ACMC is busy making money, the Muslim politicians stooging the UNP are ONLY interested in their personal benefits. The ungrateful Muslim politicians who benefited the most from Mahinda Rajapaksa, Basil Rajapaksa and Gotabaya Rajapaksa are now stooging the Yahapalana government and enjoying their best with their kith and kin and henchaiyas, by selling the VOTE BANK of the Muslims who have been deceived lock-stock-and-barrel. The Muslim Civil Society and Muslim Media organizations in Sri Lanka land their leaders will stage dramas by releasing "press statements" because all of them have been well taken care by the Yahapalana government and the foreign interests who are giving them large amounts of funding to keep their mouth shut. Like what happened in Aluthgama and Beruwela, Maharagama and Dambulla, they all will COVER up the TRUTH and the Muslims will be told a "LONG STORY. WHY IS THERE NO TRANSPARENCY ABOUT THE FUNDS RECEIVED BY MOULAVI SUFIYAN IN THE MONTHS AND YEARS of AFTERMATH OF THE LTTE DRIVING THE MUSLIMS OF THE NORTH IN 24 hours. WHY DID NOT MOULAVI SIFIYAN ADDRESS THESE ISSUES WHEN HE WAS A CONFIDANT WITH DOUGLAS DEAVANANDAN OF THE EPDP? Why is Moulavi Sufiyan trying to praise UNSCRUPULOUS and DISHONEST DECEPTIVE MUSLIM POLITICIANS now? It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the comming future, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

Post a Comment